தமிழ்நாடெங்கும் எழுச்சியோடு நடைபெற்ற தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவுநாள் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 3, 2024

தமிழ்நாடெங்கும் எழுச்சியோடு நடைபெற்ற தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவுநாள் கூட்டம்

featured image

காட்பாடி
காட்பாடி, டிச. 3- வேலூர் மாவட்டம் காட்பாடியில் திராவிடர் கழகத் தின் சார்பில் தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு காட்பாடி காந்திநகர், பெரியார் சிலை அருகில் 22.12.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வேலூர் மாவட்ட செயலாளர் உ.விஸ்வநாதன் தலைமை தாங்கினார், மாவட்ட இளைஞரணி செயலாளர் இ.தமிழ் தரணி வரவேற்புரை ஆற் றினார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மு.சீனிவாசன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இர.அன்பரசன், மாவட்ட கழக காப்பாளர் வி.சட கோபன், மாவட்ட தலைவர் வி.இ. சிவக்குமார், பொதுக்குழு உறுப்பி னர் கு.இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் க.சிகாமணி, மாவட்ட அமைப்பாளர் நெ.கி.சுப்பிரமணி, வேலூர் மாநகர தலைவர் ந.சந்திர சேகரன், வேலூர் மாநகர செயலா ளர் அ.மொ. வீரமணி, மாவட்ட மகளிரணி செயலாளர் சி.லதா, மாநகர பகுத்தறிவாளர் கழக தலைவர் ஆ.துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இர.குணசேகரன் தான் பேசிய உரையில் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் தொண் டுகளையும், தமிழர் தலைவர் அவர்களின் சுறுசுறுப்பான இயக்க பணிகளையும் சுட்டிக்காட்டி இளைஞர்கள் திராவிடர் கழகத் தில் இணைந்து செயல்பட வேண் டும் என்பது போன்ற கருத்துகளை எடுத்துரைத்தார்.

பிறகு பேசிய கழக சொற் பொழிவாளர் ந.தேன் மொழி, கழக சொற்பொழிவாளர் கவிஞர் கவிதா, மாவட்ட கழக காப்பாளர் வி.சடகோபன், மாநில பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர் இர. அன்பரசன் ஆகியோர் பெரியாரின் கொள்கைகளை எடுத்துரைத்தனர்.
கழக சொற்பொழிவாளர் தி.என்னாரசு பிராட்லா சிறப்புரை ஆற்றினார்.
தன் உரையில் தந்தை பெரியார், அன்னை மணியம் மையார், தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோர்களின் தொண்டுகளை எடுத்துரைத்தார், திராவிட இயக்கங்களால் நாம் பெற்ற பலன்களை எடுத்துரைத் தார்.
பெரியார், அறி ஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், முதல மைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகியோரின் திராவிட கொள்கையால் தமிழ்நாடு இந்தி யாவிலேயே தமிழ் நாடு எப்படி எல்லாம் முன்னேற்றம் அடைந்து உள்ளது என்பதையெல்லாம் ஆதாரத்தோடு எடுத்துரைத்தார்,
அவரின் உனர்ச்சிபூர்வமான உரையை அப்பகுதி மக்கள் அருகில் வந்து ஆர்வத்தோடு கேட்டு பய னுற்றனர். அப்பகுதி மக்களை சிந் திக்கும் அளவிற்கு சிறப்பான உரையை வழங்கினார்.
இந்நிகழ்வில் காட்பாடி நகர தலைவர் கோ.சஞ்சீவி, குடியாத்தம் நகர தலைவர் சி.சாந்தகுமார், குடி யாத்தம் நகர அமைப்பாளர் வி. மோகன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் வே.வினாயக மூர்த்தி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் க.சையத் அலீம், மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை செயலாளர் பி.தன பால், பேர்ணாம்பட்டு பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர் பெ. சுப்பிரமணி, மாவட்ட இளைஞ ரணி தலைவர் பொ.தயாளன், மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டார்கள்.
இறுதியில் மாநகர பகுத்தறிவா ளர் கழக செயலாளர் தி.க. சின்ன துரை நன்றியுரையாற்றினார்.

மண்ணச்சநல்லூர்
மண்ணச்சநல்லூர், ஜன. 3- இலால்குடி கழக மாவட்டம் மண்ணச்சநல்லூர் நகரம் மற்றும் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் இறுதி முழக்கம் மற்றும் 50ஆவது நினைவு நாள் பொதுக்கூட்டம் 28.12.2023 மாலை சிறப்பாக நடை பெற்றது.
ஒன்றிய கழக தலைவர் கு.பொ.பெரியசாமி தலைமை தாங்க நகரத் தலைவர் மூ.முத்துசாமி வரவேற்பு உரையாற்றினார். நகரச் செயலா ளர் க.பாலச்சந்திரன், மாவட்ட செயலாளர் அ.அங்கமுத்து, மாவட்ட துணைச் செயலாளர் வெ.சித்தார்த்தன், துணைத் தலை வர் மு.அட்டலிங்கம் உரை நிகழ்த்த இறுதியில் கழக சொற் பொழிவாளர் தஞ்சை பெரியார் செல்வன் சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் கழக ஒருங்கிணைப் பாளர் ப.ஆல்பர்ட், இளைஞர் அணி தலைவர் ஆசைத்தம்பி, காப்பாளர் அரங்கநாயகி மற்றும் கழகத்தினர் பெருமளவில் கலந்து கொண்டனர். ஒன்றிய துணைச் செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

மடிப்பாக்கம்
மடிப்பாக்கம், ஜன. 3- பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் தெருமுனைக் கூட்டம் மடிப் பாக்கம் பேருந்து நிலையத்தில் 27.12. 2023 அன்று மாலை நடை பெற்றது.
சோழிங்கநல்லூர் மாவட்ட இளைஞரணி தலைவர் மு. நித்தி யானந்தம் வரவேற்புரை ஆற்ற, மாவட்ட துணைத் தலைவர் வேலூர் பாண்டு தலைமை தாங் கினார்.
மாவட்ட தலைவர் ஆர்.டி. வீர பத்திரன், பகுத்தறிவாளர் கழக தலை வர் த. ஆனந்தன், பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் ஏ.டி.அரசு, மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பி.சி.ஜெயராமன், மாவட்ட மகளிரணி தேவி சக்தி வேல், மாவட்டத் துணைச் செய லாளர் க. தமிழினியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் தமிழர சன், கோவிலம்பாக்கம் கிளைக் கழக அமைப்பாளர் வெ. மணி கண்டன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் ஜெ.குமார் முன்னிலை வகித்தனர்.
திராவிடர் கழக மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா. மணியம்மை, தி.மு.க. கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை தென் சென்னை மாவட்டத் துணை அமைப்பாளர் வழக்குரை ஞர் தடா ஓ.சுந்தரம், மதிமுக கொள்கை விளக்க அணி மாநில துணைச் செயலாளர் ஆலந்தூர் செல்வராஜ் சிறப்புரை ஆற்றினர்.
சோழிங்கநல்லூர் பகுதி திமுக. அவைத்தலைவர் எம்.பி. அரிகிருஷ் ணன், 187ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர் ஷெர்லி ஜெய், 188 ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர் சமீனா செல்வம், தி.மு.க. 187ஆவது வட்ட செயலாளர் எம்.கே. ஜெய், சோழிங்கநல்லூர் வட்டார காங்கிரஸ் தலைவர் ஜி.செந்தில் நாதன், காங்கிரஸ் கட்சி 187ஆவது வட்ட தலைவர் ஸ்டார் மனோகர், சி. பி. எம்., மடிப்பாக்கம் கிளைச் செயலாளர் எஸ். பாமா, விடுதலை சிறுத்தைகள் கட்சி கோவிலம் பாக்கம் செயலாளர் க.பெருமாள், சைதை கிழக்கு தி.மு.க. 172ஆவது வட்ட துணைச் செயலாளர் உ. திருவேங்கடம், அகில இந்திய வங்கிகளின் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் ஓய்வுற் றோர் சங்க மாநிலத் தலைவர் குகா. ஆனந்தராஜ், எஸ்.அய்.வி.இ.டி. கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர் ஆ. தினேஷ்குமார் ஆகியோர் கூட் டத்தில் பங்கேற்று உரையாற்றினர்.

மாவட்ட தி.மு.க. பிரதிநிதி எம்.கே ராமகிருஷ்ணன், திமுக. வட்ட துணைச்செயலாளர் பி. ரமேஷ், தி.மு.க. வட்ட துணைச் செயலாளர் தேவி கமல், தி.மு.க. பகுதி பிரதிநிதி தயாளன், தொ.மு.ச. மாவட்ட துணை அமைப்பாளர் ஹரிகிருஷ்ணன், தி.மு.க. வட்ட செயற்குழு உறுப்பினர் லோக நாதன், தி.மு.க. வட்ட செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணகுமார். திமுக இளைஞரணி சுரேஷ், 187ஆவது வட்ட திமுக. முரளிகிருஷ்ணன், 188வது வட்ட இளைஞர் அணித் தோழர்கள் மடிப்பாக்கம் , திமுக. டி.விமல்குமார், பி.எம்.விக்கி, எஸ். சரத்குமார், ஆர்.சுரேஷ், ஜி.அசோக், ஏ.ஆகாஷ், என்.செல்வக்குமார், ஆர்.விவேக், தி.மு.க. மகளிர் அணி மாலதி, சமூக நீதி மக்கள் இயக்க பொருளாளர் பி. அருணாச்சலம், பேங்க் ஆப் மகாராஷ்டிரா எஸ்சி எஸ்டி & ஓபிசி சங்க பொதுச் செயலர் வைத்தியலிங்கம், ஆதம்பாக்கம் கூட்டுறவு நகர் குடியிருப்போர் நல சங்க செயலாளர் நாராயணமூர்த்தி, மற்றும் கழகப்பொறுப்பாளர்கள் மேடவாக்கம் வெற்றி வீரன், அரக்கோணம் கு.சோமசுந்தரம், செம்மஞ்சேரி ஆர். சுரேஷ், காங்கிரஸ் கட்சி 187 வது வட்ட பொதுச்செயலாளர் எஸ்.கணேஷ், மடிப்பாக்கம் காங்கிரஸ் தமிழ்ச்செல்வி, சோழிங்கநல்லூர் பகுத்தறிவாளர் கழகம் கலைச்செல்வன், தாம்பரம் மாவட்ட செயலாளர் கோ. நாத்திகன், ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் க. தமிழ்ச்செல்வன், தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், தாம்பரம் நகர செயலாளர் சு. மோகன்ராஜ், பல்லாவரம் நகர இளைஞரணி அழகிரி என்கிற நரேஷ், கூடுவாஞ்சேரி எம்.டி.சி. பாலு, மடிப்பாக்கம் கழக மகளிர் அணி வே. ராதா பாண்டு, நங்க நல்லூர், மெடிக்கல் மணிவண்ணன், தரமணி ம. ராஜு, மடிப்பாக்கம் மாலதி ரோஹன், ஜனனி ராஜ சேகர் ஆகியோரும் மற்றும் ஏராள மான பொதுமக்களும் கலந்துக் கொண்டனர். வழக்குரைஞர் வே. பா. அறிவன் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

No comments:

Post a Comment