ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 31, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

31.10.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* ஆளுநர் அலுவலகத்தில், பெட்ரோல் குண்டு வீசப் படவில்லை. வெளியே சாலையில்தான் வீசப்பட்டது. ஆளுநர் பாஜக காரராகவும், ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகம் ஆகவும் மாறியிருப்பது வெட்கக்கேடு. இன்னாருக்கு இதுதான் என்பது ஆரியம். எல்லோருக்கும் எல்லாம் என்பது திராவிடம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்: 

* மாநிலங்களவையில் இருந்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் ராகவ் சதா, காலவரையின்றி இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. உச்ச நீதிமன்றம் - "எதிர்க்கட்சி உறுப்பினரை அவையில் இருந்து விலக்குவது மிகவும் தீவிரமான விசயம்" என்றும், "நாடாளுமன்றத்தில் அனைத்து தரப்பினரும் குரல் கொடுக்க வேண்டும்" என்றும் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் சுட்டிக்காட்டல்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 

* ஷிண்டே குழு தகுதி நீக்க மனுக்களை டிசம்பர் 31க்குள் முடிவு செய்ய பேரவைத் தலைவரிடம்  உச்சநீதிமன்றம்  அறிவுறுத்தல்.

* தலைமை தகவல் ஆணையர், மாநில தகவல் ஆணையர் பதவிகளை நிரப்பாவிட்டால், தகவல் அறியும் உரிமைச் சட்டம் டெட் லெட்டராக மாறும்', ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* அதானி குறித்து கேள்வி கேட்டதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது பாஜக என சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரி கண்டனம்.

தி டெலிகிராப்:

* மராத்தாவினருக்கு இட ஒதுக்கீடு போராட்டத்தில் வன்முறை. மகாராட்டிரா உள்துறை அமைச்சர் பதவியி லிருந்து பட்னாவிஸ் விலக வேண்டும் என சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்

- குடந்தை கருணா


No comments:

Post a Comment