அரியானாவில் கல்விக் கடனுக்கான 3 மாத வட்டியை  அரசே செலுத்துவதாக அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 22, 2020

அரியானாவில் கல்விக் கடனுக்கான 3 மாத வட்டியை  அரசே செலுத்துவதாக அறிவிப்பு

சண்டிகர், மே22, கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக அரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தொலைக்காட்சி மூலம் மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:


கரோனா வைரஸால் மாநிலத்தின் நிதி வருவாய் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு தேவையான உதவி களை அரசு செய்து வருகிறது. பொருளாதார பாதிப்பு காரணமாக ஒருவர்கூட உணவு இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக மாநில அரசு ரூ.636 கோடி ரூபாய் அளவுக்கு கடந்த 3 மாதங்களாக மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறது.


இந்த ஆண்டு கல்வியை முடித்தவர்கள் வங்கிகளில் வாங்கிய கல்விக் கடனுக்கான 3 மாத வட்டியை மாநில அரசு செலுத்தும். அதேபோல, கடந்த ஆண்டு கல்வியை முடித்து கரோனா வைரஸ் பாதிப்பால் இன்னும் வேலை கிடைக்காத அல்லது தொழில் தொடங்க முடியாத நிலையில் உள்ளவர் களின் கல்வி கடனுக்கான 3 மாத வட்டியையும் அரசு செலுத்தும். இதன் மூலம் 36 ஆயிரம் மாணவர்கள் பயன டைவார்கள். இதற்காக, மாநில அரசுக்கு ரூ.40 கோடி செலவாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment