தந்தை பெரியாரின் கொள்கைகளுக்கு இலக்கிய வடிவம் தந்தவர் புரட்சிக் கவிஞர். 'தொண்டு செய்து பழுத்த பழம்' என்று அய்யாவைச் சொல்லோவியம் தீட்டியவர். கவிதை, காப்பியம், நாடகம், உரைநடை, கட்டுரை, புதினம், இசைப்பாடல், இலக்கணம், கடிதம், கேள்வி-பதில், துணுக்குகள், திரைக்கதை என இலக்கியத் தளங்கள் அனைத்திலும் முத்திரை பதித்தவர். புரட்சிக் கவிஞர் தம் படைப்புகளைத் திரட்டி, காலவரிசைப்படுத்தி நூலாக வெளியிட பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. 'புரட்சிக் கவிஞரின் கவிதைகள்' எனும் பெயரில் பெருந்தொகுப்பு முதலில் வெளிவரும். அதனைத் தொடர்ந்து மற்ற தொகுப்புகள் வெளியிடப்படும். புரட்சிக் கவிஞரின் படைப்புகள் மலிவுப் பதிப்பாக - மக்கள் பதிப்பாக தமிழர்களின் கரங்களில் தவழும் நாள் தொலைவில் இல்லை ஆவலுடன் எதிர்பாருங்கள்.
- பேராசிரியர் நம். சீனிவாசன், இயக்குநர்,
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்)
No comments:
Post a Comment