கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 23, 2023

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

23.12.2023
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
* மோடிக்கு மாற்று இல்லை என்ற மாயை, மல்லி கார்ஜூன கார்கே பெயர் ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் முன் மொழியப்பட்டதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது என மூத்த பத்திரிகையாளர் ஷிகா முகர்ஜி தனது கட்டுரை யில் குறிப்பிட்டுள்ளார்.
* இரண்டு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கிடும் ஆணை விரைவில் அறிவிக்கப்படும் என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் பேச்சு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* 17ஆவது மக்களவையில் இதுவரை நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் பாதியளவு இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டன, மேலும் 16% மட்டுமே நிலைக்குழுக்களுக்கு பரிந்துரைக்கப் பட்டன என்று பி.ஆர்.எஸ். கட்சியின் சட்டமன்ற ஆராய்ச்சி யின் அறிக்கை தெரிவிக்கிறது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* 2024 மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக் குழுத் தலைவராக ப.சிதம்பரம் நியமனம்.
* வெள்ள பாதிப்புகளை சிறிதும் கண்டுகொள்ளாமல் தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்தி விட்டார்: ஏதோ எதிரி நாட்டின் மீது போர் தொடுப்பது போல எரிச்சல் மொழியில் பேசுகிறார்; நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனம்.
தி டெலிகிராப்:
* குஜராத் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பகவத் கீதை துணைப் பாடம். ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கைபடி இந்த முடிவு என அரசு அறிவிப்பு.
* மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு செய்வது குறித்து சரத்பவார் வீட்டிற்கு நேரில் சென்று ராகுல்காந்தி ஆலோசனை நடத்தினார். இதே போன்று நிதிஷ் குமாரிடம் பேச்சு வார்த்தை.
.- குடந்தை கருணா

No comments:

Post a Comment