சிறார்களுக்கு மரண தண்டனை ரத்து மனித உரிமை அமைப்புகள் வரவேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 28, 2020

சிறார்களுக்கு மரண தண்டனை ரத்து மனித உரிமை அமைப்புகள் வரவேற்பு


ரியாத், ஏப். 28- சவுதி அரேபியா வில் சிறார்களுக்கு மரண தண்டனை வழங்கும் முறை ஒழிக்கப்பட்டுள்ளது.


சவுதி அரேபியாவில், மனித உரிமைகளை நிலைநாட்டும்  வகையில், சவுதி அரசர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர், முகமது பின் சல் மான் பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகின்றனர்.


இதற்கிடையே, சவுதி அரேபியாவில் கள்ள உறவு வைத்திருப்பவர்கள், திருட்டு உள்ளிட்ட குற்றங்களுக்கு கசையடி உள்ளிட்டவை தண் டனையாக வழங்கப்படுவது வழக்கம்.  இந்த தண்டனைக்கு பல்வேறு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின் றன.


இஸ்லாம் மதத்தை அவ மதித்ததாக கூறி சவுதி அரே பியாவை சேர்ந்த சமூக நல ஆர்வலர் ராய்ப் பதாவி என்பவருக்கு அந்நாட்டு அரசு 10 ஆண்டு சிறை  தண் டனையும், 1000 கசையடிக ளையும் கடந்த 2014ஆம் ஆண்டு வழங்கியது. இவர் அய்ரோப்பிய நாடாளுமன் றத்தால் சிறந்த மனித உரிமை யாளர் விருதை  பெற்றிருந்தார். சவுதி அரேபியா அரசின் தண்டனை முறைக்கு எதிராக போராடிய அரசியல் உரிமை கூட்டமைப்பு உறுப்பினரான அப்துல்லா அல் ஹமீது மரணம்  அடைந்த சில நாட் களே ஆன நிலையில் கசையடி ஒழிப்பு சட்டம் அமலுக்கு வந்துள்ளது.


சர்வதேச மனித உரிமை குழுவினர் இந்த தண்ட னைக்கு எதிர்ப்பு தெரிவித் ததை அடுத்து சவுதி அரே பியா உச்ச நீதிமன்றம் கசை யடி தண்டனையை ஒழித்து  கடந்த சனிக்கிழமை உத்தர விட்டது. சர்வதேச மனித உரிமைவிதிகளுக்கு எதிரான தாக கசையடி தண்டனை இருப்பதால் அந்த தண்டனை ஒழிக்கப்படுகிறது.  இனிமேல் குற்றவாளிகளுக்கு அபராதம் விதிப்பது, சிறை தண்டனை, அல்லது பொது சேவை செய்தல் போன்றவற்றையே தண்டனையாக நீதிபதிகள்  வழங்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் சிறார்க ளுக்கு வழங்கப்பட்டு வந்த மரண தண்டனையை ரத்து செய்து அந்நாட்டு மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார். சவுதியின் இந்த  அறிவிப்புக்கு மனித உரிமை அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.


No comments:

Post a Comment