இதுதான் அர்த்தமுள்ள இந்து மதமோ! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 20, 2023

இதுதான் அர்த்தமுள்ள இந்து மதமோ!

காஞ்சிபுரத்தில் வடகலை-தென்கலை பிரிவினர்களுக்கு இடையே  தகராறு: காவல்துறை தலையீடு!

காஞ்சிபுரம், நவ. 20 -  காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் அருகே வடகலை, தென்கலை பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டது. வடகலை மற்றும் தென்கலை பிரிவு அர்ச்சகர்கள் இடையே தமிழ் நாட்டில் அடிக்கடி மோதல் ஏற்படு வது வழக்கம். குறிப்பாக காஞ்சி புரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இந்த மோதல் சம்பவங்கள் அதிகம்.

இரு தரப்பினருக்கும் இடையே வழிபாடுகள், மத நிகழ்வுகள் செய்வ தில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. கடந்த ஆண்டு காஞ்சிபுரத்தில் வடகலை மற்றும் தென்கலை பிரிவு அர்ச்சகர்கள் இடையே மோதல் வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல் கடந்த ஜூன் மாத மும் இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது.  அப்போது கோயிலில் வைகாசி பிரமோற்சவத் துக்கான கொடியேற்றம் தொடங்கி 3 ஆம் நாள் காலை கருட சேவை உற்சவம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக அனுமந்த வாகன உற்சவம் இரவு நடந்தது. அப் போது கோயிலில் இருந்து வட கலை பிரிவினர் வேத பாராயணங் கள் முழங்கியபடி சங்கரமடம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் மண்டகப்படியாக கண்ட ருளி பட்டாச்சாரியார்களின் வேத பாராயணங்கள் பாடப்பட்டன. இந்த நிலையில் வடகலை மற்றும் தென்கலை பிரிவு அர்ச்சகர்கள் இடையே வேத பாராயணம் பாடு வதில் உரசல் ஏற்பட்டு சலசலப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் நித்தியபடி பூஜைகள் நடந்தன. அப்போது சாமிக்கு நெய்வேத்திய நித்தியபடி செய்த பிரசாதம் வழங் கும்போது வடகலை பிரிவினர் வேத பிராயணம் பாடிக்கொண்டு வந்தனர். அப்போது வடகலை மற்றும் தென்கலை பிரிவு அர்ச்ச கர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளுவில் ஈடு பட்டனர். 

இந்த நிலையில் மீண்டும் வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் இடையே காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மோதல் ஏற்பட்டது. சுவாமி உலா வின் போது தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாடி வந்துகொண்டு இருந்ததாகவும், அதற்கு வடகலை பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து காவல் துறை மற்றும் அறநிலை யத்துறை அதிகாரிகள் அங்கு வந்து அர்ச்சகர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தையின் முடிவில் இரு தரப்பினரும் பிரபந்தம் பாட அனுமதி அளித்த பிறகு காவல் துறையினர் பாதுகாப்புடன் சுவாமி உலா நடைபெற்றது. அர்ச் சகர்களின் மோதல் காரணமாக பக்தர்கள் முகம் சுளித்தபடி சென் றனர்.

No comments:

Post a Comment