பட்டாசு வெடிப்பு எதிரொலி: சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 11, 2023

பட்டாசு வெடிப்பு எதிரொலி: சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

சென்னை, நவ.11  தீபாவளி யையொட்டி பல்வேறு பகுதி களில் மக்கள் தற்போதே பட் டாசு வெடிக்கத் தொடங்கி விட்டனர். அதிக அளவில் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அதிகரித்து வரு கிறது.

இந்நிலையில், சென்னை யில் காற்று மாசு அதிகரித் துள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் மக்கள் நேற்று (10.11.2023) இரவு முதலே பட் டாசு வெடிக்கத் தொடங்கி யுள்ளதால் காற்று மாசு அதிகரித்துள்ளது.

சென்னையின் பல்வேறு இடங்களில் காற்றுமாசு தரக் குறியீடு 100 முதல் 200 வரை பதிவாகியுள்ளது. சென்னை யில் காற்றின் தரம் மிதமான மாசு என்ற நிலைக்குச் சென் றுள்ளது.

சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியில் காற்று மாசின் தரம் 230 ஆக உயர்ந் துள்ளது. காற்று மாசின் தரம் பெருங்குடியில் 169, அரும் பாக்கத்தில் 134, வேலூரில் 123, ராயபுரத்தில் 121, கொடுங்கை யூரில் 112 ஆக உயர்ந்துள்ளது.

காற்று மாசு அதிகரிப்பால் ஆஸ்துமா போன்ற நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படலாம். இதய நோய் உள்ளவர்கள், குழந்தைகள் மற்றும் பெரிய வர்களுக்கு அசவுகரியம் ஏற்படலாம் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment