தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்படும் பத்து சட்ட மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவேண்டும்! சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு வலியுறுத்தல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 20, 2023

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்படும் பத்து சட்ட மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவேண்டும்! சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு வலியுறுத்தல்!

சென்னை, நவ.20- சட்டப்பேரவையில் 18.11.2023 அன்று விவாதங்களின் நடுவே குறுக்கிட்டு விளக்கமளித்த பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள், “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்படும் 10 சட்ட மசோ தாக்களுக்கும் மறுப்பேதும் தெரி விக்காமல் ஆளுநர் அவர்கள் ஒப்பு தல் அளிக்கவேண்டும் என்று வலி யுறுத்தினார்.

சட்டப்பேரவையில் - பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள், இதுகுறித்து குறிப்பிட்டதாவது:-

உரிமை இருக்கிறது

இந்த அவைக்கு நானும் சில விவரங்களைச் சொல்ல வேண்டும். நம்முடைய ஆளுநர் அவர்கள் அதை “I withheld assent”என்று போட்டிருக்கிறார்கள். அப்படி யென்றால், திரும்ப இந்த சட்ட மன்றத்தில் விவாதிப்பதற்கோ, மறு ஆய்வு செய்வதற்கோ உரிமை இருக் கிறதா என்கின்ற கோணத்தில்தான், நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் கேட்டிருக்கிறார். அவர் களின் கேள்வி நியாயமான கேள்வி தான். அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால், "நீட்" தேர்வில் நம்முடைய நிதி மற்றும் மனிதவள மேலாண் மைத் துறை அமைச்சர் சொன்னது மாதிரி, நம்முடைய குடியரசுத் தலைவர் அவர்கள் இதேபோன்று“I with hold assent” என்று சொல்லி, திருப்பி அனுப்பியபோது, அப் போது நம்முடைய சட்டத் துறை அமைச்சராக இருந்த சி.வி.சண் முகம், நாங்கள் அதற்கு மத்திய அரசிடம், என்ன காரணத்திற்கு withhold என்று நீங்கள் அனுப் பினீர்கள் என்ற விவரத்தைக் கேட் டிருக்கிறோம். அந்த விவரம் வந்திருந்தால் அந்த மசோதாவை மறு ஆய்வுக்கு நாங்கள் இந்த சட்டமன்றத்திற்கு கொண்டு வந்திருப்போம் என்று அவர்கள் சொன்னபோது, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதலமைச்சர் அவர்கள், 2019 ஜூலை மாதம் 17 ஆம் தேதி, தெளிவாகச் சொன்னார், withhold என்று சொன்னதை, Article 201 of the Indian Constitution-ன்படி, மறு ஆய்வு செய்வதற்கு இந்தச் சட்ட மன்றத்திற்கு உரிமை இருக்கிறது.

இறையாண்மை

சட்டமன்றம், மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டது. பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டவர் முதலமைச்சராக இருக்கின்றார். அந்த அவைக்கு முழு இறை யாண்மை இருக்கின்றது, மாண்பு இருக்கின்றது, மக்கள் பிரச்சி னையை எத்தனை முறை வேண்டு மென்றாலும் கொண்டு வரலாம் என்பதற்கு முதலமைச்சர் அவர் களும் அப்போது தெளிவுபடுத்தி யிருக்கின்றார். இந்த அவையின் அவைக்குறிப்பில் அது இருக்கிறது. இன்னும் அதற்குமேல் சொல்ல வேண்டுமென்றால், withhold  என்று சொல்லி,அதை நிறுத்தி வைத்திருப்பதாக அவர் சொன் னால், இந்திய அரசமைப்புச் சட் டத்தில் மறு ஆய்வு செய்யுங்கள் என்றோ, மறு ஆய்வு செய்யக் கூடாது என்றோ எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. இந்திய அர சமைப்புச் சட்டத்தில் மறு ஆய் வுக்கு உட்பட்டது, மறு ஆய்வு செய் யக்கூடாது என்றும் சொல்ல வில்லை. 

