கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 4, 2024

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

4.1.2024

டெக்கான் கிரானிக்கல்,சென்னை
♦சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் திட்டத்தை மோடி அரசு கைவிட்டது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்
♦ பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வன்முறை வழக்கில் குற்றவாளிகளை பா.ஜ.க. ஆதரிக்கிறது என கருநாடக முதலமைச்சர் சித்தாராமைய்யா குற்றச்சாட்டு.
♦ குடியுரிமைக்கு மதம் அடிப்படையாக இருக்க முடியாது என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மணீஷ் திவாரி காட்டம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
♦ இஸ்ரேலுக்கு எதிரான இனப்படுகொலை வழக்கை அடுத்த வாரம் அய்.நா. உயர் நீதிமன்றம் விசாரிக்கிறது

தி இந்து
♦ அதானி குழும மோசடி விவகாரம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தேவையில்லை; 3 மாதத்தில் விசாரணையை முடிக்க செபிக்கு உத்தரவு என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அதானிக்கு வழங்கப்படும் சலுகை என்பதாக காங்கிரஸ் விமர்சனம்.
♦ குடியுரிமை திருத்தச் சட்டம் அரசமைப்புக்கு எதிரானது என ஏஅய்எம்அய்எம் தலைவர் அசாதுதீன் ஓவைசி கண்டனம்.

டைம்ஸ் ஆப் இந்தியா
♦ கருநாடகாவில் ‘கோத்ரா போன்ற சம்பவம்’ நடைபெறலாம் என காங்கிரஸ் தலைவர் பி.கே.ஹரிபிரசாத் எச்சரிக்கை!

– குடந்தை கருணா

No comments:

Post a Comment