கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 5, 2024

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

5.1.2024
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, தென் மாவட்ட வெள்ள பாதிப்புக்கான நிவாரண நிதியை உடனே வழங்குமாறும் பிரதமரிடம் வலியுறுத்தியதாக கூறினார். டில்லியில் பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்த பின்னர், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரையும் சந்தித்துப் பேசினார்.
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
* மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் கிறிஸ்துவ சமுதாயத்தினர் மீதான வன்முறை தொடர்வதாக கூறி, பிரதமர் மோடியின் கிறிஸ்து பிறந்த நாள் விருந்து அழைப்பை மூவாயிரம் கிறிஸ்துவ பிரதிநிதிகள் நிராகரிப்பு.
* ராகுல் காந்தி வரும் 14ஆம் தேதி துவங்கவிருக்கும் பாரத நியாய யாத்திரைக்கு பாரத ஒற்றுமை நியாய யாத்திரை என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இது, 15 மாநிலங்கள் வழியாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* உடல் நலம் சரியில்லை என்றால் மக்கள் மருத்துவ மனைக்குத் தான் செல்வார்கள்; கோயிலுக்கு அல்ல என தேஜஸ்வி பேச்சு.
* ராமன் புலால் உணவு உண்பவர் என்கிறார் தேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜிதேந்தர் ஆவாத்.
தி டெலிகிராப்:
* மக்களவைத் தேர்தலுக்கு பிரசாரம் செய்வதை தடுக்க அமலாக்கத்துறை மூலம் தன்னை கைது செய்ய பாஜக விரும்புவதாக ஆம் ஆத்மி தலைவரும், டில்லி முதலமைச் சருமான அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்.
* தமிழ்நாடு அரசு கோரிய வெள்ள நிவாரண நிதியை வழங்கக் கோரி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
– குடந்தை கருணா

No comments:

Post a Comment