கருநாடகாவுக்கு உரிய நிதி ஒதுக்காது ஏன்? டில்லியில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 8, 2024

கருநாடகாவுக்கு உரிய நிதி ஒதுக்காது ஏன்? டில்லியில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் போராட்டம்

featured image

புதுடில்லி, பிப்.8 ஒன்றிய அரசை கண்டித்து கருநாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் டில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் நேற்று (7.2.2024) போராட்டம் நடத்தினர். இதில் கருநாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், அமைச் சர்கள், காங்கிரஸ் நாடாளுமன்ற, சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த போராட்டத்துக்கு பிறகு சித்தராமையா கூறியதாவது:

ஒன்றிய அரசு, வரிப் பகிர்வில் கருநாடகாவுக்கு அநீதி இழைத்துள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு கர்நாடகாவுக்கு ரூ.45,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் கருநாடகாவுக்கு ரூ.14.87 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கருநாடகாவுக்கு வழங்க வேண்டிய ரூ.1 லட்சம் கோடியை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும். மேல் பத்ரா நீர்ப்பாசன திட்டத்துக்கு அறிவிக்கப்பட்ட ரூ.5,300 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.கருநாடகாவில் 220 வட்டங்கள்வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால் ரூ.17 ஆயிரம் கோடியை உடனடியாக நிவாரணமாக தரவேண்டும். இவ்வாறு சித்தராமையா கூறினார்.

No comments:

Post a Comment