பள்ளி வாகனங்களுக்கு விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் போக்குவரத்து ஆணையர் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 17, 2024

பள்ளி வாகனங்களுக்கு விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் போக்குவரத்து ஆணையர் அறிவிப்பு

சென்னை,பிப்.17- தமிழ்நாடு போக்குவரத்து ஆணை யர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 46 ஆயிரத்து 734 பள்ளிக் குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோக் கள் உள்பட அனைத்து பள்ளி வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 6,754 பள்ளி வாக னங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் பட்டது. ரூ.1.36 கோடி அபராதம் தொகை வசூ லிக்கப்பட்டது.
பள்ளி மாணவ-மாண விகளை விதிமுறைகளை மீறி மிக அதிகமாக ஏற்றி செல்லும் வாகனங்கள் தொடர்ந்து கடுமையான சோதனைக்கு உள்ளாக் கப்பட்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படு கிறது. பெற்றோர்களும், பள்ளி நிர்வாகமும் அவ்வப்போது தங்களது குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றிச்செல்லும் வாகனங்களின் ஓட்டு நர்கள் பாதுகாப்பாக ஓட்டுகின்றனரா? சாலை விதிகளை ஒழுங்காக கடைப் பிடிக்கிறார்களா? குழந்தைகளிடம் ஒழுங் காக நடந்து கொள்கிறார் களா? என்பதையும் விசா ரித்து அந்தந்த மோட் டார் வாகன ஆய்வாளர் களுக்கோ அல்லது வட் டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கோ நேரிலோ அல்லது தொலைப்பேசியிலோ, மின் அஞ்சல், வாட்ஸ் அப் மூலமாகவோ புகார் களை தெரிவிக்கலாம்.
மேலும் பொதுமக் களும் சாலைகளில் அதி வேகமாக பள்ளி குழந் தைகளை ஏற்றி செல்லும் வாகனங்களை கண்டால் புகார் அளிக்கலாம். மோட்டார் வாகன ஆய் வாளர்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவ லர்களை தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலக எண்கள், செல்போன்கள் www.tnsta.gov.in  என்ற இணைய தளத்தில் கொடுக்கப் பட்டுள்ளன. பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்க ளுக்கு விரிவான வழி முறைகளை கொடுப்ப தற்கு குழு அமைக்கப் பட்டு அந்த குழுவும் பிற மாநிலங்களில் உள்ள சிறந்த நடைமுறைகளை ஆராய்ந்து ஒரு அறிக் கையை அளித்துள்ளது. அதனடிப்படையில் விரி வான வழிகாட்டு நெறி முறைகள் வெளியிடப் படும், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment