உயர் கல்வி மாபெரும் வளர்ச்சி பெற்றது - கலைஞர் ஆட்சியில்தான்! உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி விளக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 20, 2023

உயர் கல்வி மாபெரும் வளர்ச்சி பெற்றது - கலைஞர் ஆட்சியில்தான்! உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி விளக்கம்!

சென்னை, நவ. 20- சட்டப் பேரவையில் 18.11.2023 அன்று நடைபெற்ற விவாதத்தின் போது குறுக்கிட்டு விளக்கமளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் முனை வர் க.பொன்முடி, “தமிழ்நாட்டில் உயர்கல்வி மாபெரும் வளர்ச்சி பெற்றது. தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சியில்தான்”  என்று ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

சட்டப் பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி குறிப்பிட்டதாவது:-

உறுதுணையாக இருந்தோம்

எதிர்க்கட்சித் தலைவர் அவர் களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவெனில், நீங் கள் ஆட்சியிலே இருந்தபோது சூரப்பா அவர்களை கொண்டு வருவதை எதிர்த்து சொன்னீர் கள். அப்போது நாங்கள் எதிர்க் கட்சியாக இருந்தாலும் நாங் களும் உங்களுடைய கோரிக் கையை ஏற்று ஆதரவளித்து, சூரப்பாவின்மீது வழக்கு போடு வதற்கு நாங்களும் உறுதுணை யாக இருந்தோம் என்ப தையும் நீங்கள் மறந்துவிடக் கூடாது. 

அந்த சூரப்பாவினுடைய வழக்கு நீங்கள் போட்டதைப் போலவேஇன்றும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக் கிறது. ஆகவே, எந்த நல்ல நிகழ்வு களாகயிருந்தாலும், காலத்திற் கேற்ப அப்போதிருந்த ஆளுநர்கள் எப்படி செயல்பட்டார்கள்; இப்போதிருக்கிற ஆளுநர் அவர் கள் எப்படி செயல்படுகிறார் என்பது உங்களுக்குத் தெரியா தது அல்ல; இப்போதிருக்கிற ஆளுநர் அவர்கள் மிக அதிக மாக பல்கலைக்கழகங்களினு டைய விவகாரங்களிலே தலை யிட்டுக் கொண்டிருக்கிற காரணத்தினாலேதான், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதற்காக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டும் என்று இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை எதிர்க் கட்சித் தலைவர் அவர்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மாநில அரசிற்கு அதிகாரம்

கட்சி வேறுபாடுகள் இல்லா மல் இதை அனைவரும் நிறை வேற்ற வேண்டும். ஏனென்றால், அரசமைப்புச் சட்டத்திலே சொல்லப்பட்டிருக்கிறது; தமிழ் நாடு அரசுக்கு இந்த உரிமை களெல்லாம் இருக்கின்றன. 

குறிப்பாக, இந்திய அரச மைப்புச் சட்டம், பிரிவு 246இ-ன் கீழ், ஏழாவது அட்டவணை, பட்டியல் மிமி-மாநிலப் பட்டியல், வரிசை 32இ-ன்படி, மாநில அரசு பல்கலைக்கழகத்தை நிறு வுதல், ஒழுங்குபடுத்துதல் மற் றும் கலைத்தல் ஆகியவை மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது.

அதைத்தான் நிறுவ வேண் டும் என்ற எண்ணத்தோடு தமிழ் நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறார். அதுவும் இன் றைய ஆளுநர் அவர்களுடைய செயல்பாடுகளையெல்லாம் இங்கே நண்பர்களெல்லாம் சுட்டிக்காட்டினார்கள்.

சங்கரய்யா அவர்களுக்கு முனைவர் பட்டம் கொடுக்க வேண்டும் என்று செனட் நிறை வேற்றி அனுப்பிய பிறகும், ஆளுநர் அவர்கள் மறுத்ததிலிருந்து உங்களுக்கு அவர் என்னென்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும். 

பல்கலைக்கழகங்களில் அரசியல் செய்து கொண்டிருக் கிற ஒரு சூழ்நிலை உருவாகியிருக் கிறது; அதுபோன்று இருக்கக் கூடாது என்ற காரணத்தினால்தான் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

உயர்கல்வித் துறையின் வளர்ச்சிக்காக

நம்மை அரசியல் செய்கி றோம் என்று சொல்கிறார்கள்; அதெல்லாம் கிடையாது. அவை முன்னவர் அவர்கள் இங்கே சொன்னதைப்போல, அப்போதிருந்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் 3 பேர் இருக்கிற குழு தான் துணை வேந்தரை தேர்ந் தெடுத்து அவர்களுக்கு அனுப் பும். அதில் ஒருவரைத்தான் நியமிப்பார்கள் என்பதெல்லாம் இருந்தது.

நீங்கள் சொன்னீர்கள், இந்த ஆளுநர் அவர்கள், அந்த 3 பேர், அவர்கள் நியமிப்பது மட்டுமல் லாமல், UGC-லிருந்து வருகிற ஒருவரையும் நியமிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். 

அதையெல்லாம்தான் நாம் எதிர்க்கிறோம். UGC- என்பது ஒரு advisory body; அவ்வளவு தானே தவிர, அவர்கள் சொல் பவர்களை நியமிக்க வேண்டும் என்பது அல்ல; பல்கலைக்கழகங் களுடைய சுதந்திரத்தைப் பாது காக்க வேண்டும் என்ற எண்ணத் தோடுதான் தமிழ்நாடு முதல மைச்சர் அவர்கள் இதை வலியு றுத்தி சொல்லியிருக்கிறார். 

நீங்கள் இருந்தபோதிலும் சரி, இப்போதும் சரி, உண்மையிலேயே இது தமிழ்நாட்டி னுடைய உயர் கல்வித் துறையின் வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கும் என்பதைத்தான் நான் தெரிவித்துக்கொள்ள விழைகிறேன்.

கலைஞர் ஆட்சியில்தான்

உயர் கல்வி என்று சொன் னால், தமிழ்நாட்டைப் பொறுத் தவரை கலைஞர் ஆட்சியில் தான் அதிகமாக வளர்ந்திருக் கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

கலைஞர் அவர்கள் ஆட்சிக் காலத்தில்தான் இங்கே சட்டப் பல்கலைக்கழகம் தனியாக உரு வாக்கப்பட்டது. விவசாயப் பல் கலைக்கழகம் தனியாக உருவாக் கப்பட்டது. ஆகவே, பல்வேறு பல்கலைக்கழகங்களை உருவாக் கியவர் கலைஞர்தான்.  அது மட்டுமல்ல, மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி கொடுக்க வேண்டுமென்று சொன்னவரே தலைவர் கலைஞர்தான். அந்த அடிப்படையில் அவர் இருக் கின்றபோதே பல்வேறு மாவட் டங்களுக்கு மருத்துவக் கல்லூரி வழங்கப்பட்டது. 

அதற்குப்பிறகுதான் இன் றைக்கு ஒன்றிய அரசுகூட இங்கே கொண்டுவர வேண்டு மென்று சொல்லியிருக்கிறார் கள்.  ஆகவே, கலைஞருடைய ஆட்சியில் உயர் கல்வி என்பது வளர்ந்தது.

பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடைய காலத்தில் ஆரம் பக் கல்வி வளர்ந்தது; தலைவர் கலைஞருடைய காலத்தில் உயர் கல்வி வளர்ந்தது. அதனால்தான் தமிழ்நாடு முதலமைச்சர் அவர் கள் என்னுடைய இரண்டு கண் களிலே ஒன்று கல்வி என்று சொல்லி, இன்றும் கல்வி வளர்ச் சிக்காகப் பாடுபட்டுக் கொண் டிருக்கிறார் என்பதுதான் உண்மை.

அவர்களும் செய்தார்கள்; நான் இல்லையென்று சொல்ல வில்லை. அதே நேரத்தில் கலை ஞர் அவர்கள் செய்ததையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான் இதனை நான் சுட்டிக் காட்ட விரும்புகி றேன்.

பெயரையே மாற்றினீர்களே

எங்களுடைய மாவட்டத்தில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழ கத்தைப் பற்றி சொன்னார். அதற்கு ஏதாவது இங்கே நிதியை ஒதுக்கியிருந்தார்களா என்பதை மேனாள் முதலமைச்சர் அவர் களை சொல்லச் சொல்லுங்கள். நிதியும் ஒதுக்கப்படவில்லை; இடமும் தேர்ந்தெடுக்கப்பட வில்லை. பெயர் வைப்பதற்காக மட்டுமே ஒன்றை அறிவித்து விட்டு சென்றார்களே தவிர, உண்மையிலேயே அவர்கள் பல்கலைக்கழகத்தை உருவாக்க வில்லை.

அந்த அடிப்படையில்தான் அவர்கள் காலத்தில் அரசுடை மையாக்கப்பட்ட அண்ணா மலை பல்கலைக்கழகத்தோடு அவை இணைக்கப்பட்டு, இன் றும் அவை சிறப்பாகச் செயல் பட்டு கொண்டிருக்கிறது.

தலைவர் கலைஞர் பெய ரையே மாற்றிவைத்தார்கள் அவர்கள். கலைஞர் கல்லூரி என்று திருவாரூர் மாவட்டத்தில் இருந்த கல்லூரியின் பெயரையே மாற்றியவர்கள் இவர்கள். இவர்கள் இப்படிப் பேசுவதற்கு எந்த விதமான தகுதியும் இல்லை. 

திருவாரூரில் கலைஞர் கொண்டுவந்த கல்லூரிக்கு, கலைஞர் அரசு கலைக் கல்லூரி என்று இருந்ததை மாற்றியவர் கள் அவர்கள். இவ்வாறு அமைச் சர் க.பொன்முடி விளக்கம் அளித்தார்.

No comments:

Post a Comment