இந்த இடத்தில் இந்தப் பேரவைக்கு மிகப் பெரிய மாண்பு இருக்கின்றது. பேரவை விதி 286இன்படி இந்திய அரசமைப்பு சட்டத் திலோ அல்லது பேரவை விதிக ளிலோ குறிப்பிட்டு சொல்லப் படாத பொருள் குறித்து சட்ட மன்றத்தில் இவ்வாறு அரசு ஒரு தனித் தீர்மானம் கொண்டு வந் தால், அந்த இடத்தில் சட்டமன்றப் பேரவைத் தலைவர் என்ற முறை யில், அதாவது, இந்தச் சட்டமன்றப் பேரவை எனக்குத் தந்திருக்கின்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்தச் சட்டப் பேரவையிலே மறு ஆய்வுக்கு அவைத் தலைவர் என்ற முறையில் நான் அனுமதி அளித் துத்தான் இதுவரை இந்த விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 

ஆகவே, அதில் மாறுபட்ட கருத்து யாருக்கும் இல்லை. மறு ஆய்வுக்கு உட்பட்டதுதான். 

உள்நோக்கம்

அது திருப்பி அனுப்பப்பட்டது எந்தக் காரணமும் இல்லாமல். உள்நோக்கத்தோடு என்றுதான் அதில் பொருள்கொள்ள வேண் டும். காரணம், கல்வியில், உயர் கல்விக்கு என்று சொல்லி ஒரு சட்டத் திருத்தம் வந்திருக்கிறது. அது எந்த இறையாண்மைக்கு எதி ரானது? இது எந்த அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது? இன்னும் சொல்லப்போனால், தமிழ்நாட் டில் இருக்கின்ற எந்தப் பல்கலைக் கழகத்திற்கும் ஒன்றிய அரசிட மிருந்து தற்போது மானியமே வழங்கப்படுவதில்லை.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு 3 ஆண்டுகளாக ஒரு பைசாகூட வழங்கப்படவில்லை. இது எல்லோருக்கும் தெரியும். நம்முடைய உயர் கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கும் தெரி யும். ஆகவே, இந்த நிலையிலே முழுவதுமாக நம்முடையஅரசின் முதலமைச்சர் அவர்கள், நம்மு டையஉயர் கல்வித் துறை அமைச் சர் அவர்கள் ஆகியோர் நம்மு டைய வரி வருவாயின் மூலம் பல் கலைக்கழகங்கள், கல்லூரிகள் அனைத்தையும் இயக்கிக் கொண் டிருக்கிறார்கள். இந்த நிலையில், 3 வருடங்களுக்குப் பிறகு மொத்தமாக அவர்கள் withhold என்று எழுதி அனுப்பியதில், உள்நோக்கம் இருப்பதாகத்தான் அனைவருமே வெளிப்படையாகச் சொல்கிறார்கள். 

வெளிநடப்பின் நோக்கம்

நம்முடைய பாரதிய ஜனதா கட்சியினுடைய சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந் திரன் அவர்கள் சரியான பதில் இல்லாத காரணத்தால் வெளி நடப்பு செய்திருக்கிறார். நான்கூட அவர்கள் வெளிநடப்பு செய்வ தைப் பார்த்தால், தமிழ்நாட்டிலே யாருமே ஆளுநருடைய செய் கைக்கு சரி என்று சொல்லவில்லை. இவர்கள் சொல்லித்தான் அவர் செயல்படுகிறாரோ என்கின்ற ஓர் அர்த்தம் வந்துவிடும், இவர் வெளிநடப்பு செய்வதாலேயே அப்படி ஒரு நோக்கம் வந்துவிடும். ஆகவே, இவருக்கு தமிழ்நாட் டின்மீது அக்கறை இருக்கிறதா என்று தெரியவில்லை. முதலமைச் சர் அவர்கள் கொண்டு வந்திருக் கின்ற இந்தத் தனித் தீர்மானம் மறு ஆய்வுக்கு உட்பட்டது.

10 சட்டமுன்வடிவுகளையும் ஒரு fullstop, comma இல்லாமல், "நீட்" விலக்கு மசோதா எவ்வாறு மீண்டும் நிறைவேற்றி அனுப்பப் பட்டதோ, ஆன்லைன் ரம்மி தடை மசோதா எவ்வாறு மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்டதோ, அதேபோன்று இந்த 10 மசோ தாக்களும் மீண்டும் அனுப்பப்படும். அவற்றிற்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். இதுதான் சட்டம். இவ் வாறு பேரவைத் தலைவர் மு.அப் பாவு அவர்கள், குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment