மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 20, 2023

மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்?

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரமாரி கேள்வி!

புதுடில்லி, நவ.20  தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக் காமல் 3 ஆண்டுகளாக தமிழ்நாடு ஆளுநர் என்ன செய்து கொண்டி ருந்தார் என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட 12 மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் தராமல் நிறுத்தி வைத்திருந்தார். இதனால் தமிழ்நாடு அரசு அவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 


அந்த வழக்கில் தமிழ்நாடு அரசு கூறியிருந்ததாவது: 

தமிழ்நாடு மக்களின் உரிமைகளை தமிழ்நாடு ஆளுநர் பறிக்கிறார். மக்கள் தேர்வு செய்த அரசை செயல்பட விடாமல் தடுக்கிறார். ஆளுநர் ரவி மக்கள் தீர்ப்பை விளையாட்டுப் பொரு ளாக நினைத்துச் செயல்படுகிறார். மேனாள் அமைச்சர்கள் ஊழல் விவ காரங்களில் விசாரணையைத் தொடர் வதிலும் குறுக்கே நிற்கிறார். தனது அதி காரத்தையும், பொறுப்பையும் உண ராமல் அவர் அத்துமீறல் செய்து வரு கிறார் என அந்த வழக்கில் குறிப்பிடப் பட்டிருந்தது. 

அது போல் சர்க்காரியா கமிஷனின் பரிந்துரைகளின் அடிப்படையிலும், சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் 200 ஆவது பிரிவின்படியும் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளு நர்கள் பரிசீலிப்பதற்கான கால வரம்பை நிர்ணயிக்கும் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும். ஆளுநர்களுக்கு அதற்கென்று குறிப்பிட்ட காலக்கெடு விதிக்க வேண்டும் என்று உத்தரவிடு மாறும் தமிழ்நாடு அரசு இந்த வழக்கில் கோரிக்கை விடுத்துள்ளது.  இந்த வழக்கு கடந்த 10 ஆம் தேதி விசா ரணைக்கு வந்தது. அப்போது இன்று (20.11.2023) ஒன்றிய அரசு பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தாக்கீது அனுப்பியிருந்தது. இதனிடையே நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட் டிருந்த மசோதாக்களில் 10 மசோதாக் களை 'I withhold assent" என்ற குறிப் புடன் தமிழ்நாடு அரசுக்குக் கடந்த 13.11.2023 அன்று திருப்பி அனுப்பினார் ஆளுநர்.

இதையடுத்து தமிழ்நாடு சட்டமன்றம் கடந்த 18.11.2023 அன்று அவசரமாக கூடியது. அந்த கூட்டத்தில் ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக் களையும் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டன. இந்த நிலையில்தான் ஆளுநர் ஆர்.என்.ரவி  சென்னையிலிருந்து அவசரமாக டில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். அங்கு உள்துறை அமைச்சர், சட்ட நிபுணர் களுடன் ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது. 

இதனிடையே ஆளுநர் மீது தமிழ் நாடு அரசு தொடர்ந்த வழக்கு இன்று (20.11.2023) உச்சநீதிமன்றத்தில் விசா ரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக் குரைஞர், ‘‘ஒவ்வொரு முறையும் ஆளு நருக்கு எதிராக உச்சநீதிமன்றத்திற்கு வந்து கொண்டிருக்க முடியாது. 8 கோடி மக்களுக்குப் பதிலளிக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. மசோதாக் களை உரிய விளக்கமின்றி திருப்பி அனுப்பியுள்ளார்'' என அவர் வாதிட் டார். 

அப்போது தலைமை நீதிபதி கூறு கையில்,  ‘‘3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்? எந்த முடிவையும் எடுக்காமல் மசோதாக் களை ஆளுநர் எப்படி நிலுவையில் வைத் திருக்க முடியும்? உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் மசோதாக்களை திருப்பி அனுப்பியது ஏன்?  மசோ தாக்கள் தொடர்பாக ஆளுநர் திருப்பி அனுப்பிய ஆவணங்கள் எங்கே?'' என சரமாரி கேள்விகளை எழுப்பிய நிலை யில் வரும் 1.12.2023 அன்று தமிழ்நாடு அரசின் வழக்கு விசாரிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment