தந்தை பெரியாரின் பெயர் நீக்கப்பட்டது அவமானம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 12, 2023

தந்தை பெரியாரின் பெயர் நீக்கப்பட்டது அவமானம்!

featured image

நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது!
கண்டனத்துக்குரியது பெரியார் பெயரை எப்பொழுதும் பேசுவோம்
தமிழ்நாடு முதலமைச்சரின் அழுத்தமான பதிவு

சென்னை, டிச. 12- நாடாளுமன்றத்தில் தந்தை பெரியாரை மேற்கோள்காட்டி தி.மு.க. உறுப்பினர் எம்.எம். அப்துல்லா பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் குறிப்பிடுகையில்,
நாடாளுமன்றத்தில் தந்தை பெரியாரின் பெயர் நீக்கப் பட்டது அவமானம், நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமை யின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது. பெரியாரின் பெயரை எங்கும், எப்போதும், எந்தச் சூழலிலும் பயன்படுத்திக் கொண்டே இருப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தி.மு.க. தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:-
மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் எம்.எம். அப்துல்லா உரையாற்றும்போது சுட்டிக்காட்டிய தந்தை பெரியாரின் மேற்கோளுக்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்; பெரியாரின் பெயரும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது!
மண்டல் ஆணையப் பரிந்துரையை அமல்படுத்திய போது தந்தை பெரியார்தான் இதற்குக் காரணம் என்று பிரதமர் வி.பி.சிங் பேசிய நாடாளுமன்றத்திலேயே தந்தை பெரியார் பெயர் நீக்கப்பட்டுள்ளது அவமானம்!
மக்களின் மனங்களில் நிலைத்து நின்று, வகுப்புவாதிகளை இன்றளவும் அச்சுறுத்தும் தந்தை பெரியாரின் பெயரை எங்கும் – எப்போதும் – எந்தச் சூழலிலும் பயன்படுத்துவோம்! அனைவரும் பயன்படுத்துங்கள்!
– இவ்வாறு தி.மு.க. தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment