செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 8, 2024

செய்திச் சுருக்கம்

தொழிற் பழகுநர்
பல்வேறு தொழிற் பிரிவுகளை சேர்ந்த பயிற்சியா ளர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சி வழங்குவதற்காக, மாவட்ட அளவிலான தேசிய தொழிற் பழகுநர் முகாம் வருகிற 10ஆம் தேதி காலை 9 மணியளவில் வடசென்னை ஆர்.கே. நகர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவிப்பு.
சிறப்புக் கல்வி
தமிழ்நாட்டில் 2008ஆம் ஆண்டு முதல் பி.எட். சிறப்புக் கல்வி பட்டப்படிப்பு தொலைநிலைக் கல்வி மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் படிப்பை முடிப்பவர்கள் அரசு, தனியார் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றலாம். 2024ஆம் ஆண்டுக்கான பி.எட்., சிறப்பு கல்வி பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வுக்கு லீttஜீs://tஸீஷீu.ணீநீ.வீஸீ/ஜீக்ஷீஷீsஜீமீநீtus-தீமீபீ-ஜீலீஜீ-இல் ஜன.20-க்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக பதிவாளர் இரா.செந்தில்குமார் தகவல்.
ஏவுதளம்
சிறிய ரக ராக்கெட்டுகளை ஏவுவதற்காகவே குலசேகரன்பட்டினத்தில் ஏவுதளம் உருவாக்கப்படுகிறது என்று இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தகவல்.
காற்றாலை…
தமிழ்நாட்டில் காற்றாலை மூலம் மின் உற்பத்திக்கான காலநிலை நிறைவடைந்த நிலையிலும், காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டதால், 1,190 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
தேர்வு
அண்ணா பல்கலைக்கழகத்தின் ‘டான்செட்’, ‘சீட்டா’ நுழைவுத் தேர்வு மார்ச் மாதம் 9, 10ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு.

No comments:

Post a Comment