20 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களை திரும்ப அழைத்துவர பீகார் அரசு முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 21, 2020

20 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களை திரும்ப அழைத்துவர பீகார் அரசு முடிவு


பாட்னா,மே21, வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள சுமார் 20 லட்சம் தொழி லாளர்களை அழைத்துவர பீகார் அரசு திட்டமிட்டுள் ளது. கடந்த சுமார் 2 மாதங் களாக ஊரடங்கு அமலில் இருப்பதால் வெளி மாநி லங்களில் சிக்கிய பிற மாநில தொழிலாளர்கள் வேலை, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மாநில அரசுகள் ரயில்வே துறை யுடன் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்து வரு கின்றன.


இதுகுறித்து பீகார் துணை முதல்வர் சுசில்குமார் மோடி கூறும்போது, “பிற மாநிலங்களில் சிக்கிய பீகார் தொழிலாளர்களை அழைத்து வர ரயில்வே துறை யுடன் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது. இதன்படி, 20 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அழைத்து வர தினமும் 100 சிறப்பு ரயில்கள் வீதம் மொத்தம் 800 ரயில்கள் இயக் கப்படும்'' என்றார்.


இதுவரை 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பீகார் தொழி லாளர்கள் சொந்த மாநிலம் திரும்பி உள்ளனர். இதில் கடந்த 18ஆம் தேதி வரையில் 8,337 பேருக்கு பரிசோதனை செய்ததில் 8 சதவீதம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


அதே நேரம், நோயா ளிகளை தனிமைப்படுத் துவதற்கு போதுமான வச திகள் இல்லாததால் அதி காரிகள் கவலை அடைந் துள்ளனர்.


No comments:

Post a Comment