இணைய வழியில் கல்வி சேவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 21, 2020

இணைய வழியில் கல்வி சேவை

சென்னை, மே 21- கலைத் துறையில் திரைப்படம், தொடர்பு கொள் திறன், உருவாக்கும் திறன் ஆகிய துறைகளில் பயிற்சிகளை வழங்கி வரும் ஆசியாவின் முன்னணி கல்வி நிறுவனமாகிய - மும்பையைச் சேர்ந்த, விஸ்ட்லிங் உட்ஸ் இன்டர்நேஷனல், வரவிருக்கும் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்காக - தேர்வுகளை மே 25 முதல் 29 வரை இணைய வழியில் நடத்த உள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவம் இக்கல்லூரியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள், வரும் மே 22 முதல் 26 வரையிலான தேதிகளில் இதனைப் பூர்த்தி செய்து, விண்ணப்பித்து,  தேர்வினை எழுத வேண்டும்.


டிப்ளமோ, பி.ஏ.,  பி.பி.ஏ.,  பி.எஸ்சி.,  முதுநிலை டிப்ளமோ   உள்ளிட்ட முழுநேரப் பயிற்சிகள் இக்கல்வி நிறுவனத்தால் இணைய வழியாகவே கற்றுத்தரப்பட உள்ளது. 


முதல் கோவிட்-19 ஆன்டிபாடி சோதனை அறிமுகம்


சென்னை, மே 21- சென்னை, சிபிசி டயக்னோஸ்டிக்ஸ், சார்ஸ் கோவ்-2 அய்ஜிஎம் மற்றும் சார்ஸ் கோவ்-2 அய்ஜிஜி  அய் இந்தியாவில் அறிமுகப் படுத்தியுள்ளது. இவை இரண்டும் சி.இ.-அங்கீகாரம் பெற்ற மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்  ஒப்புதல் பெற்ற, இதுபோன்ற வகைகளில் முதலாவது ஆன்டிபாடி சோதனையாகும்.


ஷென்சென்-அடிப்படையிலான ஒய்எச்எல்ஓ-பயோடெக் கோ லிமி டெட்டால் உருவாக்கப்பட்ட, சிஎல்அய்ஏ-அடிப்படையிலான சோதனை கள், முழு தானியங்கி அனலைசரில் இயங்குகின்றன. அனலைசர் மாட லைப் பொறுத்து, ஒரு ஆய்வகத்தால், ஒரு கருவியில் ஒரு நாளுக்கு 1000 முதல் 2000 முடிவுகளை தெரிவிக்க முடியும். சமூகப் பரிசோதனை மற்றும் கண் காணிப்பில் ஆன்டிபாடி சோதனைகள் மிகவும் மதிப்பு மிக்கவையாகும் என சிபிசி டயக்னோஸ்டிக்ஸின் நிர்வாக இயக்குனர்  கைலாஸ்நாத் தெரிவித்துள்ளார். 


தனிமனித இடைவெளியுடன் உணவு வழங்கல்


கோயம்புத்தூர், மே 21 உணவு வழங்கும் சேவைக்காக காண்டெக்ட்லெஸ் டேக்அவே அறிமுகப்படுத்துவதன் மூலம் குழு உறுப்பினர்களையும் வாடிக்கையாளர்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான முயற்சி களை கே.எஃப்.சி நிறுவனம் இரட்டிப்பாக்குகிறது. இது ஒரு ஆர்டர் செய்யும் அனுபவமாகும். இதில் வாடிக்கையாளர் கேஎஃப்சி ஆப், வலைத்தளம் அல்லது எம்சைட் ஆகியவற்றில் ப்ரீபெய்ட் ஆர்டரை செய்யலாம், மேலும் முன் தீர்மானிக்கப்பட்ட நேரத்தில் ஆர்டரை எடுக்க உணவகத்திற்குள் செல்லலாம். புதிய சேவை நுகர்வோருக்கு முற்றிலும் பணமில்லா மற்றும் தொடர்பு இல்லாத அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.


தனிமனித  இடைவெளியின் அனைத்து விதிமுறைகளையும் பராமரிக் கும் ஒரு சிறிய சமையலறை குழுவுடன் நாங்கள் செயல்பட முடியும் என இந்த  கே.எஃப்.சி. நிறுவன தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி மோஸ் சோப்ரா தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment