திருப்பூர், மேட்டுப்பாளையம் மற்றும் நீலமலை மாவட்டங்களின் காணொலி கலந்துறவாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 21, 2020

திருப்பூர், மேட்டுப்பாளையம் மற்றும் நீலமலை மாவட்டங்களின் காணொலி கலந்துறவாடல் கூட்டம்

தொலைநோக்கோடு இயக்கத்தை வழி நடத்துக்கிறார் தமிழர் தலைவர் ஆசிரியர்


கழகத் துணைத் தலைவர் சிறப்புரை



திருப்பூர், மே 21 திருப்பூர், மேட்டுப்பாளையம் மற்றும் நீலமலை மாவட்ட திராவிடர் கழகக் கலந்துறவாடல் கூட்டம் மே 5 ஆம் தேதி அன்று கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் தலை மையில் நடைபெற்றது. கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரையாற் றினார்


மாநில மருத்துவரணி அமைப்பாளர் மருத்துவர் இரா.கவுதமன், கோவை மண்டலத் தலைவர் கருணாகரன், மேட்டுப்பாளையம் மாவட்டத் தலைவர் சு.வேலுசாமி, மாவட்டச் செயலாளர் கா.சு.ரெங்கசாமி, நீலமலை மாவட்டத் தலைவர் மு.நாகேந்திரன், திருப்பூர் மாவட்டத் தலைவர் இரா.ஆறுமுகம், மாவட்டச் செயலாளர் யாழ்.ஆறுச்சாமி, மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் ஆகியோர் முன்னிலை வகித்து, தங்கள் கருத்துகளை எடுத்துக்கூறி தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள 21 கட்டளைகளைப் பின்பற்றி வருவதாகக் கூறினர்.


கழகத் துணைத் தலைவர் உரை


நெருக்கடி காலத்தையே நமது தோழர்கள் பார்த்த வர்கள். எனவே, தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை நாம் கடந்துவிடலாம். எந்த சூழ்நிலையிலும் பெரியார் தொண்டர்கள் நெருக் கடிகளை எதிர்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்நிலையில், ஆசிரியர் அவர்கள் கரோனா காலத்தில்  நம்மை வழிநடத்துவதற்கு 21 கட்டளைகளை வழங்கி வழிகாட்டி இருக்கிறார். இதனை நாம் ஏற்று செயல்படுத்த வேண்டும்.


ஓர் இயக்கத்தை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு நமது தலைவர் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறார். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், பெரியார் பெருந்தொண்டர்கள் முதல் பெரியார் பிஞ்சுகள் வரை தனித்தனியாக இயக்க நிகழ்வுகளை நடத்துகிறார். இளை ஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, தொழிலாளரணி, வழக்குரைஞரணி என ஒவ்வொரு அணிகளுக்கும் பணிகள் பகுத்தளிக்கபட்டு தனித்தனி மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. குழந்தைகளுக்கு பெரியார் தத்துவத்தை கொண்டு சேர்க்க பெரியார் பிஞ்சுகளுக்கான பயிற்சி முகாம்கள், முழுவதும் குழந்தைகளே பங்கேற்ற பெரியார் பிஞ்சு மாநாடு நடத்தப்பட்டுள்ளது. மே, ஜூன் மாதத்தில் நடை பெறும் பெரியார் பிஞ்சுகளுக்கான பயிற்சி முகாம் கரோனா பாதிப்பால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு, ஓர் இயக்கத்தை அடுத்தடுத்தத் தலை முறைக்கு இட்டுச்சென்று தமிழர் தலைவர் ஆசிரியர் நமக்கு வழிகாட்டி வருகிறார் எனத் தெரிவித்து, கரோனா பாதிப்புகள் குறித்தும், அவற் றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்தும், இயக்கத்தின் கடந்த கால வரலாறு களையும் விளக்கிக்கூறினார்.


பொதுச் செயலாளர்


இரா.ஜெயக்குமார் உரை:


கரோனா காலத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்து வரும் அன்றாடப் பணிகளை எடுத்துக் கூறி, ஆசிரியர் நமக்கு வழங்கிய கட்டளைகளை நிறைவேற்றி வருவதாகவும், கழகத் தோழர்கள் அனைவரும் இதனை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் எனக்கூறினார். மேலும், இந்த கரோனா காலத்தை நாம் பயனுள்ளதாக ஆக்கும் வகையில் இயக்க நூல்களை படிப்பதோடு மட்டுமல்லாமல் படித்ததில் பிடித்தது என்பதை எழுதி விடுதலைக்கு அனுப்ப வேண்டும். இணைய வழியாக வரும் விடுதலையை அனைவருக்கு பரப்புவதன் மூலம், எதிர்காலத்தில் விடுதலை நாளேட்டின் சந்தாக்களை அதிகரிக்க முடியும், கழகத் தோழர்கள் தங்கள் மாவட் டத்தில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள தோழர்களுக்கு உதவ  வேண்டும் எனக்கூறினார்.


நிகழ்ச்சியில், மேட்டுப்பாளையம் நகர தலைவர் பழனிச்சாமி, சிவசாமி, மேட்டுப்பாளையம் மாவட்ட இளைஞரணித் தலைவர் நந்தகுமார், குப்புசாமி, வெள்ளியங்கிரி, திலீப்குமார், வீரமணி, நீலமலை மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜீவா, குமாரராஜா, திருப்பூர் மாநகர செயலாளர் பாலு, லியாகத் அலி, கோத்தகிரி வெங்கடேசன் உள்ளிட் டோர் பங்கேற்று உரையாற்றினர். இணைய வழியாக வி.சி.வில்வம் நிகழ்ச்சிகளை ஒருங்கி ணைத்தார். நிறைவாக மேட்டுப்பாளையம் செல்வம் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment