சென்னை, ஏப். 29- கோவிட் -19 பரவலைக் கட்டுப்படுத்த வீடு வீடாக கணக்கெடுப்புகளை மேற்கொள்ள “மேஜிக் பஸ்” இளம் தலைவர்களும், ஊழி யர்களும் அரசுடன் இணைந்து பணியாற்றி, பொது இடங் களில் மக்கள் கூட்டத்தை கட் டுப்படுத்த காவல்துறையுடன் இணைந்து பணியாற்றி வரு கின்றனர்.
மேலும் இந்தியா முழுவ தும் 52000 பேருக்கு உணவு மற்றும் கோவிட்-19 நிவாரண கருவிகளை வழங்குவதன் மூலம் கரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறார்கள். சென்னையில் 2800 பேருக்கு உணவு மற்றும் நிவாரண கருவிகளை விநியோகித்து உள்ளனர்.
தெருக்களில் வசிக்கும் புலம்பெயர்ந்தோருக்கும் சமைத்த உணவு வழங்கப்படுகி றது. மேலும் கை கழுவுதல் பிற நுட்பங்கள், முககவசங் களைப் பயன்படுத்துதல் அல் லது தும்மும் போது அல்லது இருமும் போது மற்றும் சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் போது முகத்தை மறைப்பது போன்ற சுகாதாரமான நடைமுறைகள் குறித்து சமூக மக்களுக்கு உணர்த்தி வரு கின்றனர்.
நோயாளிகள் தனிமைப் படுத்தப்பட்டுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு உணவு விநியோகத்திற்கும் அவர்கள் உதவுகின்றனர். தொலைபேசி அழைப்பு அடிப் படையிலான நிலையான செய்தி மற்றும் அரசாங்க தகவல்தொடர்பு பொருட் கள் மூலம் “மேஜிக் பஸ்” குழுக் கள், சென்னையில் அதன் திட்டங்களில் ஒரு பகுதியாக இருக்கும் 1800க்கும் மேற் பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை அடைந்துள்ளது.
கோவிட்-19 பற்றிய விழிப் புணர்வை ஏற்படுத்த, தொற்று நோயைத் தடுப்பதற்கான வழிகள், பொருத்தமான கை கழுவுதல், சமூக விலகல் மற்றும் கூட்டம் கூடுவதைத் தவிர்த்து வீட்டிலேயே இருக்க வேண்டிய அவசியம் என்று “மேஜிக் பஸ்” திட்ட இயக்கத் தலைவரான தனசிறீ பிரம்மே தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment