பூனைக்குட்டி வெளியில் வந்தது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 25, 2024

பூனைக்குட்டி வெளியில் வந்தது

featured image

அயோத்தியா ராமன் கோயில் திறப்பால்
உத்தரப் பிரதேசத்துக்கு ரூபாய் நான்கு லட்சம் கோடி வருவாயாம்

லக்னோ, ஜன.25 உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தில் ராமன் கோயில் திறப்புக்கு பிறகு அம்மாநிலத்துக்கு வருகை தரும் பயணிகளால் அம்மாநிலத்தின் பொருளா தாரம் உயரும் என பல்வேறு தேசிய மற்றும் பன்னாட்டு ஆய்வுகள் கணித்துள்ளன.
உத்தரப்பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள ராமன் கோயில் மற்றும் சுற்றுலாவை மய்யமாகக் கொண்ட பிற முயற்சிகள் காரணமாக, 2024-25ஆம் ஆண்டில் ரூ. 5,000 கோடி வரை அம்மாநிலத்தால் வரி வசூல் செய்ய முடியும் என்று பாரத ஸ்டேட் வங்கி யின் சமீபத்திய ஆய்வறிக்கை கூறியுள்ளது. அம்மாநிலத்தின் பொருளாதார வளர்சிக்கு அயோத்தி மிக முக்கியமான காரணியாக இருக்கும் என்றும், சுற்றுலாத்துறையில் எதிர் பார்க்கப்படும் வளர்ச்சியுடன் இந்த ஆண்டு சுமார் 4 லட்சம் கோடி கொண்ட பணக்கார மாநிலமாக உத்தரப்பிரதேசம் உருவெடுக்கும் எனவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. பக் தர்கள், பார்வையாளர்களின் எண்ணிக்கையில் அயோத்தி வாடிகன் சிட்டி மற்றும் மெக்காவை மிஞ்சும் என்று வெளிநாட்டு பங்குச் சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ஜெஃப்ரிஸ் கூறியுள்ளது.
ஆண்டுதோறும் சுமார் 5 கோடி பக்தர்களை அயோத்தி ஈர்க்கும் என்று எதிர்பார்க் கப்படுவதாகவும், இது உத்த ரப்பிரதேசம் மட்டுமல்லாமல், இந்தியாவிலும் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக மாறும் என்றும் அதன் அறிக்கை கூறு கிறது. இதன் மூலம் அயோத் தியின் ஆண்டு வருமானமும் வளர்ச்சி காணும்.
ஆந்திராவில் உள்ள திருப் பதி ஏழுமலையான் கோயி லுக்கு சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2.5 கோடி பக்தர்கள் செல்கின்றனர். அதன் ஆண்டு வருமானம் ரூ 1,200 கோடி. அதேபோல், வைஷ்ணோ தேவி கோயிலுக்கு ஆண்டுதோறும் 80 லட்சம் பேர் செல்கின்றனர். அதன் ஆண்டு வருமானம் ரூ 500 கோடி. ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு ஆண்டுதோறும் 70 லட்சம் பேர் செல்கின்றனர். தாஜ்மஹாலின் ஆண்டு வரு வாய் ரூ.100 கோடியாகும். ஆக்ரா கோட்டைக்கு 30 லட்சம் பேர் செல்கின்றனர். அதன் ஆண்டு வருமானம் ரூ. 27.5 கோடியாக உள்ளது.
பன்னாட்டளவில் அதிக பக்தர்கள் செல்லும் இரண்டு பெரிய முக்கிய மத தலங்கள் உள்ளன. அதில் ஒன்று மெக்கா, மற்றொன்று வாடிகன். சவூதி அரேபியாவின் மெக்காவுக்கு ஆண்டுதோறும் 2 கோடி பேர் செல்கின்றனர். அதன் மூலம் அந்நாட்டுக்கு 12 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் கிடைக்கிறது. அதேபோல், வாடிகன் நகரத்துக்கு ஆண்டு தோறும் 90 லட்சம் பேர் செல்கின்றனர். அதன் ஆண்டு வருமானம் 315 மில்லியன் அமெ ரிக்க டாலர்களாக உள்ளன.
அயோத்தி ராமன் சிலையைச் செதுக்க பயன்படுத் திய அபூர்வ கருங்கல்! அயோத் திக்கு நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது விரைவில் ஒரு நாளைக்கு 3 லட்சமாக உயரும். ஒவ்வொரு பக்தரும் தங்கள் வருகையின் போது தோராயமாக ரூ.2,500 செலவு செய்தால், அயோத்தியின் உள் ளூர் பொருளாதாரம் மட்டும் ரூ.25,000 கோடியாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மத சுற் றுலா, போக்குவரத்து, விடு திகள் மற்றும் உள்ளூர் பொருட்களின் உற்பத்தி போன்ற துறைகளில் வேலை வாய்ப்புக்கான புதிய வாய்ப் புகள் உருவாகும் என தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்து, இத்தாலி, பிரான்ஸ், அமெ ரிக்கா, அய்க்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் சுற்றுலா அடிப்படையிலான பொருளா தார வளர்ச்சியை எட்டியுள் ளன, அயோத்தியில் கோயில் திறப்பு மூலம், இந்தியா இந்த நாடு களுடன் இணைய தயாராக உள்ளது என அவர் தெரிவித் துள்ளார்.

No comments:

Post a Comment