காணொலி வழி மகளிர் உரிமைப் போராட்டப் பேரிகை நாள் மாட்சிகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 21, 2020

காணொலி வழி மகளிர் உரிமைப் போராட்டப் பேரிகை நாள் மாட்சிகள்!

மே மாதம் 11ஆம் நாள் 1933ஆம் ஆண்டு - நமது அறிவு ஆசான் தந்தை பெரியாரின் முதல் போர்வாள், பெண்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே தயங்கிய காலகட்டத்தில், ஜாதி ஒழிப்பிற்கா கக் களம் கண்ட முதல் பெண் வீராங்கனை, "தாலியே பெண்ணுக்கு வேலி" என்ற நம்பிக்கையில் உழன்று, உழல வைக்கப்பட்ட பெண்களுக்கிடையில் தன் தாலியை அகற்றிய முதல் பெண் விடுதலை போராளி, சுயமரியாதை திருமணத்தைத் தலைமை யேற்று நடத்தி வைத்த முதல் பெண் சுயமரியாதை சுடரொளி - நம் அன்னை ஈ.வெ.ரா.நாகம்மையார் அவர்கள் மறைந்த நாள்!


அன்னையார் மறைந்து 87 ஆண்டுகள் கடந்து விட்டன. அவர் மறைந்த போது பிறந்தே இருக்காத நமது கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இவ்வாண்டு அதே மே மாதம் 11ஆம் நாள், தலைமைக் கழகப் பொறுப்பாளர்களுடனும் கழக மகளிர் தோழர்களுடனும் காணொலி வழியாகக் கலந்துறவாடினார். அன்னையாரின் நினைவு நாளை இவ்வாண்டு முதல் "பெண்கள் உரிமை போராட்டப் பேரிகை நாளாகக்" கொண்டாடி இணையம் வழியாகவும் காணொலி வழியாகவும் இயக்கத்தின் கொள்கைகளைப் பரப்புமாறு நம்மைப் பணித்தார்.


இக்கரோனா காலத்தில் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்காமல் உடனே தமிழர் தலைவர் ஆசிரியர் இட்ட பணி முடிக்கப் புறப்பட்டனர் கருஞ்சட்டைப் படையினர்! இம்மாதம் 13ஆம் தேதியி லிருந்து காணொலி வழியாக நாள்தோறும் இரண்டு கருத்தரங்கங்களைக் கழக மண்டலங்கள் இணைந்து நடத்தின. அன்னை ஈ.வெ.ரா.நாக ம்மையாரின் காலகட்டத்தில் அவரோடு பயணித்த யாரும் தற்போது இல்லை. இருந்தும், கருத்தரங் கங்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றன, கருஞ்சட்டைத் தோழர்களின் உற்சாகப் பங்கேற்புடன்!


நமது கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களும் (மதுரை, வேலூர், தருமபுரி, சேலம் மண்டலங்கள்); கழகத்தின் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்களும் (ஈரோடு, கோவை மண்டலங்கள்); கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்களும் (காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், சென்னை மண்டலங்கள்); திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் செயலாளர் பேராசிரியர் முனைவர் ந.க.மங்களமுருகேசன் அவர்களும் (திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை மண்டலங்கள்); பெண்ணியத்தோடு பெரியாரியத்தையும் இணையத் தளங்களில் பரப்பி வரும் "புதிய குரல்" ஒருங்கிணைப்பாளர் தோழர் ஓவியா அவர்களும் (புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், நெல்லை, திண்டுக்கல், மதுரை மண்டலங்கள்); பேராசிரியை மு.சு.கண்மணி அவர்களும் (மதுரை மாநகர் மாவட்டம்) கருத்தரங்கங்களில் சிறப்புரை ஆற்றினர்.


அன்னை நாகம்மையாரின் பகுத்தறிவு, விருந் தோம்பல், போர்க்குணம், வாதத்திறமை, இதழாளர் பணி, பிடிவாதக்குணம், காங்கிரஸ் பேரியக்கத்தில் ஆற்றிய பணிகள், அய்யாவின் பால் அவர் வைத்த பேரன்பு, அய்யாவின் வெளிநாட்டு சுற்றுப்பயணங் கள், அப்பயணங்கள் ஏற்படுத்திய பிரிவாற்றா மையால் அன்னையாரின் உடல் நலம் குன்றியது, அய்யாவின் சுற்றுப் பயணத்தில் இலங்கையில் அவரோடு இணைந்தது என அன்னையாரின் அனைத்து முகங்களையும் இன்றைய தலைமுறையினருக்கு விரிவாகவும் சுவையாகவும் எடுத்துரைத் தனர். அதோடு அய்யா அவர்கள் அன்னையாரின் மேல் வைத்த அன்பையும், அவர் மறைந்த போது அய்யா அவர்கள் எழுதிய இரங்கல் உரையையும் பங்கேற்றோர் கலங்கும் வண்ணம் விவரித்தனர்.


இந்நிகழ்ச்சிகளுக்கு முத்தாய்ப்பாக அமைந்தது சென்னை மண்டல திராவிடர் கழகத்தால் ஒருங் கிணைக்கப்பட்ட பட்டிமன்றம் - "தந்தை பெரியார் அதிகம் வலியுறுத்தியது - பகுத்தறிவா? பெண் விடுதலையா? ஜாதி ஒழிப்பா?" என்ற தலைப்பில் மூன்று அணிகளாகப் பிரிந்து வாதிட்ட இயக்கத் தின் இளைய தலைமுறை மகளிர் - பேராசிரியை மு.சு.கண்மணி, வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர்), வழக்குரைஞர் ம.வீ.அருள்மொழி, ஓவியா அன்புமொழி (சென்னை மண்டல மகளிரணி செயலாளர்), சட்டக் கல்லூரி மாணவி சே.மெ.மதிவதனி (மாநில மகளிர் பாசறை அமைப்பாளர்), பொன்னேரி செல்வி (கும்மிடிப் பூண்டி மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) - என அறுவரும் அய்யா தந்தை பெரியாரின் கொள்கை களை அச்சுப் பிறழாமல் பட்டிமன்ற பார்வை யாளர்களிடம் கொண்டு சேர்த்தனர். பட்டிமன்ற நடுவராக இருந்து சிறப்பு மிக்க ஆய்வுரையே ஆற்றி அருமையான தீர்ப்பையும் அளித்தார் - கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள் மொழி அவர்கள். இரண்டரை மணிநேரம் தொடர்ந்து "ஹவுஸ்புல்"லாக நடைபெற்ற பட்டிமன்றம் அயல்நாட்டு (அபுதாபி, சவூதி, எத்தியோப்பியா...) கொள்கை உறவுகளையும் ஈர்த்தது! பலர் "இணைய இயலவில்லை, ஹவுஸ்புல்லாக இருக்கிறது" என்று செய்தி அனுப்பிக் கொண்டிருந்தனர்!


கழக மகளிரும் தோழர்களும் கரோனாவால் வீட்டில் முடக்கப்பட்டாலும் கொள்கைகளில் முடங்கி விடக்கூடாது என்று பற்பல அறிவுசார் நிகழ்ச்சிகளை அறிவித்து தொடர்ந்து உற்சாகமும் ஊக்கமும் அளித்து வரும் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும் கழகத் தின் துணைத் தலைவர் கவிஞர் அவர்களுக்கும் பொதுச் செயலாளர் அன்புராஜ் அவர்களுக்கும், சிறப்பு பேச்சாளர்களுக்கும், தமிழர் தலைவர் ஆசிரியர் இட்ட பணி முடிக்க மாநில மகளிர் பொறுப்பாளர்களுடன் முகம் சுளிக்காமல் எல்லா விதத்திலும் இணைந்து செயலாற்றி உறுதுணையாக நின்ற கழகப் பொதுச்செயலாளர்கள் இரா.ஜெயக் குமார், முனைவர் துரை சந்திரசேகரன், மற்றும் அமைப்புச் செயலாளர்கள் உரத்தநாடு குணசேக ரன், வே.செல்வம், ஈரோடு த.சண்முகம், ஊமை.ஜெயராமன், வி.பன்னீர்செல்வம் மற்றும் காணொலி நிகழ்ச்சிகளை மகளிர் முன்னின்று நடத்தினாலும் இடையூறில்லா இணைப்பிற்கு தேவையான எல்லா தொழில்நுட்ப உதவிகளையும் தடையின்றி வழங்கிய அனைத்து இயக்கத் தோழர்களுக்கும் ஆசிரியர் அவர்களை இணைப்பதிலிருந்து பட்டிமன்ற நிகழ்வு வரை உறுதுணையாக இருந்த மாநில மாணவர் கழகச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களுக்கும் மற்றும் திராவிடர் கழகத்தின் அனைத்து மண்டல, மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், மற்ற பொறுப்பாளர்கள், அனைத்து மாவட்ட மகளி ரணி மகளிர் பாசறை பொறுப்பாளர்கள், மகளி ரணி மண்டலச் செயலாளர்கள் கோ.செந்தமிழ்ச் செல்வி,  பா.கலைச்செல்வி, ரமா பிரபா, அ.கலைச் செல்வி, ஓவியா அன்புமொழி ஆகிய அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!


ச.இன்பக்கனி (துணைப் பொதுச்செயலாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செய லாளர்), கிருஷ்ணேஸ்வரி (மாநில மகளிரணி அமைப்பாளர், தென் மாவட்டங்கள்), ந.தேன் மொழி (மாநில மகளிரணி அமைப்பாளர் - வட மாவட்டங்கள்), அகிலா எழிலரசன் (மாநில மகளிரணி பொருளாளர்), பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர்), சே.மெ.மதிவதனி (மாநில மகளிர் பாசறை அமைப்பாளர்).


No comments:

Post a Comment