தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து 2600 கன அடி நீர் திறக்கப்பட வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 4, 2023

தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து 2600 கன அடி நீர் திறக்கப்பட வேண்டும்

காவிரி மேலாண்மை ஆணையம் ஆணை

பெங்களூரு, நவ.4 காவிரியில் தமிழ்நாட்டிற்கு நவம்பர் 23ஆ-ம் தேதி வரை விநாடிக்கு 2,600 கன அடி நீர் திறக்க வேண்டும் என கரு நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு கருநாடக அரசும், விவசாய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையக் குழு கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டில்லியில் நேற்று (3.11.2023) நடைபெற்றது. இதில்தமிழ்நாடு நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப் பிரமணியன், கருநாடக நீர்வளத் துறை செயலாளர் ராகேஷ் சிங் மற்றும் கேரள, புதுச்சேரி அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

அதில் தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, ‘‘உச்சநீதிமன்றத்தின் இறுதி உத்தரவின்படி, தமிழ்நாட் டிற்கு அக்டோபரில் 140.099 டிஎம்சி நீரை கருநாடகா திறந்துவிட வேண்டும். ஆனால் நிகழாண்டில் இதுவரை 56.394 டிஎம்சி நீர் மட்டுமே திறந்துவிட்டுள்ளது. 83.705 டிஎம்சி நீர் இன்னும் நிலுவையில் உள்ளது.

மேட்டூர் அணையில் 18 டிஎம்சிக்கும் குறைவான அளவில் நீர் இருப்பு உள்ளது. தமிழ்நாடு விவசாயிகளின் நெற்பயிர்களை காப்பாற்றுவதற்கு விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடி நீரை திறக்க கரு நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்'' என வலியுறுத்தினார்.

அதற்கு கருநாடக அரசின் தரப் பில், ‘‘கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவுகிற‌து. கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதிஆகிய அணைகளில் குறைந்த அளவில் தான் நீர் இருப்பு உள்ளது.கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்துள்ளது. எனவே தமிழ்நாட்டின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாத நிலையில் கருநாடகா இருக்கிறது.

தற்போது அணையில் இருக்கும் நீரைக் கொண்டே குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. மேகேதாட்டுவில் புதிதாக‌ அணை கட்டினால் மழைக் காலங்களில் அதிகளவில் நீரை தேக்க முடியும். வீணாக கடலில் காவிரி நீர் கலப்பதை தடுக்க முடியும். எனவே மேகேதாட்டுவில் அணைக் கட்ட அனுமதிக்கவேண்டும்'' என வலியுறுத்தப்பட்டது.

அப்போது தமிழ்நாடு அரசின் தரப்பில், ‘‘மேகேதாட்டு அணை விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலு வையில் இருக்கிறது.அதனைப் பற்றி காவிரி மேலாண்மை ஆணை யத்தில் விவாதிக்கக் கூடாது. நீர் பங்கீடு செய்வதற்கும் புதிய அணை கட்டுவதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை'' என ஆட்சேபம் தெரிவிக் கப்பட்டது.

இறுதியில் பேசிய காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலை வர் எஸ்.கே.ஹல்தர், 

‘‘தமிழ்நாட்டின் விவசாய தேவைக்காக கருநாடக அரசு கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து நவம் பர் 23ஆ-ம் தேதி வரை விநாடிக்கு 2,600 கன அடி நீரை திறந்துவிட வேண்டும். அதாவது பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் விநாடிக்கு 2,600 கன அடி நீர் தமிழ்நாட்டிற்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டார்.

கருநாடகா எதிர்ப்பு: இந்த உத்தரவுக்கு கருநாடகாவில் பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சியினரும், விவசாய மற்றும் கன்னட அமைப் பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர். 

இதுகுறித்து கருநாடக துணை முதலமைச்சரும் நீர்வளத் துறை பொறுப்பு அமைச்சருமான‌ டி.கே.சிவகுமார் கூறுகையில், ‘‘காவிரி மேலாண்மை ஆணையத் தின் உத்தரவை ஏற்க முடியாது. கருநாடக அணைகளில் நீர் இல்லை.எங்களுக்கே நீர் இல்லாத போது தமிழ்நாட்டிற்கு எப்படி நீரை திறந்துவிட முடியும்? இந்த உத்த ரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிட இருக்கிறோம். இது குறித்து முதலமைச்சர் சித்தரா மையா சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நட வடிக்கை எடுப்பார்'' என்றார்.


No comments:

Post a Comment