குடும்ப வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 29, 2020

குடும்ப வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வு

சென்னை, ஏப்.29- குடும்ப வன் முறைக்கு எதிரான போராட் டம்; ஊரடங்கு சமயத்தில் தமிழக காவல்துறைக்கு பெரும் சவாலான ஒன்றாக உருவெடுக்கின்றது, இந்த நிலையில் தமிழ்நாடு, பெண் கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு ஷேர்சாட்டுடன் இணைந்து குடும்ப வன்முறை களுக்கு எதிரான விழிப் புணர்வை தமிழக மக்களிடம் ஏற்படுத்துகிறது.


தமிழ் நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதி ரான குற்றங்கள் பற்றிய விழிப் புணர்வை ஏற்படுத்துவதற் காக தமிழக காவல்துறையின் சிறப்புப் பிரிவு @TNPoliceCWC என்ற அதிகாரப் பூர்வ பக்கத்தை ஷேர்சாட்டில் தொடங்கியுள்ளது. ஷேர் சாட் பயனர்கள், இப்பிரிவு சம்பந்தப்பட்ட குறை களை தமிழக காவல் துறையின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவு செய்யும் பட்சத்தில், பதிவுசெய்யப்பட்ட அனைத்து குறைகளும் காவல் துறை அதிகாரிகளால் சரி யான நேரத்தில் தீர்க்கப்படும்.


தமிழக காவல்துறை, தமி ழக குடும்பங்களில் பரஸ்பர புரிந்துணர்வை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு ஷேர்சாட்டில் சுவாரஸ்ய மான மற்றும் புதுமையான பரிசு போட்டி ஒன்றை நடத்துகிறது.


இந்த விழிப்புணர்வு பரி சுப்போட்டியானது ஷேர் சாட் டில் காவல் துறையின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் 4 நாட்கள் நடைபெறும். மேலும், இந்த பரிசு போட் டியில் பங்குபெற பெண்கள் ஊரடங்கு விதிகளை மீறாமல் தங்கள் வீட்டிலேயே கோலம் வரைந்தும், ஆண்கள் பெண் களுக்கு உதவும் வகையில் சமைத்தோ அல்லது வீட்டு வேலை செய்தோ ஷேர்சாட் கேமராவில் பதிவிட வேண் டும்.


சிறந்த வீடியோக்களை தேர்வு செய்து பெண்கள் மற் றும் குழந்தைகளுக்கு எதி ரான குற்றங்கள் தடுப்பு பிரிவு அதிகாரி Dr. M.OM IPS A DGP அவர்கள் வீட்டு உப கரணங்களை பரிசளிப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது .


No comments:

Post a Comment