பார்ப்பனரே இல்லாத ஓர் அமைப்பு இருக்கிறதென்றால், திராவிடர் கழகம்தான்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 4, 2024

பார்ப்பனரே இல்லாத ஓர் அமைப்பு இருக்கிறதென்றால், திராவிடர் கழகம்தான்!

featured image

பார்ப்பனரே இல்லாத ஓர் அமைப்பு இருக்கிறதென்றால், திராவிடர் கழகம்தான்!
இந்தியா முழுவதும் திராவிட அலை வீசுகிறது- திராவிட இந்தியா ஆகிறது!
திராவிட மாணவர் கழகத் தோழர்களிடையே கவிஞர் கலி.பூங்குன்றன் உரை

சென்னை, பிப்.4- ‘‘இந்தியா முழுவதும் திராவிட அலை வீசுகிறது- திராவிட இந்தியா ஆகிறது” என்றார் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள்.
திராவிட மாணவர் கழகம் சார்பில் கடந்த 1-2-2024 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற கருத்தரங்கில் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் உரையாற்றியபோது குறிபிப்பிட்டதாவது,
ஒருமுறை கோவை பொதுக்கூட்டத்தில் தந்தை பெரி யாரிடம் கேள்வி தொடர்ச்சியாக பார்வையாளர்களால் கேட்கப்பட்டு, அவரும் தொடர்ந்து பதில் சொன்னார். பொதுக் கூட்டங்களில்

கேள்வி – பதில் என்பது திராவிடர் கழகத்தில்தான். இந்த கூட்டத்தை ஒரு பயிற்சிப் பட்டறையாகவே நான் நினைக்கிறேன்.
நாம் அனைவரும் பெருமிதமடைந்தோம்!

10-1-1948 ‘குடிஅரசு’ ஏட்டில் தந்தைபெரியார் பேச்சு வெளியாகியுள்ளது அதில், சிறுவனான தன்னை தந்தை பெரியார் மாநாட்டுக்கு தலைமை ஏற்கச் செய்துள்ளார் என்று அவர் கூறியபோது நாம் அனைவரும் பெருமித மடைந்தோம்!

அதுபோல் மாணவர்கள் நீங்கள் பலர் இங்கு வந்துள் ளீர்கள். இயக்கம் வளர்ச்சிப்பாதையில் சென்று கொண் டிருக்கிறது.
இந்த வார ‘துக்ளக்’கில், ‘‘வீரமணி சொல்கிறார் திராவிட இந்தியா என்று, எங்கே இருக்கிறது திராவிட இந்தியா? பெரியார் திடலுக்குள் 4 மாமரங்களுடன் இருக்கிறது” என்று குருமூர்த்தி கூறியுள்ளார். அவர் எப்போது திடலுக்கு வந்தாரோ?
முன்பு சமூக நீதிக்காவலர் வி.பி.சிங், பின்னர் கலைஞர் என்று வசைபாடியவர்களுக்கு இப்போது திரா விடர் கழகத் தலைவர் மீதும், இயக்கத்தின் மீதும்தான் குறியாக உள்ளனர். அவர்கள் அப்படியே பேசிக் கொண்டிருக்கட்டும்.
மாணவர்கள், இளைஞர்கள் இயக்கத்தை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.

வாராவாரம் பயிற்சிப் பட்டறை நடத்தும் ஒரே இயக்கம் திராவிடர் கழகம்தான்!

