தகவல் தொழில்நுட்பக் குழுப் பயிற்சிக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 21, 2024

தகவல் தொழில்நுட்பக் குழுப் பயிற்சிக் கூட்டம்

featured image

விருத்தாசலத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற தகவல் தொழில்நுட்பக் குழுப் பயிற்சிக் கூட்டம் புதிய அனுபவங்களை தோழர்கள் பெற்றனர்

விருத்தாசலம், மார்ச் 21- விருத்தாசலத்தில் திராவிடர் கழகத் தொழில்நுட்பக் குழுப் பயிற்சிக் கூட்டம் 17.3.2024 அன்று நடை பெற்றது. இதில், விருத்தாசலம், கடலூர், சிதம்பரம், அரியலூர், கல்லக் குறிச்சி, விழுப்புரம், மற் றும் திண்டிவனம் உள் ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 70 தோழர்கள் பங்கேற்றனர்.

விருத்தாசலத்தில் நடைபெற்ற திராவிடர் கழகத் தகவல் தொழில் நுட்ப குழுப் பயிற்சி கூட் டத்திற்கு விருத்தாசலம் கழக மாவட்ட தலைவர் அ.இளங்கோவன் தலைமை வகித்தார். தலைமைக் கழக அமைப் பாளர் த.சீ.இளந்திரை யன் வரவேற்று உரையாற்றினார். மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, தலைமைக் கழக அமைப்பாளர் தா.இளம்பரிதி, கடலூர் மாவட்ட தலைவர் சொ. தண்டபாணி, அரியலூர் மாவட்ட தலைவர் விடு தலை நீலமேகன், திண்டி வனம் மாவட்ட தலைவர் இர .அன்பழகன், சிதம் பரம் மாவட்ட செயலா ளர் அன்பு. சித்தார்த்தன், கடலூர் மாவட்ட செய லாளர் கவிஞர் எழிலேந்தி, கல்லக்குறிச்சி மாவட்ட செயலாளர் ச.சுந்தர்ரா ஜன், திண்டிவனம் மாவட்ட செயலாளர் செ.பரந்தாமன், அரியலூர் மாவட்டச் செயலா ளர் மு.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில், கழக துணைப் பொதுச் செய லாளர் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார் ஒளிப் படக் காட்சி மூலம் பயிற்சி அளித்தார். இதில்,
எக்ஸ் தளம், முகநூல், வாட்சப், டெலிகிராம் ஆகிய சமூக வலைதளங் களில் எவ்வாறு ஒருங் கிணைந்து செயல்படுவது என்பது குறித்தும், #tag trending செய்வது எப் படி என்று விளக்கிக் கூறி னார்.
மேலும், தந்தை பெரியார், அன்னை மணி யம்மையார், தமிழர் தலை வர் ஆசிரியர் வீரமணி ஆகியோர் குறித்து பொய்ச்செய்திகளை கட்டவிழ்த்து விடும் நபர்களின் முகத்திரையை கிழித்து, ஆதாரத்துடன் எவ்வாறு மறுப்பு தெரிவிப்பது என்பது குறித்தும், திராவிடர் கழகத் தலைமைக் கழகம் சார் பில் நடத்தப்படும் இணை யதளங்கள், யூடியூப் சேனல்கள் உள்ளிட்ட இயக்க ஊடகம் சார்ந்த அனைத்து தகவல்களை யும் விரிவாக எடுத்துரைத்தார்.

மாநில ஒருங்கிணைப் பாளர் இரா. ஜெயக் குமார் உரையாற்றும் போது, இன்றைய காலக் கட்டத்தில் சமூக ஊட கங்களின் தேவை பற்றி யும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உழைப்பு, சமூக ஊடகங் களை நமக்கான பிரச்சா ரக்களமாக பயன்படுத்துவதில் ஆசிரியர் அவர்கள் கொண்டுள்ள ஆர்வம், சமூக வலைத்தளங்களில் கழகத் தோழர்கள் ஒருங்கிணைந்த செயல்பாடு பற்றியும், சமூக ஊடகங் களை கழகத் தோழர்கள் முழுமையாகப் பயன்படுத்த வேண்டியதன் நோக்கம் குறித்தும் பேசினார்.
பகுத்தறிவாளர் கழக ஊடகப் பிரிவு மாநிலத் தலைவர் மா‌.அழகிரி சாமி, பகுத்தறிவாளர் கழக ஊடகப் பிரிவு மாநிலச் செயலாளர் ஆவடி முருகேசன் ஆகியோரும் சமூக வலைத்தளங்களை எவ்வாறு கையாளுவது என்பது பற்றி விளக்கிக் கூறினர்.

கூட்டத்தில், மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் கோ. வேலு, வழக்குரைஞர் தா. தம்பி பிரபாகரன், விருத் தாசலம் மாவட்ட துணைச் செயலாளர் த.சேகர், கட லூர் மாவட்ட அமைப் பாளர் சி.மணிவேல், விருத்தாசலம் மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் பி.பழனிச் சாமி, விருத்தாசலம் நகர தலைவர் ந.பசுபதி, விருதாச்சலம் நகரச் செயலாளர் மு.முகமது பஷீர், திட்டக்குடி நகர தலை வர் வெ.அறிவு, விருத்தாச லம் மாவட்ட இளைஞரணி தலைவர் செ. சிலம்ப ரசன், மாவட்ட இளைஞ ரணி செயலாளர் சே.பெரியார்மணி, மாவட்ட இளைஞரணி அமைப்பா ளர் வெங்கட.ராசா, மாவட்ட மாணவர் கழக செயலாளர் வழக்குரைஞர் சு.தமிழ்ச்செல்வன், விருத்தாசலம் ஒன்றிய தலைவர் கி.பாலமுருகன், விருத்தாசலம் ஒன்றிய செயலாளர் கா.குமரே சன், விருத்தாசலம் ஒன் றிய அமைப்பாளர் செ. ராமராஜ், கல்லக்குறிச்சி மாவட்ட துணைத்தலை வர் குழ. செல்வராசு, கல்லக்குறிச்சி மாவட்ட துணை செயலாளர் முத்து, கல்லக்குறிச்சி மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி தலைவர் வேல்முருகன், கடலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் ஆடிட் டர் அருணாச்சலம், மயிலம் ஒன்றிய செயலாளர் அன்புக்கரசன், விருத்தா சலம் மாவட்ட இளைஞ ரணி துணைத் தலைவர் ஆ.செந்தில், வேப்பூர் வட்டாரச் செயலாளர் ம. இளங்கோவன், விருத்தாசலம் நகர அமைப்பாளர் சு. காரல் மார்க்ஸ், கலைவாணி பள்ளி நிர்வாகி சத்யவதி, செந்துறை ஒன்றியத் தலைவர் முத் தமிழ்ச்செல்வன், செய லாளர் செல்வகுமார், பெரியார் பிஞ்சுகள் மகிழன் ராமநாதன், வெற்றி மாறன், வெற்றி மகிழன், பெரியார் செல்வன், பொதுக்குழு உறுப்பினர் தங்க .இராசமாணிக்கம் உள்பட 70 க்கும் மேற் பட்ட தோழர்கள் பங் கேற்றனர். நிறைவாக விருத்தா சலம் மாவட்டச் செயலாளர் ப.வெற்றிச் செல்வன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment