காணொலி வாயிலாக நடைபெற்ற தஞ்சை மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 29, 2020

காணொலி வாயிலாக நடைபெற்ற தஞ்சை மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்

கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் பங்கேற்புதஞ்சை,ஏப். 29 கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டி ருக்கும் நிலையில் அறிவியல் தொழில்நுட்பத்தின் உதவி யுடன் கழகப் பொறுப்பாளர்கள் அவரவர் இருக்கும் இடங்களிலிருந்தே பங்கேற்று காணொலி காட்சி வாயிலாக, தஞ்சை மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 23.4.2020 அன்று மாலை 6 மணிக்கு தொடங்கி 8 மணிவரை இரண்டு மணி நேரம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமையேற்று உரையாற்றினார். கூட்டத்தின் தொடக்கத் தில் தஞ்சை மாவட்டச் செயலாளர்  அ.அருணகிரி அனை வரையும் வரவேற்று உரையாற்றினார்.


கழகத் துணைத் தலைவர் உரை


இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் அனைவருக்கும் புத்தக நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். அதோடு தொடர்ந்து இதே நாளில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை பெரியார் திடலில் புத்தகக் காட்சி நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு அந் நிகழ்வு நடை பெறாமல் இருப்பது மிகவும் வருத்தமாக இருப்பதாகவும் கூறினார். தொடர்ந்து, புத்தகச் சந்தை நடத்தும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர வேறு இல்லை என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் சொற்களை நினைவூட்டினார். தந்தை பெரியார் பொதுக்கூட்ட மேடைகளில் பேசும்போது இயக்க வெளியீடுகளைப் பற்றிப் பேசுவார், கூட்டம் முடிந் ததும் புத்தகம் விற்பனை செய்தவரிடம் இந்தக் கூட்டத்தில் எவ்வளவு புத்தகம் விற்பனையானது என்று கேட்பார், ஏனென்றால், அதிகமான புத்தகம் விற்றிருந்தால் நமது கருத்து நிறைய பேரிடம் சென்றிருக்கிறது என்றுகூறி பெருமிதம் கொள்வார். இயக்க வெளியீடுகளை மலிவுப் பதிப்பாக வெளியிட்ட தலைவர் தந்தை பெரியார். புலவர் வீடுகளில் மட்டும் இருந்த திருக்குறளை மக்கள் பதிப்பாக மலிவு விலையில் அச்சிட்டு மக்கள் கைகளில் தவழவிட்டவர் தந்தை பெரியார். இந்த ஊரடங்கு நாளில் பெரியார் அன்றும் இன்றும் என்றும், காலந்தோறும் பார்ப்பனியம் போன்ற நூல்களைப் படித்ததாகவும், தற்போது இயக்க வெளியீடாக அதிக அளவில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளி வருகின்றன. அவற்றைக் கழகத் தோழர்கள் வாங்கிப் படிக்க வேண்டும், மற்றவர்களுக்கும் பரப்ப வேண்டும். படித்த செய்திகளைக் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். ஞாபக சக்தியை நம்பாதீர்கள் அது எப்போதும் துணை நிற்காது என்று கருத்துரையாற்றினார்.


கழகப் பொதுச்செயலாளர் இரா. ஜெயகுமார் உரை


அடுத்து உரையாற்றிய கழகப் பொதுச்செயலாளர் இரா. ஜெயக்குமார் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுரைப்படி இக்கூட்டம் நடைபெறுவதன் நோக்கத்தைக் குறித்து உரையாற்றினார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வீட்டில் இருந்தபடியே எழுதும் அறிக்கைகள், கழக செயல் திட்டங்கள் அடங்கிய விடுதலை நாளேடு தொடர்ந்து வெளிவருவதாகவும், வாட்ஸ்அப் செயலி வழியாக வரும் விடுதலை ஏட்டினை தான் படிப்பதாகவும் மற்றவர்களுக்கும் தோழர்களுக்கும் அனுப்பிவைப்பதாகவும் தெரிவித்தார்.


கரோனா நோய் தொற்றுக் காரணமாக ஊரடங்கு நீடிக்கப்பட்டிருக்கும் நிலையில் கழகத்தின் பொறுப்பாளர்கள் அவ்வப்போது கைப்பேசியில் தொடர்புகொண்டு பேசுதல் வேண்டும். தங்கள் சுற்றுப்புறத்தில் உள்ளவர்களுக்கு தங்களால் ஆன உதவிகளை செய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். இன்றைய தினம் கோயில், மசூதி, சர்ச்சுகள் போன்ற அனைத்து வழிப்பாட்டு தளங்களும் மூடப்பட்டுள்ளன, வழிபாட்டு தளங்களுக்கு மக்கள் யாரும் செல்லவில்லை, வழிபாட்டு தளங்களுக்கு செல்லாமல் இயல்பான வாழ்க்கையை வாழலாம் என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது. தந்தை பெரியாரின் கருத்து தற்போது நிலை நாட்டப்படுகிறது. திருமணத்திற்கு 50 நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்று பெரியார் கூறுவார். ஆனால், இன்று 20 நபர்கள்தான் கூட வேண்டும் என்கிற நிலை உருவாகி யிருக்கிறது. ஆகவே, பெரியாரின் கருத்துதான் என்றும் நிலையானது என்று கூறினார்.


மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன் உரை


ஊரடங்கினால் வீட்டை விட்டு வெளிவராத நிலையில் காணொலி  மூலம் தோழர்களை சந்திப்பது மகிழ்ச்சியளிப்ப தாகவும், இயக்க வெளியீடுகள் புத்தக தினத்தை முன்னிட்டு 50 சதவீதம் கழிவில் விற்பனை செய்யப்படுவதாக தமிழர் தலைவர் அறிவித்திருக்கிறார், தோழர்கள் அனைவரும் நூல்களை வாங்கிப் படித்துப் பயன்பெற வேண்டும் என கூறினார்.


மண்டலத் தலைவர் அய்யனார் உரை


21 அம்சத் திட்டங்கள் அடங்கிய தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிக்கை மிகவும் எழுச்சிகரமாக இருந்தது. தோழர்கள் அதனை ஏற்று இனிவரும் காலங்களில் பிரச்சாரத் திட்டங்களை வகுத்திட வேண்டும், பிரச்சாரங்கள் மிக பலமாக இருக்க வேண்டும். நாம் அனைவரும் வீட்டில் இருக்கிறோம், புத்தகங்களை வாசிக்கும் வாய்ப்பு கிடைத் துள்ளது, அவ்வாறு நாம் படித்ததை மற்றவர்களுக்கும் பரப்ப வேண்டும் என்றார்.


மேலும், தோழர்கள் அனைவரும் வீட்டில் இருக்கும் சூழ்நிலையில் தங்கள் உடலைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.  ஏதேனும் நோய்வாய்ப்பட்டால் அதனைத் தீர்ப் பதற்கு மருத்துவர்கள்கூட இல்லாத நிலை இருக்கும் கார ணத்தினால் அனைவரும் எளிமையான உணவை உட் கொள்ள வேண்டும் என மருத்துவ ஆலோசனையும் வழங்கினார்.


மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் உரை


நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பத்தினருடன் இருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுவரை நிறைய புத்தகங்களை வாங்கி அடுக்கி வைத்திருந்தேன் தற்போது அவற்றையெல்லாம் படிக்கும் வாய்ப்பும், நீதிமன்றத்துக்குத் தேவையான பழைய வழக்குக் கட்டுகள் எடுத்துப் படிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளதாகக் கூறினார். தஞ்சையில் மாநாடு அறிவிக்கப்பட்டு தள்ளிபோனது வருத்தமாக உள்ளது எனவும் கரோனாவிற்கான ஊர டங்கு முடிந்தவுடன் முதல் மாநாடாக அதனை நடத்திட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.


கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு இந்த நேரத்தை நமக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொண்டு, நல்ல அளவில் திட்டமிட்டு வரப்போகும் காலங் களில் தொடர் தெருமுனைப் பிரச் சாரம், மூடநம்பிக்கை, ஒழிப்புப் பிரச்சாரம் ஆகியவற்றை சிறப் பாக நடத்திட வேண்டும். தொழில் நுட்பத்தில் நாம் இன்னும் அதிக மாக வலிமை பெற வேண்டும், குழந்தை இலக்கியத்தில் கவனம் செலுத்தி அதிலும் நிறைய நூல்கள் வெளியிட வேண்டும் போன்ற பல்வேறு கருத்துகளை தெரிவித்து தோழர்கள் உரையாற்றினார்கள்.


இந்நிகழ்வில், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் மா.அழகிரி சாமி, மாநில இளைஞரணித் துணைச்செயலாளர் இரா.வெற்றிக் குமார், மாநில மாணவர் கழக அமைப்பாளர் செந்தூர்ப் பாண்டியன், மாநில வீதி நாடகக் கலைக்குழு அமைப்பாளர் பெரியார்நேசன், மாவட்டத் துணைத் தலைவர் முத்து.ராஜேந்திரன், மண்டல மகளிரணிச் செயலாளர் கலைச் செல்வி, மண்டல இளைஞரணிச் செயலாளர் இராஜவேல், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் காமராசு, மாவட்ட இளைஞரணிச் செயலாளர் வெங்கடேசன், தஞ்சை வடக்கு ஒன்றியத் தலைவர் மாத்தூர் சுதாகர், செயலாளர் அரங்க ராசன், பூதலூர் ஒன்றியத் தலைவர் அள்ளூர் பாலு, செயலாளர் புகழேந்தி, தஞ்சை மாநகர அமைப்பாளர் தமிழ் செல்வன், ஊரணிபுரம் நகரத் தலைவர் கக்கரை இராம மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ஸ்டாலின், ஒன்றிய பகுத் தறிவாளர் கழகத் தலைவர் பெரியார்கண்ணன், பெரியார்நகர் உத்திராபதி, பேராசிரியர் வடுவூர் எழிலரசன், பகுத்தறிவாளர் கழக பூதலூர் ஒன்றியத் தலைவர் துரைராசு, திருக் காட்டுப்பள்ளி இஸ்மாயில்,  உரத்தநாடு ஒன்றிய இளை ஞரணித் தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் அன்பரசு மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.


தஞ்சை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாரதி தேவா மற்றும் பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி ஆகியோர் காணொலியினை ஒருங் கிணைத்தனர். நிகழ்வின் முடிவில்  தஞ்சை மாநகர இளை ஞரணித் துணைத் தலைவர் பெரியார் செல்வன் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment