பெண்கள் சுயசார்பு கொண்டவர்களாக இருக்கவேண்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 31, 2024

பெண்கள் சுயசார்பு கொண்டவர்களாக இருக்கவேண்டும்!

featured image

கடவுள், ஜாதி, மத, இன அடையாளங்களால் அடிமைப்பட்டு தங்களின் வலிமையை இழக்கக் கூடாது!
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 50 ஆவது நினைவு நாளை முன்னிட்டு குறிஞ்சிப்பாடியில்

கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டி: கழக பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் பங்கேற்று பரிசளிப்பு
கடலூர், ஜன.31 – ‘‘பெண்கள் சுயசார்பு கொண்டவர்களாக இருக்கவேண்டும்! கடவுள், ஜாதி, மத இன அடை யாளங்களால் அடிமைப்பட்டு இருக்கவேண்டும் என்ற கோட்டுபாடுகளில் சிக்கி தங்களின் வலிமையை இழக்கக் கூடாது” என்றார் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்கள்.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 50 ஆவது நினைவு நாளை முன்னிட்டு கடலூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழகத்தின் சார்பில் கல்லூரியில் பயிலும் மாணாக் கர்களுக்கான பேச்சுப் போட்டி குறிஞ்சிப்பாடியில் நடந்தது.

இளம் தலைமுறையினரிடத்தில் தந்தை பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளை கொண்டு சென்றும், சமு தாயத்தில் ஏற்படும் ஜாதி, மத ரீதியிலான பிணக்குகளை தவிர்த்தும், மூடநம்பிக்கைகளை தகர்த்தும், சமதர்ம, சமநோக்கு சமுதாயத்தை உருவாக்கியும், அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்த கட்டத்திலும், மனிதனை மனித நேயத்துடன் நடத்திடவும், நவீன தீண்டாமை எந்த விதத்திலும் நிகழக் கூடாது என்ற பெரியாரின் உயர்ந்த, தொலை நோக்கு கருத்தியலை இந்த நூற்றாண்டிலும் வாழும் தலைமுறையினரிடத்தில் உணர்த்த கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிவுறுத் தலின் பேரில் பகுத்தறிவாளர் கழகத்தின் மூலம் பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நாடு முழுவதும் நடத்தப்படுகின்றன.

கடலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் கல்லூரியில் பயிலும் மாணாக்கர்களுக்கான “பெரியார் என்னும் சமுதாய இருள் நீக்கும் சூரியன்”, “பெரியார் ஒரு தொலைநோக்காளர்”, “பெரியாரின் அறிவியல் பார்வையும், அணுகுமுறையும்” எனும் தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது.
தொடக்கவிழாவிற்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவரும், பொறியாளருமான வீ.வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பெரியார் செல்வம், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளரும், கல்வியாளருமான அருணாச்சலம், கழக மாவட்ட தலைவர் தண்டபாணி, செயலாளர் எழிலேந்தி, மாவட்ட அமைப்பாளர் மணிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பாளர் தர்மலிங்கம் வரவேற்றார்.

கழகப் பொதுச்செயலாளர்
முனைவர் துரை.சந்திரசேகரன் உரை
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் உரை யாற்றியதாவது:
‘‘பெரியாரின் கருத்துகளின் உட்பொருளை அறிந்து வாழ்க்கை நெறிமுறைகளை கடைப்பிடித்தாலே, வெற்றி கரமான வாழ்வியலில் அனைவரும் பயணிக்கலாம். அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்க்கை முறையை நெறிப்படுத்துவதே பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளாகும்.
இன்றைய கால கட்டத்தில் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் கோலோச்சுவற்கு, பெண்கள் முன்னேற் றத்திற்கு பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளே வித் திட்டவையாகும். பெண்களை ஆணாதிக்க சக்திகளிடம் இருந்து மீட்டுத் தந்தவர் பெரியார். சமுதாய மாற்றத் திற்கான மிகச் சிறந்த திறவுகோல் பெண்கள்தான் என்பதை தீர்க்கத்தனமாக உணர்ந்ததால் தான், உலகின் வேறு எந்த தலைவரும் முன்னெடுக்காத பல செயல் களை இந்தியாவில் முன்னெடுத்து, நடை முறைப்படுத்திக் காட்டினார்.

அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் பெண்கள் ஆபரணங்கள் அணிவதில் அதிக ஆர்வம் காட்டு வதில்லை, இந்தியாவில் பெண்களுக்கு பூட்டப்படும் ஆபரணங்கள் என்பது அவர்களுக்குப் பூட்டப்படும் விலங்கு ஆகும். ராஜாராம் மோகன்ராய், ஜோதிராவ் பூலே, சாவித்திரிபாய் பூலே போன்ற தலைவர்கள் பெண் விடுதலைக்காக நடத்திய போராட்டங்கள் ஒரு பகுதியோடு இருந்துவிட்டது. ஒட்டுமொத்த பெண் விடுதலைக்கு பெரியாரின் கொள்கைகள், தனித்துவம் வாய்ந்ததாக அக்காலத்திலே விளங்கியதை வரலாற்று ஆவணங்கள் பாரபட்சமின்றி விளக்குகின்றன.

பெரியார் சமூக சீர்திருத்தத்திற்குக்
கிடைத்த ஆண் தாய்!
பெண்கள் அதிக அளவில் உடுத்தும் சேலையைக் கண்டு பிடித்தது, ஒர்ஆணாதிக்கத்தின் மனப்பான் மையை எடுத்துக் காட்டுகிறது. அவர்களின் செயல் திறனை சேலை எனும் ஆடை தடுக்கிறது. ஆதலால் ஆடவர்கள் அணியும் பேண்ட் போன்ற ஆடைகளை அணியவும், தலை முடியை திருத்திக் கொள்ளவும் உரிமைப் பெற்றுத் தந்தார் தந்தை பெரியார்.
பெரியார் சமூக சீர்திருத்தத்திற்குக் கிடைத்த ஆண் தாய் ஆவார். பெண்களின் விடுதலைக்கான செயல் திட்டங்கள், பிற தலைவர்களை போல் அல்லாமல், தனது குடும்பத்திலே நடை முறைப்படுத்தி, பின்னர் அதனை சமுதாய நடவடிக்கைகளில் இடம்பெறச் செய்தார்.
பெண்கள் சுயசார்பு கொண்டவர்களாக இருக்க வேண்டும். கடவுள், ஜாதி, மத, இன அடையாளங்களால் அடிமைப்பட்டு இருக்க வேண்டும் என்ற கோட் பாடுகளில் சிக்கி தங்களின் வலிமையை இழக்கக் கூடாது, என்பதை கருப்பொருளாக கொண்டுதான் தந்தை பெரியார் பெண் விடுதலைக்காக போராடினார். ஆண்களில் பெண்கள் சரிபாதி என்பதை உணர்ந்துதான் அன்றே பெண் விடுதலைக்காக சமரசமில்லா கருத்து களை எடுத்துக் கூறினார். இருப்பினும் நாடெங்கிலும் ஆட்சியாளர்களின் பல அலட்சியங்களால், பெண் களுக்குப் பாதுகாப்பற்ற சூழல், பாலியல் வன் கொடுமைகள் இன்றும் நடந்து, பெண் இனத்திற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அதனை தவிர்க்கும் பொருட்டு திராவிடர் கழகம் தொடர்ந்து சமூக, சமுதாய பணியாற்றும் என்பதை அறுதியிட்டு கூறுகிறேன்” என்றார்.
இதில் பள்ளி ஆசிரியர்கள் கிருட்டிணமூர்த்தி, தர்ம லிங்கம், மூத்த பத்திரிக்கையாளர் புதுவை குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசு
பேச்சுப் போட்டியில் முதல் பரிசை கடலூர் கிருஷ்ணசாமி கல்லூரி மாணவி பிரீத்தி ரூ. 1500 ரொக்கப்பரிசும், வடலூர் ஓபிஆர் நினைவு கல்வியியல் கல்லூரி மாணவி ஷிபானா மரியம் பீவி இரண்டாவது பரிசு ரூ.1000, மூன்றாம் பரிசாக சேப்ளாநத்தம் விவே கானந்தா கல்வியியல் கல்லூரி மாணவி செவ்வந்தி ரூ.750/ மற்றும் சான்றிதழும் பெற்றனர். நிகழ்வில் பங்கேற்ற அனைத்து பங்கேற்பாளர்களர்களுக்கும் சான்றிதழ், பெரியார் கருத்தியல் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

10 இஸ்லாமிய மாணவிகள் உள்பட 50 மாணவிகள் பங்கேற்பு

திராவிடர் கழகம் கடலூர் மாவட்டம் பகுத்தறி வாளர் நடத்திய பெரியார் நினைவு நாள் பேச்சுப் போட்டியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் அதிக அளவில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில் 10-க்கும் மேற்பட்டோர் இஸ்லாமிய பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளும், பெண் விடுதலைக் கான கருத்துகளும் இளம் தலைமுறையிளரிடத்தில் சென்றடைந்துள்ளதை சான்றாக காண முடிந்தது.

No comments:

Post a Comment