வேலூர் மாவட்ட காப்பாளர் குடியாத்தம் வி.சடகோபன் - ஈசுவரி இணையரது 50ஆம் ஆண்டு பொன்விழா மணநாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 3, 2024

வேலூர் மாவட்ட காப்பாளர் குடியாத்தம் வி.சடகோபன் - ஈசுவரி இணையரது 50ஆம் ஆண்டு பொன்விழா மணநாள் விழா


குடியாத்தம், மார்ச் 3- திராவிடர் இயக்கத்தில் 50ஆண்டுகள் தடம்பதித்து நிறைவுபெற்ற, வேலூர் மாவட்ட காப்பாளர், பெரியார் பெருந் தொண்டர் குடியாத்தம் வி.சடகோபன்-ஈசுவரி இணையரது 50ஆம் ஆண்டு பொன்விழா மணநாள் விழா குடியாத்தம் நகரில் சிறப்பாக நடைபெற்றது.
25.02.2024 அன்று குடியாத்தம் புவனேசு வரிப்பேட்டை லிட்டில் பிளவர் மெட்ரிகு லேஷன் பள்ளி வளாகத்தில், பள்ளி தாளாளர், வேலூர் மாவட்ட காப்பாளர், பெரியார் பெருந்தொண்டர் குடியாத்தம் வி.சட கோபன்-ஈசுவரி இணையர் இயக்கத்தில் இணைந்து 50 ஆண்டு மற்றும் பொன்விழா மணநாள் விழா, திராவிடர் கழக துணைத் தலைவர் இனமானக் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை மற்றும் சிறப்புரையுடன் நடை பெற்றது.
விழாவில் முன்னதாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வாழ்த்து காட்சிப்பதிவு ஒளிபரப்பப்பட்டது. மாநில ஒருங்கிணைப் பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன், மாநில இளைஞரணி செயலாளர் செந்தூர்பாண்டி யன், நகர தி.மு.க. மேனாள் பொறுப்பாளர்கள் ஏ.நடராசன், எஸ்.நடராசன், மாநில ப.க. துணைச்செயலாளர் அண்ணா.சரவணன், மாநில ப.க. அமைப்பாளர் இர.அன்பரசன், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கே.சி.எழில ரசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் நகர அமைப்பாளர் வி.மோகன், நகர இளைஞரணி நகண்ணன், மாவட்ட காப்பாளர் ச.கலைமணி, மாவட்ட தலைவர் வி.இ.சிவக்குமார், மாவட்ட செயலா ளர் உவிசுவநாதன், மாவட்ட மகளிரணி தலைவர் ந.தேன்மொழி, ப.க.மாவட்ட தலை வர் மருத்துவர் பழ.ஜெகன்பாபு. ப.க.மாவட்ட செயலாளர் மா.அழகிரிதாசன், மாவட்ட அமைப்பாளர் நெ.சி.சுப்பிரமணியன், ப.க. துணை செயலாளர் பி.தனபால், நகர தலைவர் சி.சாந்தகுமார், ப.க.மாவட்ட அமைப்பாளர் பேராசிரியர் வே.வினாயகமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி செயலாளரும், மாவட்ட திராவிடர் கழக மகளிரணி செயலா ளருமான வி.சடகோபனின் மகள் ச.இரம்யா கண்ணன் வரவேற்புரையாற்றினார். தாளாள ரின் பேத்தியும், பள்ளி துணை முதல்வரும். நகர திராவிட மகளிர் பாசறை தலைவருமான இரா.இராஜகுமாரி இணைப்புரை வழங்கினார். பள்ளி முதல்வர் மேகலா மற்றும் ஆசிரியர் களின் ஒருங்கிணைப்புடன் பள்ளி மாணவர் களின் வரவேற்பு நாட்டியம் நடைபெற்றது.
குடியாத்தம் வி.சடகோபன் – ஈசுவரி இணையர் 50ஆம் ஆண்டுகளில் இயக்கத் தில் பல்வேறு பிரச்சாரங்கள், போராட்டங் களில் பங்கேற்றது. சிறை சென்றது. தொழில், கல்விப்பணி குறித்து, அரை மணிநேர வரலாற்று காட்சிப்பதிவு ஒளிபரப்பப்பட்டது.
இயக்கத்தின் முன்னணியினர். உறவினர் களின் வாழ்த்துகள் காட்சிப்பதிவாக ஒலிபரப் பப்பட்டது. விழாவிற்கு வருகை தந்த அனை வருக்கும், தமிழர் தலைவரின் “வாழ்வியல் சிந்தனைகள்”, “கோபத்தை பொய்யாக்கு வோம்” புத்தகத்துடன் பொன்விழா நாள் அறிவிப்பாக. பெரியார் பெருந்தொண்டர் களின் இறுதிநாள் விருப்ப அறிவிப்பு” வெளியீடும் இணைத்து வழங்கப்பட்டன. இயக்கத் தோழர்களுடன் இணைந்த குடும்ப விழா கொள்கை உணர்வுடன் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
மணநாள் பொன்விழாவை முன்னிட்டு 19.02.2024 அன்று கழகத் தலைவர் தமிழர் தலை ஆசிரியர் அவர்களிடம் பெரியார் உல கம் நிதியாக ரூ.பத்தாயிரம் வழங்கப்பட்டது. தமிழர் தலைவரும் பொன்விழா மண நாயகர் களுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துக் கூறினார்.

No comments:

Post a Comment