வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை முற்றிலுமாக புறக்கணிக்க இந்திய மாணவர் அய்க்கியம் வேண்டுகோள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 31, 2024

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை முற்றிலுமாக புறக்கணிக்க இந்திய மாணவர் அய்க்கியம் வேண்டுகோள்

featured image

சென்னை. ஜன. 31, ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்தைச் சுட்டிக்காட்டி இந்திய மாணவர் அய்க்கியம் மாபெரும் பேரணி மற்றும் பெரும்திரள் ஆர்ப் பாட்டத்தையும் முன்னெடுத் துள்ளது.
இந்திய மாணவர் அய்க்கியம் (United Students of India) அமைப்பு சார்பில் ஒன்றிய அரசின் NEP, NEET, NEXT உள்ளிட்ட தேர்வு களையும், ஹிந்தி மொழியையும் மாணவர்கள் மீது திணிக்கும் பா.ஜ.க. அரசைக் கண்டித்து ஜனவரி 12ஆம் தேதி இந்தியாவின் வடக்கே டில்லியில் தி.மு.க. தலைமையில் இந்திய கூட்டணிக் கட்சிகளின் மாணவர்கள் அமைப் புகளுடன் தி.மு.க. மாணவர் அணிச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் ஏற்பாட்டில் மாபெரும் பேரணியை நடத்தி யிருந்தனர்.
அதேபோல நேற்று (30.01.2024) சென்னை பத்திரிகையாளர் மன்றத் தில் தி.மு.க. மாணவர் அணிச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் தலைமை யில் இந்திய மாணவர் அய்க்கியம் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் திராவிட மாணவர் கழகம், தி.மு.க., ம.தி.மு.க., வி.சி.க., அனைத்திந்திய மாணவர் மன்றம், எஸ்.அய்.ஓ., எஸ்.அய்.எம். உள் ளிட்ட மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
சி.வி.எம்.பி.எழிலரசன் பேசும் போது, ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை இந்திய மாணவர் அய்க்கியம் புறக்கணிக்கும் வகையில் டில்லியில் பேரணியும், பெருந் திரள் ஆர்ப்பாட்டமும் நடத்தியது போல் 1.2.2024 அன்று காலை 9 மணிக்கு சென்னை ராயபுரம் செயிண்ட் பீட்டர் சதுக்கத்தில் தொடங்கி சவுத் சர்ச் சாலை, செமிட்டிரி சாலைகள் வழியாக ராபின்சன் பூங்கா வரை பேரணியும், ராபின்சன் பூங்காவில் பெருந் திரள் ஆர்ப்பாட்டமும் நடைபெற உள்ளது என்றும் கூறினார். நாடாளு மன்றத் தேர்தலில் பா.ஜ.க. கட்சியை ஒட்டுமொத்தமாக புறக் கணிக்குமாறு மாணவர் அமைப்பின் சார்பில் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் மாணவர் அமைப்புகளின் பொறுப்பாளர்களும், மாணவர் களும் சுமார் 10,000 பேருக்கு மேல் கூடுவார்கள் என்று சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் கூறினார். இச்சந்திப்பில் திராவிடர் கழகத்தின் சார்பில் துணைப்பொதுச்செயலா ளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் செ.பெ.தொண்டறம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment