வாக்கு எந்திரம் மோசடியா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 8, 2023

வாக்கு எந்திரம் மோசடியா?

பா.ஜ.க. இத்தனை வாக்குகள் பெறும் என்று பா.ஜ.க. நிர்வாகி பதிவிட்டது எப்படி?
நாடாளுமன்றத்தில் காரசார வாதம்

புதுடில்லி, டிச .8 வாக்குப்பதிவு இயந்திரத்தில் சந்தேகம் இருப்பதாக எதிர்க்கட்சி மக்களவை உறுப்பினர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், அதற்கு ஆளுங்கட்சி மக்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளா கத்தில் பரபரப்பு பேட்டி அளித்தனர்.
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ. ஆட்சி அமைக்கிறது. இந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக் குப்பதிவு இயந்திரத்தில் சந்தேகம் இருப்பதாகவும், சிப் பொருத்தப்பட்ட இயந்திரத்தை ஹேக் செய்து தேர்தல் முடிவை மாற்ற முடியும் என்றும், மத்தியப் பிரதேச மேனாள் முதல மைச்சர் திக்விஜய் சிங் குற்றம் சாட் டினார். இவரது கருத்துக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் நாடாளு மன்ற வளாகத்தில் பல்வேறு கட்சி யைச் சார்ந்த உறுப்பினர்கள் பல கருத் துகளை தெரிவித்தனர். ஆளும்கட்சி உறுப்பினர்களும் அதற்கு பதிலடி கொடுத்தனர். தேசிய மாநாட்டு கட் சியின் உறுப்பினர் பரூக் அப்துல்லா: வாக்குப்பதிவு இயந்திரம் தொடர் பான சந்தேகத்தை தீர்க்க வேண்டும். அப்போது தான் மக்களின் நம்பிக் கையை பெறமுடியும்.

2 நாட்களுக்கு முன்பே பா.ஜவுக்கு முடிவு தெரியும் மத்தியப்பிரதேச மேனாள் முதலமைச்சர் திக்விஜய் சிங் கூறுகையில்,’வாக்கு எண்ணிக்கைக்கு 2 நாட்களுக்கு முன்பே பா.ஜ.வுக்கு முடிவுகள் தெரியும். நாகாடா-கச்ரோட் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் டாக்டர் தேஜ்பகதூர் சிங் சவுகான், காங்கிரஸின் திலீப் சிங் குர்ஜாரை தோற்கடித்தார்.

அனில் சாஜ்ஜெட்டி என்ற பா.ஜ நிர்வாகி தனது பேஸ்புக் பக்கத்தில் தேர்தல் முடிவு வெளியாகும் 2 நாட் களுக்கு முன்பு நாகாடா-கச்ரோட் சட்டமன்றத் தொகுதியில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் எத்தனை வாக் குகள் கிடைத்தன, எவ்வளவு வாக் குகள் வித்தியாசம் என்பதை எழுது கிறார். முக்கியமாக, மொத்தம் 1,78,364 வாக்குகள் பதிவாகியுள்ளதாக டிசம்பர் 1ஆம் தேதி சாஜ்ஜெட்டி பதிவிட்டுள்ளார். அதில் பாஜ. வேட்பாளர் 93,000 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் 77,000 வாக்குகளும் பெற்றதாக குறிப்பிட்டுள்ளார். அதே போல் 2 நாள் கழித்து பா.ஜ. வேட்பாளர் 93,552 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் 77,625 வாக்குகளும் பெற்றுள்ளனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment