பெரியார் மணியம்மை (நிகர்நிலை பல்கலைக்கழகம்) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் திராவிடர் திருநாள்-அய்ந்தினை பொங்கல் கலை விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 13, 2024

பெரியார் மணியம்மை (நிகர்நிலை பல்கலைக்கழகம்) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் திராவிடர் திருநாள்-அய்ந்தினை பொங்கல் கலை விழா

featured image

வல்லம், ஜன. 13- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் திராவிடர் திருநாள் அய்ந்தினை பொங்கல் கலை விழா மற்றும் சமத்துவ பொங்கல் விழா பல்கலைக்கழக பதிவாளர் பேரா பி.கே.சிறீவித்யா மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா செ.வேலுசாமி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கூட்டு பணியாளர் நலமன்ற சார்பாக பணியாளர்கள் மற்றும் மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பல்வேறு போட்டிகளான சிலம்பாட்டம், பறையடித்தல், கரகாட்டம், கும்மியடித்தல், உறியடித்தல், கோலப்போட்டி, இசை ஆகிய போட்டி களும், மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் மற்றும் அனைத்துத் துறைகளைச் சார்ந்த பேராசிரியர்கள் மாணவர்கள் நமது பாராம்பரியமான அய்ந்து நிலங்களில் விளையக்கூடிய உணவு வகைகளான (குறிஞ்சி) – அரிசி பொங்கல், (முல்லை) – தினை பொங்கல், (மருதம்) – அரிசி பொங்கல், (நெய்தல்) – சாமை பொங்கல், (பாலை) – மூங்கில் அரிசி பொங்கல் போன்ற அய்ந்து வகையான பொங்கலினை வைத்து சிறப்பாக திராவிடர் திருநாளினை அய்ந்தினை பொங்கல் விழாவாக கொண்டாடினார்கள்.

மேலும் இவ்விழாவில் அனைத்துத் துறைகளைச் சார்ந்த முதன்மையர்கள், இயக்குநர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் அய்ந்து குழுக்களாக பிரிந்து திராவிடர் திருநாள் – அய்ந்தினை பொங்கல் விழாவினை கொண் டாடினார்கள். கட்டட எழிற்கலை துறையினர் மற்றும் மாணவர் நல மன்றத்தினர் இணைந்து விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

No comments:

Post a Comment