தோழி விடுதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 25, 2024

தோழி விடுதி

featured image

உலக வங்கியின் மேலாண்மை இயக்குநர் தகவல்!
உலக நாடுகளுக்கு வழிகாட்டியான திட்டம்:
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் “தோழி விடுதி” திட்டம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்!

சென்னை, பிப். 25 – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை 23.2.2024 அன்று முகாம் அலுவலகத்தில், உலக வங்கியின் மேலாண்மை இயக்குநர் திருமதி அன்னா ஜெர்டே (Ms. Anna Bjerde) உலக வங்கியின் உயர்மட்ட குழுவினருடன் சந்தித்துப் பேசினார்.

அப்போது, உலக வங்கியின் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு அரசின் சார்பில் தாம்பரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும், பணிபுரி யும் பெண்களுக்கான குறைந்த வாடகையில், தரமான மற்றும் பாது காப்பான தங்கும் விடுதி திட்டமான “தோழி” விடுதியை பார்வையிட்ட தாகவும், மிகவும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட் டத்திற்கு தனது பாராட்டினை தெரிவித்து, இத்திட்டம் உலக நாடுகளுக்கு ஒரு வழிகாட்டியான திட்டமாகும் என்று தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், உலக வங்கியின் நிர்வாக இயக்குநரை வரவேற்று, தமிழ்நாட்டின் வேளாண் கடன் திட்டத் திற்கு 1971-ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டதிலிருந்து தமிழ்நாட்டிற்கும் உலக வங்கிக்கும் நீண்டகால உறவு இருப்பது குறித்தும், அப்போதிலிருந்து மாநிலத்தின் உள் கட்டமைப்பை மேம்படுத்தவும், சமூக வளர்ச்சியை ஊக்குவிக்கவும், சமச் சீரான பொருளாதார வளர்ச்சியை அடையவும் உலக வங்கி பல வெற்றி கரமான ஒத்துழைப்புகளை அளித் துள்ளது குறித்தும், தற்போது, உலக வங்கி நிதியுதவியுடன் நடைமுறை யுள்ள 8 திட்டங்கள் குறித்தும், மேலும் ஆலோசனை நடைபெற்று வரும் 3 திட் டங்கள் குறித்தும் எடுத்துரைத்து, அனைத்துத் திட்டங்களுக்கும் உலக வங் கியின் ஆதரவைத் தொடர்ந்து எதிர் பார்ப்பதாக தெரிவித்தார். மேலும், அவர் களது தமிழ்நாட்டுப் பயணம் பயனுள்ள தாக அமைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

தலைமைச் செயலா ளர் சிவ் தாஸ் மீனா, முதலமைச்சரின் கூடுதல் தலை மைச் செயலாளர் நா.முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன், தெற்காசிய மண் டல துணைத் தலைவர் மார்டின் ரைசர், பன்னாட்டு நிதி நிறுவன Country Manager வெண்டிவெர்னர் (Ms. Wendy Werner),உலக வங்கியின் பங்கு நிதி நிறுவனங்களின் திட்டத் தலைவர் (Equity Finance Institutions, Program Leader) பாவ்னா பாட்டியா, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத்தின் முது நிலை துணைத்தலைவர் டி. ராஜேந் திரன் ஆகியோர் இச்சந்திப்பின்போது உடனிருந்தனர்.

No comments:

Post a Comment