தமிழ்நாட்டில் திராவிட மாடல் அரசின் சாதனைகள் இந்தியா முழுவதும் தொடர வேண்டுமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 4, 2024

தமிழ்நாட்டில் திராவிட மாடல் அரசின் சாதனைகள் இந்தியா முழுவதும் தொடர வேண்டுமா?

இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள்!

விருதுநகர், ஏப்.4– ஒரு பானை சோற் றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அதுபோல தமிழ்நாட்டில் திமுக அரசின் சாதனைகள் கடந்த காலத்தில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் காலத்திலும் தற்போது முதலமைச்சராக உள்ள முத்துவேல் கருணாநிதி ஸ்டா லின் ஆட்சியிலும் அதிகபட்சமாக இந் தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு பெண் உரிமைக்கு – மகளிர் நலத்துக்கு – பெண் விடுதலைக்கு செய்யப்பட்டுள்ள அரசின் செயல்பாடு களை பட்டியல் போட்டுப் பாருங்கள்.
இந்த அளவிற்கு வேறு எந்த ஆட்சிய லாவது பெண்களுக்காக சட்டங்கள் திட்டங்கள் செய்யப்பட்டு இருக்கிறதா? சிந்தியுங்கள்! 1929 செங்கல்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட் டில் பெண்களுக்கு ஆண்களைப் போலவே சமமாக சொத்துரிமையும் வாரிசு உரிமை யும் கொடுக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார் தந்தை பெரியார். ஆண்களைப் போலவே அனைத்து வேலைகளிலும் பெண்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று அறை கூவல் எழுப்பியவர் அய்யா பெரியார்.

1989இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு என்ற சட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தவர் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர்…
பெண்களுக்கு சொத்தில் சம உரிமை சட்டம், பணியிடங்களில் பெண்களுக்கு 30 சதவிகித இட ஒதுக்கீடு – உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு வாய்ப்பு – ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்புகள், பெண்கள் சொந் தக் காலில் நிற்க வசதியாக மகளிர் சுய உதவி குழுக்கள் ஒடுக்கப்பட்ட சமுதாய பெண்களுக்கு முதலில் பள்ளிக்கல்வி வரை இலவச கல்வி – தொடர்ந்து கல்லூரி வரை இலவச கல்வி, தொடக்கப் பள்ளி ஆசிரியர்களாக மகளிர் மட்டுமே எனும் முன்னுரிமை, அரசு கிராமப்புற பெண்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை, ஈவெரா நாகம்மையார் நினைவு மகளிர் இலவச பாட புத்தக திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவி திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம், டாக் டர் தர்மாம்பாள் விதவை மறுமணத் திட்டம், அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம், ஈவெரா மணியம்மையார் நினைவு ஏழை கைம்பெண்களின் மகள் களுக்கான திருமண உதவி திட்டம், பெண்களுக்கு இலவச தையல் எந்திரம் அளிக்கும் திட்டம், பங்காரு அம்மாள் மகளிர் குழுக்கள், சத்தியாஅம்மையார் குழந்தைகள் காப்பக திட்டம் ,மகளிர் தொழில் முனைவோர் உதவித் திட்டம், மீனவப் பெண்கள் மீன் அங்காடி அமைக்க நிதி உதவி, மகளிர் சேமிப் புடன் கூடிய சிறு வணிக கடன் உதவி, திருமணம் ஆகாத 50 வயதுக்கு மேற் பட்ட பெண் களுக்கு மாத உதவித் தொகை…….. இப்படி அடுக்கடுக்கான பெண் உரிமைக் கான திட்டங்களும் சட்டங்களும் செயல் பாடுகளும் தமிழ்நாட்டில்!
இந்திய துணைக் கண்டம் முழுவதும் இந்த மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால் வாக்காளப் பெருமக்களே குறிப்பாக தாய்மார்களே உங்களின் வாக்கு இந்தியா கூட்டணி வேட்பாளர் களுக்கே.
(விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் அவர்களை ஆதரித்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திர சேகரன் உரை 3.4.2024)

No comments:

Post a Comment