தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 'மேலும் ஒரு மாத அகவிலைப்படி' உயர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 7, 2024

தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 'மேலும் ஒரு மாத அகவிலைப்படி' உயர்வு

சென்னை, மார்ச் 7 பணியில் உள்ள ஊழியர்களுக்கு நிலு வையில் உள்ள மேலும் ஒரு மாத அகவி லைப்படி உயர்வு வழங்கப்படும் என முத்தரப்பு பேச்சுவார்த்தையில் போக்கு வரத்துக் கழக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

அரசு போக்குவரத்துக் கழகங் களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை நிதி நிலை அறிக்கையில் ஒதுக்க வேண்டும், போக்குவரத்துக் கழக ஓய்வூதி யர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஅய்டியு, ஏஅய் டியுசி, அண்ணா தொழிற்சங்கப் பேரவை, அய்என்டியுசி, டிடி எஸ்எஃப், உள் ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்த தாக்கீடு வழங்கியிருந்தன.

இதுதொடர்பாக நடந்த பலகட்ட சமரசப் பேச்சு வார்த்தை களில் உடன்பாடு ஏற்படாததை யடுத்து ஜன.9, 10ஆ-ம் தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி வேலைநிறுத் தம் கைவிடப்பட் டது. இதற்கி டையே, சென்னை தேனாம்பேட்டையில், தொழி லாளர் துறை தனி இணை ஆணையர் எல்.ரமேஷ் முன்னி லையில் 7-ஆம் கட்ட பேச்சு வார்த்தை நேற்று நடை பெற்றது.

செய்தியாளர்களிடம் சிஅய்டியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கூறும்போது, பணியில் உள்ள ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள மேலும் ஒரு மாத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என தெரிவித் துள் ளனர். அந்த அகவிலைப்படி உயர்வை ஓய்வு பெற்றவர்களுக் கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். மற்ற கோரிக்கைகள் அரசின் பரிசீ லனையில் இருப்ப தாக தெரிவித்தனர். இதில் எங்களுக்கு திருப்தியில்லை.

எத்தனை காலத்துக்குதான் அவர்கள் பரிசீலித்துக் கொண்டிருப் பார்கள். தேர்தல் அறிவிப்பு வெளியானால் நடத்தை விதி களை காரணம் காட்டி எதை யுமே வழங்க முடியாத நிலை ஏற்படும். புதிதாக எந்த முன் னேற்றமும் இல்லை. இடைக் கால நிவாரணத்தை யாவது ஒரு வாரத்துக்குள்ளாக அறி விக்க வேண்டும் என வலி யுறுத்தினோம். ஓய்வூதியர்களின் மருத்துவக் காப்பீட்டுக்கு ரூ.497 கட்ட வேண்டிய இடத்தில் ரூ.1,112 செலுத்த வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள் ளது. இது ஓய்வூதியர்களை வஞ் சிக்கக் கூடிய செயல் என்றார்.
அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் கூறும்போது, முதன்மை கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை. தேர்தல் அறிவிப்புக்கு முன் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை தொடங்க வேண்டும். இல்லா விட்டால் இடைக்கால நிவா ரணம் ரூ.5 ஆயிரமும், ஓய்வூதியர்களுக்கு நிலுவை அகவிலைப்படி உயர் வும் வழங்க வேண்டும் என கோரியுள்ளோம்.

11-ஆம் தேதிக்குள் முடிவு சொல்லவில்லையெனில், எங் களது கூட்டமைப்பு சார்பில் அடுத்தகட்ட போராட்டத்தை தொடங்குவோம். ஓய்வு பெற்ற வர்களுக்கான பணப்பலன் வழங்குவதற்காக நிதி திரட் டப்படுவதாக தெரிவித்துள் ளனர் என்றார்.

No comments:

Post a Comment