‘சுயமரியாதைச் சுடரொளி' கே.கே.சின்னராசு 30 ஆம் ஆண்டு நினைவு நாள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 31, 2024

‘சுயமரியாதைச் சுடரொளி' கே.கே.சின்னராசு 30 ஆம் ஆண்டு நினைவு நாள்!

featured image

திருப்பத்தூர், ஜன.31- ‘சுயமரியாதைச் சுடரொளி’ திருப் பத்தூர் மாவட்ட மேனாள் தலைவர் கே. கே. சின்ன ராசு அவர்களின் 30 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 30.01.2024 செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணியளவில் கே. சி. எழிலரசன் மாவட்ட தலைவரின் தந்தை பெரியார் இல்லத்தில், அய்யா அவர்களின் படத் திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து திருப்பத்தூர் மாவட்ட கழக சார்பில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சுயமரியாதைச் சுடரொளி கே.கே. சின்ன ராசு அவர்களின் படத்திற்கு காமராஜர் அறக்கட்டளைத் தலைவர் கணேஷ்மல் மாலை அணிவித்தார். மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் அனைவரையும் வரவேற்று, என் தந்தை, தந்தை பெரியார் அவர்களின் கொள்கைப்பற்றின் காரணமாக திராவிடர் கழகத்தில் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு, கடைசிவரை திராவிடர் கழகப் போராளியாக வாழ்ந்து மறைந்தார்.
இந்த இயக்கத்தில் வந்து , அவரின் கடின உழைப்பின் காரணமாக தான் இப்போது நாங்கள் வாழ்கின்ற வாழ்க்கை. அவர் விட்டுச் சென்ற பணிகளை ஆசிரியர் அவர்களோடு இணைந்து செயல்படுவோம் என்று நினைவேந்தல் உரையாற்றினார்.

இதில் ம. தி. மு. க. மாவட்ட செயலாளர் கண்ணதாசன். தூய நெஞ்சக்கல்லூரி செயலாளர் அருட்தந்தை பிரவின் பீட்டர், முதல்வர் அருட்தந்தை மரிய அந்தோணி, பொருளாளர் அருட்தந்தை சத்தியா, திருப்பத்தூர் ரொட்டேரியன் பொறுப்பாளர்கள் தலைவர் ஆனந்தன், செயலாளர் சங்கர், மேனாள் ரொட்டேரியன் தலைவர்கள் பாரதி , அருணகிரி, தேவராஜ், விடுதலை வாசகர் வட்ட பொறுப்பாளர்கள் தலைவர் ஞானம், செயலாளர் (Rtn) புரட்சி, அமைப்பாளர் எம்.என்.அன்பழகன், துணைச் செயலாளர் பெருமாள்சாமி, தொழிலதிபர் விஜயா கேலக்ஸி உரிமையாளர் ம.மதி, மாநில ப.க. துணைப் பொதுச்செயலாளர் அண்ணா.சரவணன், கழக மாவட்ட செயலாளர் பெ.கலைவாணன், மாவட்ட ப.க. செயலாளர் நத்தம் அன்பு, மாநில இளைஞரணி துணை செயலாளர் சி.எ.சிற்றரசன், நகர தலைவர் காளிதாஸ், நகர செயலாளர், ஏ.டி.ஜி.சித்தார்த்தன், ஏ.டி.ஜி.ஜித்து, மாவட்ட ப.க. தலை வர் சி.தமிழ்ச்செல்வன், ப.க. மாவட்ட செயலாளர்
கோ. திருப்பதி, மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ் குமார், கந்திலி ஒன்றிய தலைவர் பெ.ரா.கனகராஜ், கந்திலி ஒன்றிய செயலாளர் நாகராசன், சோலையார்ப் பேட்டை நகர அமைப்பாளர் ராஜேந்திரன், நகர செய லாளர்கள் மதியழகன், த.பாண்டியன், மாவட்ட எழுத் தாளர் மன்ற தலைவர் சுப்புலட்சுமி, விஜயா அன்பழகன், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ர.கற்பகவல்லி, தாமரை, நகர இளைஞரணி செயலாளர் அக்ரிஅரவிந்த், மத்தூர் ப.க. செயலாளர் வெங்கடேசன், சுந்தரம் பள்ளி ஒன்றிய தலைவர் சங்கர், பெரியார்தாசன், முத்து மற்றும் தோழர்கள் பங்கேற்று கே.கே. சின்னராசு அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

No comments:

Post a Comment