பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) கணினி அறிவியல் மற்றும் பொறியியல் தொழில்நுட்ப மாணவர்கள் சாதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 17, 2024

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) கணினி அறிவியல் மற்றும் பொறியியல் தொழில்நுட்ப மாணவர்கள் சாதனை

featured image

மைக்ரோசாப்ட் (பவர் பிஅய்) நிறுவனத்தில்
தரவு ஆய்வாளர்களாக 61 பேர் தேர்வு

வல்லம், பிப். 17- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சமூகப்பணித்துறை கணினி அறிவியல் மற்றும் பொறியியல் தொழில் நுட்ப மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். மைக்ரோசாப்ட் (பவர் பிஅய்) நிறுவனத்தில் தரவு ஆய்வாளராக 61 மாண வர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள னர். இம் மாணவர்களைப் பாராட்டி ICT அகாடமியின் பயிற்சி நிறைவு மற்றும் தேர்ச்சிச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டு மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இன் றைய தமிழ்நாட்டு அரசு பல் வேறு சிறப்புத் திட்டங்களை முனைப்போடு செயற்படுத்தி வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங் கள் வழங்கும் சமூகப் பொறுப்பு நிதியைக்கொண்டு தமிழ்நாட்டு அரசின் வழிகாட்டலோடு தக வல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாட்டின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான பல திட் டங்கள் அய்.சி.டி அகாடெமி வழியாகவும் செயற்படுத்தப்படு கின்றன. அவற்றுள் ஒன்று இளையோர் ஆளுமைத்திறன் மேம்பாட்டுத் திட்டமாகும்.

இத்திட்டத்தின் வழியாக அய்.சி.டி அகாடெமி (Auto Foun dation) நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியைக்கொண்டு பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பயிலும் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் தொழில்நுட்பம் பயிலும் 64 மாணவர்களுக்கு°(Microsoft Power BI Data Analyst Associate -தரவு ஆய்வாளர் அசோசியேட்ஸ் சான்றிதழ்த் தேர்வுக்கான 100 மணி நேரப் பயிற்சியை கட்டண மின்றி வழங்கியது.
பல்கலைக்கழகப் பதிவாளர் பேரா. பி.கே.சிறீவித்யா அவர்க ளின் தொடக்கவிழா வாழ்த்து ரையோடு 21.08.2023 அன்று தொடங்கி 08.09.2023 வரை நடைபெற்ற இத்தொழில்நுட்பப் பயிற்சியை, அய்.சி.டி அகா டொமிக்கான பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் பேராசிரி யர் சா.ப.இரம்யா சிறப்பான முறையில் கட்டமைத்து வழி நடத்தினார். இப்பயிற்சியைச் சிறப்பாக முடித்துத் தேர்வெழு திய 64 மாணவர்களுள் 61 பேர்(Microsoft Power BI Data Analyst Associate ) –தரவு ஆய்வாளர் அசோசியேட்ஸ் எனும் தேர்ச்சிச் சான்றிதழ் பெற்றனர்.

இதன் பாராட்டு மற்றும் சான்றளிக்கும் விழா பல்கலைக் கழக துணைவேந்தர் பேரா. செ. வேலுசாமி தலைமை யில் நடைபெற்றது. கணினி அறிவியல் மற்றும் பொறியியல் தொழில்நுட்பத் துறைத் தலை வர் பேரா. பூங்குழலி, கணினி அறிவியல் புலத் தலைவர் பேரா. சர்மிளாபேகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாணவர்களின் வேலை வாய்ப்புக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விழாவில், ICT அகாடெமியின் தமிழ்நாடு மாநி லத் தலைவர் பூர்ண பிரகாஷ் சிறப்பு விருந்தினராகப் பங் கேற்று மாணவர்களின் திறன் மேம்பாடு பற்றிய பல அரிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டு சான்றிதழ்களையும் வழங்கினார். இப் பயிற்சிக்குத் துணைநின்று செயற்படுத்திய துறைப் பேராசிரியர் மற்றும் அய்.சி.டி அகாடெமியின் மண் டல ஒருங்கிணைப்பாளர்கள் காளிராஜ், கிருஷ்ணசாமி ஆகிய பலரும் இவ்விழாவில் பங்கேற் றுச் சிறப்பித்தனர்.
விழாவில் தேர்ச்சிச் சான் றிதழ் பெற்ற மாணவர்கள், இப் பயிற்சியும் சான்றிதழும் தங்க ளுக்கான வேலை வாய்ப்பை உறுதி செய்வதில் பெரும் பங் காற்றும் என்றும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment