
பெரம்பலூர்,ஜன.31- பெரம்பலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 28. 1 .2024 ஞாயிறு மாலை 5 மணிக்குபெரம்பலூர் மருத்துவர்குண கோமதி மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.
தலைமைக் கழக அமைப்பாளர் க. சிந்தனைச் செல்வன் தலைமையேற்க, மாவட்ட செயலாளர் மு.விஜேயேந் திரன், பொதுக்குழு உறுப்பினர் இரா.அரங்கராசன் மாவட்ட அமைப்பாளர் பெ.துரைசாமி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் பெ.நடராஜன், மாவட்ட இ.அ. தலைவர் செ.தமி ழரசன், நகர செயலாளர் அ.ஆதிசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெரம்பலூர் நகரத் தலைவர் அக்ரி ஆறுமுகம் கடவுள் மறுப்பு கூற மாவட்ட தலைவர் சி தங்கராசு வரவேற் புரை யாற்றினார். இளைஞர்கள் மாணவர்களிடையே பெரியாரியலை கொண்டு செல்லும் வகையில் நடை பெற இருக்கின்ற பெரியாரியல் பயிற்சி பட்டறையில் ஏராளமான இளைஞர் களை பங்கு பெற செய்ய வேண்டி யதன்அவசியத்தையும் 2024 ஆண்டுக் கான தலைமைக் கழகம் சுட்டிக் காட்டுகின்ற செயல் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திட வேண்டி யதன் காரண – காரியங்களை விளக்கி தலைமை கழக அமைப்பாளர் க.சிந்தனைச் செல்வன் சிறப்புரை யாற்றினார். துரைசாமி நன்றி கூறினார்.
திராவிடர் கழக செயலவைத் தலை வரும் பிறவி சுயமரியாதைக்காரர் என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டவருமான பெரியார் பெருந் தொண்டர், கழகத்தின் பல்வேறு பொறுப்புகளில் திறம்பட செயல்பட்ட எழுத்தாளர் சு.அறிவுக்கரசு அவர்களின் மறைவிற்கும், அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகனின் தாயார் ஜெயலட்சுமி மறைவிற்கும் இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள் கிறது எனவும், எதிர்வரும் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி (17. 2. 2024) அன்று பெரம்பலூரில் நடைபெறவுள்ள பெரி யாரியல் பயிற்சிப் பட்டறையை சிறப் பாகவும் எழுச்சியுடனும் அதிக மாணவர்கள் பங்கேற்கும் வகையிலும் நடத்திடுவது எனவும், பிப்ரவரி 1 அன்று சென்னையில் மாணவர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற உள்ள பேரணியி லும் பெரியார் திடலில் நடைபெறவுள்ள தமிழர் தலைவர் சிறப்புரையாற்றும் கருத்தரங்கிலும் மாணவர் கழகத்தினர் பங்கேற்பதெனவும், 2024 ஆம் ஆண்டுக் கான கழக செயல்திட்டங்களை தமிழர் தலைவர் அளிக்கும் பணிகளை சிறப் பாக செயல்படுத்திடுவதெனவும் தெரு முனைக் கூட்டங்களை அதிக அளவில் நடத்திடுவதெனவும் முடிவு செய்யப் பட்டது.
ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் செ.வேலாயுதம் பெரியார் பெருந் தொண்டர் செ.அரங்கையா, சி. ராசு, இரா சின்னசாமி ,சு. ராமு, சர்புதின், பெ.அண்ணாதுரை, சி.பிச்சைப் பிள்ளை, ஆ.துரைசாமி,மகளிர் அணி பொறுப்பாளர் சூரிய கலா,இளைஞர் அணி தோழர்கள் க.குமரேசன், பொ.பிறைசூடன் மற்றும் வை. தேனரசன், .வயலப்பாடி புத்தர் குமார் இரா.ராஜ்மோகன் அ.சீத்தாபதி, பா. சுகுமாறன், சு. இராமு உள்ளிட்டஏராளமான தோழர்கள் பங்கேற்று பெரியார் பயிற்சிப் பட்டறையை சிறப்பாக நடத்திட உறுதியேற்றனர்.
No comments:
Post a Comment