அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.அய். தான் மோடியின் கூட்டுக் குடும்பம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 4, 2024

அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.அய். தான் மோடியின் கூட்டுக் குடும்பம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து

featured image

சென்னை, ஏப்.4- திமுக தலைவரும், தமிழ்நாடு முதல மைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத் தளப்பதிவு வருமாறு,
“பா.ஜ.க.வின் ‘வாசிங் மெஷின்’ பாணியை ஆதாரப் பூர்வமாகத் தோலுரித்துள்ளது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு!

பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக் கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன.

10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சி என்பது இந்தியாவின் உயர் விசாரணை அமைப்புகளை எவ்வளவு இழிவான நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமா?

“பேச நா இரண்டுடையாய் போற்றி” என அறிஞர் அண்ணா அன்று சொன்னது யாருக்குப் பொருந்து கிறதோ இல்லையோ ஊழல்வாதிகளை எல்லாம் கட்சி யில் இணைத்து உத்தமர்களாக்கிவிட்டு, ஊழலை ஒழிப்போம் எனக் கூசாமல் புளுகும் பிரதமருக்கு நன்றாகவே பொருந்து கிறது! மோடியின் குடும்பம் என்பது இ.டி., அய்.டி., சி.பி.அய்.,தான்!
-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment