கண்டதும்! கேட்டதும்! சத்திரப்பட்டியில் நடந்த முத்திரை பதித்த சந்திப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 6, 2024

கண்டதும்! கேட்டதும்! சத்திரப்பட்டியில் நடந்த முத்திரை பதித்த சந்திப்பு!

இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு தழுவிய அளவில் சூறாவளியாய் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள். ஒரு நாளைக்கு இரண்டு பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு ஆயிரக்கணக்கான மக்களை நேரில் சந்தித்து, ’கவலைப்படாதீர்கள்! கடந்த 10 ஆண்டுகளாக நீங்கள் பட்ட துன்பத்திற்கு விடியல் ஜூன் 5ஆம் தேதி பிறந்து விடும் என்று ஆறுதல் கூறி, அவர்களைத் தாயினும் சாலப்பரிந்து தேறுதல் சொல்லி, கவனச் சிதறல் இல்லாமல் இந்தியா கூட்டணி வேட்பாளர் களுக்கு வாக்களியுங்கள் என்று பேசிக் கொண்டு வருகிறார். மக்களும், “சொல்வது தங்கள் வாழ்வில் எல்லா ஏற்றங்களையும் பெற்றுத் தந்த திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவர்! அவர் சொன்ன பிறகு இன்னொரு சொல்லுக்கு மதிப்பு ஏது?” என்பதை அவர்கள் வார்த்தைகளாக சொல்லவில்லை. அவர் களின் முக விலாசங்கள் நம்மிடம் அப்படித்தான் பேசுகின்றன. அப்படிப்பட்ட சூழலில், நேற்று (5.4.2024) திண்டுக்கல் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் (மா) கட்சியின் வேட்பாளர் சச்சிதானந்தம் அவர்களை ஆதரித்துப் பேசிவிட்டு, அடுத்து பொள்ளாச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஈஸ்வரசாமி அவர்களை ஆதரித்துப் பேசுவதற்காக திண்டுக்கல்லில் இருந்து 7 மணிக்கு மேல் புறப்பட்டுவிட்டார்.

வேட்பாளர் சச்சிதானந்தம் வேறு பகுதியில் பரப்புரைப் பணியில் இருந்ததால் திண்டுக்கல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலவில்லை. ஆசிரியர் வாகனம் உடுமலைப்பேட்டையை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. அப்போது ‘தீக்கதிர்’ ஆசிரியர் தோழர் மதுக்கூர் ராமலிங்கம் அவர்கள், கழகப் பொறுப்பாளர்கள் மூலம் ஆசிரியரைத் தொடர்பு கொண்டு, ’வேட்பாளர் சச்சிதானந்தம் ஆசிரியரை வழியில் சந்தித்து மரியாதை செய்ய விரும்புகிறார்’ என்று கூறி, ஆசிரியரின் சம்மதத்தைப் பெற்றார். வேட்பாளர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சத்திரப்பட்டி சுங்கச் சாவடியில் ஆசிரியரை எதிர்நோக்கிக் காத்திருந்தார்.

ஆசிரியர் வாகனம் அங்கே நின்றது. ஒரு பக்கம் ஒரு மலர் போல மலர்ந்திருந்தது திண்டுக்கல் வேட்பாளர் சச்சிதானந்தம் முகம்! இன்னொரு பக்கம் வாகனத்திலிருந்து இறங்கிக் கொண்டிருந்த ஆசிரியர் முகமும் அப்படித்தான் இருந்தது! ஆசிரியர் இறங்கிய வுடன், ஆடை அணிவித்து மகிழ்ந்தார் வேட்பாளர். ஆசிரியர், “எதுக்குங்க இதெல்லாம்” என்றார் அன் புடன், வேட்பாளரோ, “அய்யா எனக்காகப் பிரச்சாரம் செய்ய வந்திருக் கீங்க. நான் பக்கத்தில் இல்லாம போயிட்டேன்” என்று வருந்தும் தொனியிலும், ஆசிரியர், “அதுக் கென்னங்க, நீங்க தான் ஏற்கனவே என்னை சந்திச் சிட்டீங்களே!” என்று ஆறுதல் தரும் தொனியிலும் இருவரும் நெகிழ்ச்சியுடன் சில வார்த்தைகளை பரிமாறிக்கொண்டனர். பிறகு பேசிக் கொண்டபடியே ஆசிரியர் அவரிடம் விடை பெற்றுக்கொண்டு புறப் பட்டுவிட்டார்.

சந்திப்பு நடந்த பிறகு வேட்பாளரிடம் கைப்பேசியில் பேசும்போது, ”நானும், நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனும் சென்னை பெரியார் திடலுக்குச் சென்று அய்யாவைச் சந்தித்து, ”நீங்கள் என்னை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வரவேண்டும் என்று வேண்டு கோள் விடுத்தேன்” அய்யா மறுக்காமல் சம்மதித்தார். அப்படிப்பட்டவர் வந்திருக்கிறார். நான் பக்கத்தில் இல்லாமல் போனது மிகுந்த வருத்தத்தை உண் டாக்கிவிட்டது. அந்த வருத்தத்தைப் போக்கிக் கொள்ள அய்யாவை சந்திக்க எண்ணினேன். சந்தித்து விட்டேன்!” என்றார் நெகிழ்ச்சியுடன்.

திண்டுக்கல் மேடையில் ஆசிரியர் பேசும் போது, ”இந்தியா கூட்டணி ஒரு கொள்கைக் கூட்டணி” என்று சொல்லிவிட்டு, “பெரியார் காலத்திலிருந்தே நாங்களும், கம்யூனிஸ்ட்டுகளும் ஒன்றாக பணியாற் றியவர்கள். இந்தக் கருப்பையும், சிவப்பையும் யாராலும் பிரித்துவிட முடியாது” என்று போர் முரசம் முழங்குவது போன்றே முழங்கினார். தன்னிச் சையாகவே மேடையிலிருந்த தோழர் மதுக்கூர் ராமலிங்கமும், தோழர் பாலபாரதி அவர்களும் கைதட்டி அதை ஆமோதித்தனர். மயிர்க்கூச் செறிந்தது அந்தக் காட்சியைக் காணும் போது. இந்தக் கொள்கை உணர்வுக்கு ஒரு நடப்புச் சான்று தான், ’சத்திரப்பட்டியில் நடந்த இந்த முத்திரை பதித்த சந்திப்பு!

No comments:

Post a Comment