வெள்ளப் பாதிப்புக்கு உதவுவதிலும் அரசியலா? ஒன்றிய அரசுக்கு மம்தா கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 9, 2023

வெள்ளப் பாதிப்புக்கு உதவுவதிலும் அரசியலா? ஒன்றிய அரசுக்கு மம்தா கண்டனம்

சிக்கிம், அக் 9- சிக்கிமில் சமீ பத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம், அண்டை மாநிலமான மேற்கு வங்காளத்திலும் பாதிப்பு களை ஏற்படுத்தியது. ஆனால் வெள்ள பாதிப் புகளுக்கு உதவுவதில் ஒன் றிய அரசு ஓரவஞ்சனை யுடன் செயல்படுவதாக முதலமைச்சர் மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், 'சிக்கிமில் நமது சகோதர-சகோதரிகளை சோகத் துக்கு உள்ளாக்கிய பெருவெள்ளம், டார் ஜலிங் மலைகள் மற்றும் கலிம்போங்கில் உள்ள எனது மக்களையும் பாதித்தது. வெள்ளம் ஏற் பட்ட இரவில் இருந்து 24 மணி நேரமும் நானும், எங்கள் ஒட்டுமொத்த நிர்மாகமும் மக்களை பாதுகாக்க உழைத்து வருகிறோம். 

கூர்க்காலாந்து பிராந்திய நிர்வாகத்துக்கு ரூ.25 கோடி வழங்கி னோம். சிக்கிம் அரசு, ராணுவ அதிகாரிகளுக்கு அனைத்து வழிகளிலும் உதவினோம்' என கூறி யுள்ளார். மேலும் அவர், 'ஆனால் வடக்கு வங்கா ளத்தில் உள்ள டார்ஜி லிங் மற்றும் கலிம்போங் பகுதிகளில் பேரழிவின் தீவிரம் மற்றும் ஏராள மான இறப்புகள் இருந்த போதிலும், பாதிக்கப் பட்ட மக்களுக்கு எதி ரான ஒன்றிய அரசின் பாகுபாடுகளால் நான் அதிர்ச்சி அடைந்துள் ளேன். நாங்கள் பிச்சைக் காரர்கள் அல்ல, நாங் களும் நிச்சயமாக சீக்கி முக்குத்தான் உதவுகி றோம். ஆனால் பேரிடர் மேலாண்மையில் ஒன் றிய உதவி தொடர்பான விடயங்களில் சமமான பார்வையுடன், பாகுபாடு காட்டாமல் இருக்க வேண்டும்' என்றும் காட் டமாக குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment