மும்பையில் 61 மாணவர்களுடன் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை எழுச்சியுடன் தொடங்கியது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 22, 2023

மும்பையில் 61 மாணவர்களுடன் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை எழுச்சியுடன் தொடங்கியது

இன்று 22.10.2023  மகாராட்டிரா மாநிலம்,மும்பை, தாராவி, கம்பன் பள்ளியில் மும்பை திராவிடர் கழகம், மும்பை பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்தும்  பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 61 மாணவர்களுடன் மிக எழுச்சியுடன் தொடங்கியது.

 மும்பை திராவிடர் கழக செயலாளர் இ. அந்தோணி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ. கணேசன் பெரியாரியல்  பயிற்சிப் பட்டறையை தொடங்கி வைத்து உரையாற்றினார். மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ. ரவிச்சந்திரன் தலைமையேற்று உரையாற்றினார். செல்வி செல்வராஜ் , சுமதி மதியழகன்,வெண்ணிலா சுரேஷ் குமார், வனிதா இளங்கோவன்,வளர்மதி கணேசன்,ஜென்சி, பெரியார்பாலாஜி, கண்ணன்,நங்கை குமணராசன் ,காமராஜ் தொல்காப்பியர் ஆகியோர் முன்னிலையேற்றனர். 

திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர்  ச.பிரின்சுஎன்னாரெசுபெரியார் 'தந்தை பெரியார் ஓர் அறிமுகம்' என்ற தலைப்பில் முதல் வகுப்பெடுத்தார். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர், பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமார் ஒருங்கிணைத்து நடத்தினார். 

எழுத்தாளர் புதியமாதவி, முனைவர் கயல்விழி, எழுத்தாளர் வி.சி.வில்வம், எழுத்தாளர் சு.குமணராசன், ஜெய் பீம் பவுண்டேஷன் சுரேஷ்ஆகியோர் தொடர்ந்து வகுப்புகள் நடத்தினர். 30க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.


No comments:

Post a Comment