செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 6, 2023

செய்திச் சுருக்கம்

முடக்க நினைக்கும்

நூறு நாள் வேலைத் திட்டத்தை முடக்க நினைக்கும் ஒன்றிய பாரதிய ஜனதா அரசின் சூழ்ச்சி வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கண்டனம்.

வாய்ப்பு

தமிழ்நாடு மற்றும் அதையொட்டிய பகுதியில்  வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். இதேநிலை 8ஆம் தேதி வரை நீடிக்கும்.

கண்காணிப்பு

சென்னை மாநகராட்சியில் ஒருங்கிணைத்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறை மூலம் 24 மணி நேரமும் மழை நிலவரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது என மாநகராட்சி ஆணையர் ராதா கிருஷ்ணன் தகவல்.

ஒப்புதல்

இந்திய ராணுவத்தின் முப்படைகளில் உள்ள வீராங்கணைகளுக்கு மகப்பேறு, குழந்தை பராமரிப்பு, குழந்தை தத்தெடுப்பு விடுமுறை அளிப்பதற்கான திட்டத்துக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்தார்.

கையிருப்பு

சென்னை மாநகருக்கு மாதம் 1 டி.எம்.சி. குடிநீர் தேவை என்ற நிலையில் அடுத்த 9 மாதத்துக்கு தேவை யான குடிநீர் கையிருப்பு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்.

தடை

மகாதேவ் செயலி உள்பட 22 ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு ஒன்றிய அரசு அதிரடி தடை விதித்துள்ளது. இதற்கான உத்தரவை வெளியிட்டு இருப்பதாக ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தீர்ப்பு

இந்த ஆண்டு 72,000 வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தகவல்.


No comments:

Post a Comment