வாராவாரம் சனி, ஞாயிறுகளில் பயிற்சிப் பட்டறை நடத்தும் ஒரே இயக்கம் திராவிடர் கழகம்தான்.
வரும் தேர்தலில் மற்ற அரசியல் கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் என்றிருப்பார்கள். ஆனால், இந்தத் தேர்தல் சித்தாந்தங்களுக்கு இடையிலான போராட்டம் ஆகும். தந்தைபெரியார் சொல்வதைப்போல, நடந்து கொண்டிருப்பது ஆரிய – திராவிடர் போராட்டம்தான்.
திராவிடர் கழகம் எங்கே இருக்கிறது என்று ‘துக்ளக்’ கேட்கிறது. பார்ப்பனர்கள் நேரடியாக மோத மாட்டார்கள். தந்தைபெரியார் சொல்வார், ‘‘நிஜப்புலியை விட வேஷம் போட்ட புலி வேகமாக குதிக்கும்’ என்று. அதைப்போல், மோடி வேஷம் போட்ட புலி. நாக்பூர் ஆட்டிப் படைக்கிறது. பார்ப்பனர்கள் மோடியை முன்னிறுத்தி பின்னாலிருந்து இயக்குகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். திட்டங்களை செயல்படுத்துகிறார்கள். தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறினார் என்றால் அதற்கு காரணம் சமூகநீதிதானே!
1940இல் திருவாரூரில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டின் தீர்மானத்தில், இந்திய அரசு இலாகாக்களில் இடஒதுக்கீடு வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 50 ஆண்டுகள் கழித்து அது நடைமுறைக்கு வந்தது.
திராவிடர் கழகத்தின் பலம் அல்லவா?
தந்தை பெரியார் இருந்தபோது நம்முடை தமிழ் நாட்டில் இடஒதுக்கீடு 49 விழுக்காடு. தந்தை பெரியார் இல்லாத காலத்தில், இந்த தலைவர் காலத்தில் நாம் அனுபவிப்பது 69 விழுக்காடு. இது திராவிடர் கழகத்தின் பலம் அல்லவா?

காவி வேட்டி, நெற்றியில் பட்டை போட்டவரின் பாராட்டு!

எல்லாரிடமும், பார்ப்பனரல்லாதார் பலரிடமும் திராவிடர் கழக உணர்வு இருக்கிறது. கடவுள் நம்பிக் கையில் வேண்டுமானால் வித்தியாசம் இருக்கலாம். திராவிடர் கழக உணர்வு இல்லாத பார்ப்பனரல்லாதார் ஒருவர்கூட கிடையாது. வெளிப்படையாக சொல்லாமல் இருப்பார்கள். திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலையில் கையை முறித்துவிட்டான் மறுநாள் காலையிலே சாலை மறியல் நடக்கிறது. தொலைக்காட்சியில் படம் எடுக்கிறார்கள், பேட்டி கண்டார்கள். காவி வேட்டி, நெற்றியில் பட்டை போட்டுக்கொண்டு ஒருவர் சாலை மறியலில் உட்கார்ந்திருக்கிறார். அவரிடம் செய்தியாளர், ‘‘ஏனய்யா, பெரியார் கடவுள் இல்லை என்றவர், நீங்கள் பட்டை போட்டுக்கொண்டு காவி வேண்டியில் இருக் கிறீர்களே, நீங்கள் ஏன் இங்கே உட்கார்ந்திருக்கிறீர்கள்” என்று கேட்டதற்கு, ‘‘அட, போய்யா, எனக்குத் தெரியாதா அவர் கடவுள் இல்லை என்று சொன்னார் என்று. இன் னைக்கு என் மகன்… அமெரிக்காவில் எஞ்சினியரா இருக்கிறான் தெரியுமா? இந்த கிழவனால்தான்யா!” என்றார்.

‘துக்ளக்’ கேட்கிறதே திராவிடர் கழகம் எங்கே இருக் கிறது என்று, வந்த பாருங்கள் எங்கே இருக்கிறது என்று.
இன்றைக்கு ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று சொல்லிவிட்டாரே முதலமைச்சர். தந்தைபெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாள் என்று அறிவித்து அய்.ஏ.எஸ். பார்ப்பானிலிருந்து அடிமட்ட ஊழியர்வரை உறுதிமொழி எடுக்க வைத்தாயிற்றே. திராவிடர் கழகம் எங்கே இருக்கிறது- எல்லா இடத்திலேயும் இருக்கிறது.
தந்தைபெரியார் குறித்த புத்தகங்கள் பல்வேறு மொழிகளில் வெளியாகி வருகின்றன. பஞ்சாபில் Collected Works of Periyar புத்தகம் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது. வங்காளத்திலிருந்து ஒரு புத்தகம் வருகிறது, தந்தை பெரியாருடைய இராமா யணப் பாத்திரங்கள் என்ற புத்தகம் மொழிபெயர்க் கப்பட்டு வருகிறது.

இந்தியா முழுவதும் திராவிட அலை வீசப்போகிறது!

ஆசிரியர் அவர்கள் கூறுகிறார் என்றால் விளை யாட்டல்ல. இந்தியா முழுவதும் திராவிட அலை வீசப்போகிறது.திராவிட இந்தியா உருவாகப்போகிறது.
உண்மையான வரலாற்றை எடுத்துக்கொண்டால்கூட, இந்தியா முழுவதும் ஒரு காலத்தில் திராவிடர்கள் வாழ்ந்தார்கள். இதை அம்பேத்கர் சொல்லியிருக்கிறார். இந்தியா முழுவதும் வாழ்ந்தவர்கள் திராவிடர்கள். பின் னாளில் ஏற்பட்ட ஆரியப் படையெடுப்பின் காரணமாக, ஆரியர்கள் நுழைந்ததற்குப்பின்னாலே, திராவிடர்கள் தெற்கே வந்தனர்.நாகர்கள் திராவிடர்கள்தான். பார்ப் பனர் அல்லாதார் அனைவருமே திராவிடர்கள்தான் என்று அம்பேத்கர் கூறியிருக்கிறார்.
திராவிடர் என்றால்தான் பார்ப்பன எதிர்ப்பு உணர்ச்சி தெரிகிறது.
பார்ப்பனரே இல்லாத ஓர் அமைப்பு இருக்கிறதென்றால், திராவிடர் கழகம்தான்
தந்தை பெரியார் கூறுகிறார், நாம் வைக்கும் பேரில் பார்ப்பன தூசு கூட உள்ளே நுழைந்துவிடக்கூடாது என்றார்.
பார்ப்பனர் உள்ளே நுழைந்தால் என்ன ஆகும்? பவுத்த மார்க்கத்துக்கு ஏற்பட்ட கெதிதான் ஏற்படும்.

இன்றைக்கு, பார்ப்பனரே இல்லாத ஓர் அமைப்பு இருக்கிறதென்றால், திராவிடர் கழகம்தான்.
ஒன்றிய பாஜக அரசு ஆர்.எஸ்.எஸ். அரசுதான். கல்விக்கண்ணைக் குத்தி வருகிறது. சமூக நீதிக்கு எதிரான சதியைத் தீட்டி வருகிறது. நீட் தேர்வை திமுக எதிர்க்கிறது என்றவுடன், காங்கிரஸ் அரசு கொண்டு வந்ததுதானே என்கிறார்கள். அப்போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்த கலைஞர் நீட்டை ஏற்கவில்லை. சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது உச்சநீதிமன்ற அமர்வு இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு தேர்வு நடத்தும் அதிகாரம் இல்லை என்று நீட்டுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. மூன்று நீதிபதிகளில் இருவர் நீட் கூடாது என்று தீர்ப்பு அளித்தனர். அப்போதே நீட் ஒழிக்கப்பட்டது.

ஆனால், பிஜேபி ஆட்சியில்தான் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு, நீட்டுக்கு எதிரான வழக்கில் நீட்டுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நீதிபதி ஏ.ஆர்.தவே என்பவரை தலைவராகக்கொண்ட அமர்வு விசாரணை செய்தபோது மீண்டும் நீட் தேர்வு திணிக் கப்பட்டது. நீட் தேர்வு செல்லும் என்று ஒரு தீர்ப்பை வாங்கிவிட்டார்கள். தான் ஒரு இட்லராக இருந்தால் பகவத் கீதையை எல்லா கல்வி நிறுவனங்களிலும் பாடத் திட்டத்தில் கட்டாயம் சேர்க்க வேண்டும் என்று கூறுவேன் என்றவர் ஏ.ஆர்.தவே.

மோடியின் இரட்டை வேடத்தை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்!

குஜராத் முதலமைச்சராக மோடி இருந்தபோது நீட் தேர்வை எதிர்த்தவர். குஜராத்தில் மருத்துவக்கல்லூரிகள் சிறப்பாக உள்ளன. எங்களுக்கு நீட் தேர்வு வேண்டாம் என்றார். இன்றைக்கு அவரே நீட்டை திணிக்கிறார். அதேபோல்தான் ஜிஎஸ்டியும். மோடியின் இரட்டை வேடத்தை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
2016 வரை நீட் தேர்வு இல்லை. தமிழ்நாட்டில் மருத்துவக்கல்வியில் 75 ஆயிரம் மாணவர்களில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வெறும் 300 இடங்கள் கிடைத்தது.. நீட் தேர்வு வந்தபின்னர் 9ஆயிரம் மாணவர்களில் 4500 பேராக 50 விழுக்காட்டளவில் சிபிஎஸ்இ மாணவர்கள் வந்தனர். நீட் தேர்வு கேள்விகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படி இருந்ததுதான் காரணம். மற்ற பாடத்திட்டங்களில் படிக்கும் மாணவர்கள் நிலை என்ன ஆவது?

இந்தியாவில் சிபிஎஸ்இ மட்டும்தான் பாடத்திட்டமா? ஸ்டேட் போர்டு இல்லையா? மெட்ரிக்குலேஷன் இல்லையா? ஆங்கிலோ இண்டியன் ஸ்கூல் இல்லையா? இன்னும எத்தனை கல்வித்திட்டங்கள் இருக்கின்றன? அதிலென்ன சிபிஎஸ்இயில் மட்டும் நடத்த வேண்டும்?
ஒரு காலக்கட்டத்தில் மருத்துவம் படிப்பதற்கு சமஸ்கிருதம் கட்டாயம் என்று இருந்தது தந்தைபெரியார் எதிர்த்தார், நீதிக்கட்சி பனகல் அரசர் மாற்றினார்.
இன்று சமஸ்கிருதம் இல்லை ஆனால், நீட் வந்துள்ளது.

2016-2017இல் தமிழ்வழியில் படித்தவர்கள் 537 பேர் மருத்துவக்கல்வியில் சேர்ந்தனர். நீட்டுக்குப்பிறகு 52 பேர்தான். மருத்துவக்கல்வி படிக்க விடாமல் தடுப்பது எது? நீட் தேர்வுதான்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்தான் உடனடி யாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். தொடர்ந்து கழகஇளைஞரணியின் இரு சக்கர வண் டியில் விழிப்புணர்வு பயணங்கள், போராட்டங்கள், எதிர்ப்புகள் என தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஆகாஷ் என்கிற தனியார் நிறுவனம் நீட் பயிற்சி என்று ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் மேல் வசூலிக் கிறது. அப்படி தனியார் பயிற்சி நிறுவனங்களில் 2 ஆண்டுகள் பயிற்சிக்குப் பின்னரே மருத்துவர் ஆகலாம் என்றால், ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர்கள், கிராமப்புற மாணவர்களின் நிலை என்னாவது?குப்பனும், சுப்பனும் எப்படி மருத்துவர் ஆவது?

தந்தை பெரியார் போராடிய பின்னர்தான் 1950இல் முதல் சட்டத்திருத்தம் வந்தது
ணிகீஷி என்று பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்ஜாதியினர் என்று கூறிக்கொண்டு 10 விழுக்காடு கொண்டு வந்துள்ளனர். அரசமைப்புச்சட்டத்தின்படி அது சரியா? சமூக, கல்வி ரீதியில்தான் இடஒதுக்கீடு உள்ளது. பொருளாதார அடிப்படை இல்லை. சுதந்திர இந்தியாவில் முதலில் காவு வாங்கப்பட்டது – இந்த சமூக நீதிதான். தந்தை பெரியார் போராடிய பின்னர்தான் 1950இல் முதல் சட்டத்திருத்தம் வந்தது. அப்போதே நாடாளுமன்றத்தில் பொருளாதார அடிப்படைக்கு ஆதரவாக 5 வாக்குகளும், எதிராக 243 வாக்குகளும் அளிக்கப்பட்டு, பொருளாதார அளவுகோல் கிடையாது என்றானது.

நாளொன்றுக்கு ரூ.2500 சம்பாதிக்கக் கூடியவன் பார்ப்பானாக இருந்தால் ஏழையா?

பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு என்று கூறியதற்கு குஜராத் மாநிலத்தில் உயர்நீதிமன்றம் செல் லாது என்று கூறிவிட்டது. மத்தியப்பிரதேசமும், அப்படித்தான். நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு என்பதை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.ஆனால், இன்று பொருளாதார அடிப்படையில் உயர்ஜாதியில் நலி வடைந்த வர்களுக்கு 10 விழுக்காடு எப்படி வந்தது? நீதித்துறை வரை இந்த ஆட்சியால் எந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். வர்க்கத்தில்கூட வருணம் உள்ளது. ஆண் டுக்கு 8 லட்சம், நாளொன்றுக்கு 2500 ரூபாய் சம்பாதிக்கக் கூடியவன் பார்ப்பானாக இருந்தால் ஏழையா?

நம் ஆள் 20 கோடி பேர் இரவு நேரத்தில் சாப்பாடு இல்லாமல் தூங்குகிறான் என்று புள்ளிவிவரம் சொல் கிறது. அவன் ஏழை இல்லை. அதனுடைய விளைவு இன்றைக்கு என்ன? ஸ்டேட் பாங்கு தேர்வு கட்ஆப் மதிப்பெண் எஸ்.சி., எஸ்.டி.க்கு 61 மதிப்பெண்கள். ணிகீஷி-க்கு 28 மதிப்பெண்கள் என்றால் இதுதான் சமூகநீதியா?
மனுதர்மத்தில் படிக்கக்கூடாது என்று சொன்னான் என்றால், அது வேறு வேறு வடிவத்தில் வந்து நம்முடைய கல்விக்கண்களைக் குத்திக்கொண்டே இருக்கிறார்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

2018இல் நீட் தேர்வு வினாத்தாள் அமெரிக்காவில் புரோமெட்ரிக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. அப் போது அந்த கேள்வித்தாள் கசிந்து வெளியானது. ஹேக் செய்து விட்டார்கள் என்றார்கள். தேர்வை ரத்து செய்தார்களா என்றால் இல்லை.
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவர் ஆனவர்கள் பிற்படுத்தப் பட்டவர்கள், எஸ்.சி., எஸ்.டி பிரிவினர் என பலரும் உலகம் முழுவதும் சிறப்பாக உள்ளனர்.

‘நீட்’ தேர்வால் நம்முடைய மாணவர்களின் மருத்துவப் படிப்பு தடுக்கப்பட்டுள்ளது. இப்போது ‘கியூட்’ தேர்வு என்று மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ளது. திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகம், கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம், திண்டுக்கல் காந்தி கராம பல்கலைக்காகம், புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகங்களில் நம் மாணவர்கள் போகமுடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அய்.அய்.டி.களில் பிற்படுத்தப்பட்டவர்கள், எஸ்.சி., எஸ்.டி மாணவர்கள் மட்டுமே தற்கொலை செய்து கொள்கின்றனர். முதல் தலைமுறையாக கல்விக்கூடங் களில் பயிலும் நம்முடைய தாழ்த்தப்பட்ட, பிற்படுத் தப்பட்ட இருபால் மாணவர்களைத் தடுக்கிறார்கள்.

மீண்டும் வருணாசிரமத்தை திணிக்கிறார்கள்!

மீண்டும் வருணாசிரமத்தை திணிக்கிறார்கள் என் றால் அதன் தத்துவத்தை பார்க்க வேண்டும். ராமன் கோவில் தத்துவம் என்ன? தவம் செய்தான் என்று சூத்திரன் சம்பூகனை வெட்டிக் கொன்றவன்தானே ராமன்? அதன் அர்த்தம் என்ன? ஆகவே, சித்தாந்த ரீதியாக பார்க்க வேண்டும் இந்த அரசை. அதைப் பார்க்கக்கூடிய ஒரே இயக்கம் திராவிடர் கழகம்தான். அதற்கான சித்தாந்தத்தை தந்த ஒரே தலைவர் தந்தை பெரியார்தான். அதனை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்லக்கூடிய ஒரே தலைவர் நம்முடைய தலைவர்தான்.
-இவ்வாறு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தமதுரையில் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment