தனியார் துறை மற்றும் தொழிற்சாலைகளில் இடஒதுக்கீடு கோரி தனிநபர் மசோதா! மாநிலங்களவையில் மு.சண்முகம் எம்.பி. அறிமுகப்படுத்தினார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 11, 2023

தனியார் துறை மற்றும் தொழிற்சாலைகளில் இடஒதுக்கீடு கோரி தனிநபர் மசோதா! மாநிலங்களவையில் மு.சண்முகம் எம்.பி. அறிமுகப்படுத்தினார்!

featured image

புது­டில்லி, டிச. 11- ஒன்­றிய, மாநில அர­சின் பொதுத்­துறை நிறு­வ­னங்­ க­ளில் இருப்­ப­தைப் போல வேலை­வாய்ப்­பி­லும் தனி­யார் துறை­யில் உள்ள நிறு­வ­னங்­கள் மற்­றும் தொழிற்­சா­லை­களில் இட­ஒ­துக்­கீடு வேண்­டும் என்ற தனி நபர் மசோ­தாவை மாநி­லங்­க­ள­வை­யில் திராவிட முன் னேற்ற கழக உறுப்­பி­னர் மு.சண்­மு­கம் அறி­மு­கப்­ப­டுத்­தி­னார்

பொதுத்­துறை நிறு­வ­னங்கள் கொஞ்­சம் கொஞ்­ச­மாக சுருங்கி வரு­வ­தால் அடித்­தட்டு மக்­கள், தாழ்த்­தப்­பட்ட, பிற்­ப­டுத்­தப்­பட்ட, மிக­வும் பிற்­ப­டுத்­தப்­பட்ட மக்­க­ளுக்­கான வேலை­வாய்ப்பு மிக­வும் அரி­தாக உள்­ளது. மண்­டல் கமி­ஷன் அறிக்கை 16(4)இன் படி தாழ்த்­தப்­பட்ட, பிற்­ப­டுத்­ தப்­பட்ட மக்­ க­ளின் பாது­காப்­புக்­காக இந்த மசோதா அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

பெரும்­பா­லும் தொழில்து­றை­யில் பொதுத்­துறை வங்கிக் கடனை பெற்று அரசு மூலம் நிலம் மற்­றும் இதர சலு­கை­க­ளைப் பெற்று குறைந்த செல­வில் நிறு­வ­னங்­க­ளைத் தொடங்கி பெருத்த லாபங்­க­ளை­யும் சம்­பா­தித்து வரும் தனி­யார் துறை நிறு­வ­னங்­கள் தாழ்த்­தப்­பட்ட, பிற்­ப­டுத்­தப்­ பட்ட மக்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு தரு­வதை நிரா­ க­ரித்து வரு­கின்­றார்­கள்.
எனவே அர­சுத் துறை­யில் உள்­ளது போல அடித்­தட்டு மக்­க­ளுக்கு இட­ஒ­துக்­கீடு அளிக்க வேண்­டு­மென்ற இந்த தனி நபர் மசோ­தாவை 08.12.2023 அன்று மாநி­லங்­க­ள­வை­யில் திராவிட முன்னேற்ற கழக உறுப்­பி­னர் மு.சண்­மு­கம் அறி­மு­கப்­ப­டுத்­தி­னார். இந்த மசோ­தாவை அவை ஏற்­றுக் கொண்­டது.

மோட்­டார் வாகன ஓட்­டு­நர் மற்­றும் இதர தொழி­லா­ளர்­க­ளுக்­கான சமூ­கப் பாது­காப்பு திட்­டத்­திற்­கான தனி நபர் மசோ­தாவை மாநி­லங்­க­ள­வை­யில் திராவிட முன்னேற்ற கழக உறுப்­பி­னர் மு.சண்­மு­கம் 8.12.2023 அன்று அறி­மு­கப்­ப­டுத்­தி­னார்.

இந்­தி­யா­வில் பொது­வாக சாலைப் போக்­கு­வ­ரத்து நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கின்­றது. அதி­லும் குறிப்­பாக சரக்­கு­க­ளைக் கொண்டு செல்­லும் லாரி­கள், வேன்­கள், பொது­மக்­களை ஏற்­றிச் செல்­லும் பேருந்­து­கள், சுற்­றுலாப் பேருந்­து­கள், நக­ரங்­­களில் பயன்­ப­டுத்­தப்­ப­டும் ஆட்டோ, டாக்சி வாக­னங்­களை ஓட்­டு­கின்ற ஓட்­டு­நர்­கள் மற்­றும் அந்த தொழிலை பரா­ம­ரித்து வரும் அந்த தொழில் சார்ந்த எண்­ணற்ற தொழி­லா­ளர்­கள் அமைப்­பு­சாரா தொழி­லா­ளர்­க­ளாக எந்­த­வித சமூ­கப் பாது­காப்­பும் இன்றி தவித்து வரு­கின்­றார்­கள்.

வாக­னங்­களை தயார் செய்­யும் நிறு­வ­னங்­கள் கோடிக் கணக்­கில் சம்­பா­தித்து அதை விற்­பனை செய்து வரு­கின்­றார்­கள். இந்த வாக­னங்­களை இயக்க பயன்­ப­டும் பெட்­ரோல், டீசல், ஆயில் போன்­ற­வற்றை உற்­பத்தி செய்­யும் ஆயில் நிறு­வ­னங்­க­ளும் கோடிக்­க­ணக்­கில் சம்­பா­திக்­கி­றார்­கள். வாக­னங்­கள் செல்­லும் சாலை­ களை பரா­ம­ரிப்­பது என்ற பெய­ரில் அர­சும் ஏரா­ள­மான வரி­களை வசூ­லித்து வரு­கின்­றது. ஆனால் இந்த இயக்­கத்தை தொடர்ந்து பசு­மை­யாக கொண்டு செல்­லும் ஓட்­டு­நர்­கள் மாதக் கணக்­கில் வாக­னங்­களை இயக்­கு­வ­தில் உள்ள இயக்க இடர்ப்­பா­டு­கள், வெகு தூரம் செல்­வ­தால் சரி­யான உணவு கிடைக்க வகை­யில்­லா­தது, ஓய்­வெ­டுப்­ப­தற்­காக சாலை­க­ளில் சரி­யான தங்­கும் வச­தி­கள், கழிப்­ப­றை­கள் இல்­லா­மல் இருப்­பது, இதை­விட மாநி­லம் விட்டு மாநி­லம் செல்­லும்­பொ­ழுது அவர்­க­ளுக்­குப் பாது­காப்பு இல்­லா­மல் இருப்­பது, பொது­வாக வாடகை வண்­டி­களை இயக்­கும் ஓட்­டு­நர்­க­ளை­யும், அவரை சார்ந்த தொழி­லா­ளர்­க­ளை­யும் சமூ­கத்­தில் ஒரு விரோ­தி­யா­கப் பார்ப்­ப­தும், காவல்­து­றை­யும், மோட்­டார் வாக­னத் துறை­யும், போக்­கு­வ­ரத்­துத் துறை­யும் அவர்­களை கார­ணம் இல்­லா­மல் வஞ்­ச­மாக தண்­டிப்­பது போன்ற பல்­வேறு இன்­னல்­க­ளில் இருந்து அவர்­கள் வாழ்க்­கையை நடத்­து­வ­தற்கு தக்க பாது­காப்­பு­டன் கூடிய ஒரு சமூ­கப் பாது­காப்­புத் திட்டத்தை, கட்­டு­மா­னத் தொழி­லா­ளர்­கள் வாரி­யம் போல் ஒரு வாரி­யத்தை அமைத்­திட ஒன்­றிய அரசு அனைத்து நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும்.
– இவ்­வாறு இந்த தனி நபர் மசோ­தாவை அறி­மு­கப்­ப­டுத்தி பேசி­னார்.

No comments:

Post a Comment