அரூர் பறையப்பட்டியில் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 21, 2024

அரூர் பறையப்பட்டியில் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா!

featured image

அரூர், மார்ச் 21- அரூர் கழக, மாவட்டம் பறையப்பட்டியில் கழக மகளிர் அணி, மகளிர் பாசறை சார்பாக அன்னை மணியம்மையார் 106ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு 17- 3-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் அம்பேத்கர் திடலில் நடை பெற்றது.

அங்கு நிறுவப்பட்டுள்ள அம்பேத் கர் சிலைக்கு கழகத் தோழர்கள் கொள்கை முழக்கமிட கழக சொற்பொழிவாளர் தஞ்சை பெரியார் செல்வன் தலைமை யில் மகளிர் அணியினர் இணைந்து மாலை அணிவித்தனர். அதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த அன்னை மணியம்மையார் படத்தை கழக மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி திறந்து வைத்தார்.

பொதுக்கூட்டம்

திராவிடர் கழக மகளிர் பாசறை தலைவர் வேல்விழி தலைமையில் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழக வழக்குரைஞர் வடிவேலன் வரவேற்பு ரையாற்றினார். கழகக் காப்பாளர் அ. தமிழ்ச்செல்வன், கழக மகளிர் அணி பொறுப்பாளர்கள் மணிமேகலை, பெ. கல்பனா, புல்லட் மாரிமுத்து, செம்மலர், இந்துமதி, ஜெசியா, ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.
தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன், மாநில திமுக ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் அரூர் சா. இராஜேந்திரன், மாநிலக் கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி, திராவிடர் மாணவர் கழக மாநில செயலாளர் செந்தூரப் பாண்டியன், திமுக தலைமைக் கழக பேச்சாளர் செந்தாமரைக்கண்ணன், திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா. செல்லதுரை, மாநில பகுத்தறிவாளர் கழக செயலாளர் சி.என். அண்ணாதுரை, மாவட்ட இளைஞரணி செயலாளர் த. மு. யாழ் திலீபன், வழக்குரைஞர் வடிவேலன், ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.

இறுதியாக கழக சொற்பொழிவாளர் தஞ்சை பெரியார் செல்வன் தந்தை பெரியார் 95 ஆண்டு காலம் உயிர் வாழ்ந்தார் என்றால் மக்களுக்கு தொண்டாற்றினார் என்றால் அதற்கு அன்னை மணியாமையாரே காரணமாவார். தந்தை பெரியார் மறைவுக்கு பின் திராவிடர் கழகம் இருக்குமா? இயங்குமா என்ற கே ட்டவர்களுக்கு, இயக் கத்தை கட்டி காத்து தமிழர் தலைவரிடம் ஒப்படைத்து சிறப்பாக வழி நடத் தியவர் அன்னை மணியம்மையார் என் றும் இன்றைய ஒன்றிய மோடி அரசு மக்களுக்கு எதிராக செயல்படுவதை சுட்டிக்காட்டியதுடன் மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தது என்றால் ஒட்டுமொத்தமாக நமது உரிமை பறிக் கப்படும் எனவே நடைபெறும் மக்கள வைத் தேர்தலில் பிஜேபியை துடைத் தெறிய வேண்டும் என்று தனது சிறப்புரையில் குறிப்பிட்டார் பெரியார் செல்வன்.

இந்நிகழ்ச்சியில் ஊற்றங்கரை ஒன்றிய தலைவர் பொன்முடி, ஒன்றிய செயலாளர் சிவராஜ், பாளையம் சஞ்சீவன், ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் என்.டி.குமரேசன், பாஸ்டர் ஜெபமணி, வேப்பநத்தம் கிருஷ்ணன், கவிஞர் மு.பிரேம்குமார், ஒன்றிய கழக தலைவர் துரைராஜ், ஒன்றிய பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர் பிலவங்கன், சுயப்பிரகாசம், வேப்பநத்தம் பெரிய சாமி, மாணவிகள் அக்ஷயா, சுபர்னா, பொதுவுடைமை இயக்க பொறுப்பா ளர் சி.விஸ்வநாதன், ஊர் பொதுமக்கள் சக்கரைதேவன், சஞ்சீவன், குமரி ஆனந் தன், ராமமூர்த்தி, சிங்காரவேல், குமரே சன், சாரதி, ரவிசங்கர், சேகர், சுதி, சுகந்தி, சரண்யா, சிவரஞ்சனி, மற்றும் ஏராளமானஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
கூட்டம் நடைபெற்ற அம்பேத்கர் திடல் முழுவதும் கழகக் கொடி பறந் தது. கழகப் பாடல்கள் ஒலிபரப்பப் பட்டது. அனை வரையும் வரவேற்கும் விதமாக மாண வர்கள் கழகக் குடியினை கையில் ஏந்தி கொடியசைத்து வரவேற்றனர்.

இறுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட கழக இளைஞரணி தலைவர் சீனி முத்து ராஜேஷ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment