ஒன்றிய அரசிடம் ரூ.2,000 கோடி நிவாரண நிதி கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தமிழ்நாடு அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 4, 2024

ஒன்றிய அரசிடம் ரூ.2,000 கோடி நிவாரண நிதி கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தமிழ்நாடு அரசு

புதுடில்லி,ஏப்.4- ஒன்றிய அரசிடம் ரூ.2,000 கோடி நிவாரண நிதி கேட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. கடந்த ஆண்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்தது. இதன் காரணமாக நான்கு மாவட்டங்களும் வெள்ளத்தில் மிகவும் பாதிக்கப்பட்டன. இந்த சூழலில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களிலும் அதீத கனமழை பெய்து மக்களை நிலைகுலைய வைத்தது.
வெள்ள நிவாரணம் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் வெள்ள நிவாரணம் கேட்டு வழக்கு தொடரப்படும் என முதலமைச்சர் 2.4.2024 அன்று வேலூர் பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ஒன்றிய அரசிடம் ரூ.2,000 கோடி நிவாரண நிதி கேட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. நிவாரண நிதி வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு ஒன்றிய அரசு இதுவரை நிதி வழங்கவில்லை. முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் ஒன்றிய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் எந்தப் பயனும் இல்லை. புயல், வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதியை உடனே வழங்க ஒன்றிய பாஜக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment