தமிழ்நாடு முழுவதும் டெங்கு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு நடவடிக்கை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 26, 2023

தமிழ்நாடு முழுவதும் டெங்கு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு நடவடிக்கை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

உடல் உறுப்பு கொடையாளர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்படும் எனும் தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க அவரது உடலுக்கு மாவட்ட ஆட்சி நிர்வாகத்துடன் இணைந்து அரசின் சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மரியாதை செலுத்தினார். 

மதுரை, செப். 26- தேனி மாவட் டத்தை சேர்ந்த வடிவேல் (வயது 43) விபத்தில் மூளைசாவு அடைந்தார். அவர் உடல் உறுப்புகள் கொடையாக வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, அவருக்கு அரசு மரியாதை செலுத்துவ தற்காக தேனி மாவட்டம் செல்லும் வழியில் மதுரை விமான நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;

தமிழ்நாட்டில் தற்போது அதிக மழைப்பொழிவு காரணத்தினால் பருவமழை கால நோய்கள் ஏற்பட்டுள்ளன.  குறிப்பாக டெங்கு மற்றும் காய்ச்சல் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக சற்று அதிகரித்து காணப்படுகிறது. மதுரை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, காஞ்சிபுரம், திருவா ரூர், கோவில்பட்டி, செய்யார், கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் அதிக ரித்துள்ளது. காய்ச்சல் பாதிக்கப் பட்டுள்ள பகுதிகளில் அந்தந்த பகுதிகளிலேயே பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் குறைந்தது 1000 காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் கள் நடைபெற அறிவுறுத்தப் பட்டுள்ளது. மருத்துவக் குழுவினர் தினந்தோறும் காய்ச்சல் பாதித்த இடங்களுக்குச் சென்று ஆங் காங்கே மருத்துவ சிகிச்சை முகாம் கள் நடத்த உள்ளனர். மேலும் இந்த முகாம்களில் பொதுமக்க ளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பொருட்டு நிலவேம்பு குடிநீர் கஷாயம் வழங்கவும் ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. இத் துடன் பொதுமக்களுக்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு நடவடிக் கைகளும் மேற்கொள்ளப்படும் இந்த காய்ச்சல் முகாம்களுக்காக தமிழகத்தில் 476 நடமாடும் மருத் துவக் குழுக்கள் ஈடுபடுவார்கள். 

மேலும் 805 ஆர்பிஎஸ்கே நட மாடும் பள்ளி மருத்துவ குழுக்கள் பள்ளிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம் ஏற்படுத்தப்பட்டு அனைத்து பள்ளி மாணவ, மாணவியர்களுக் கும் பரிசோதிக்கப்பட்டு காய்ச்சல் கண்டவர்களுக்கு சிகிச்சை அளிக் கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. தேவைப்படும் மாண வர்களுக்கு மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு காய்ச்சல் கண்ட மாணவர்களின் விவரத்தை உடனடியாக அருகில் உள்ள மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர் களுக்கு தெரிவிக்கவும் அறிவுறுத் தப்பட்டுள்ளது. 

இது தவிர பள்ளி வளாகங்களில் ஏடீஸ் கொசுக்கள் வளராமல் தடுக்க கொசுப்புழு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் புகை மருந்து அடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அனைத்து சத்துணவு மய்யங்களிலும் உள்ள குழந்தை களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யவும் சத்துணவு மய்யங்க ளிலும் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அச்சமின்றி காய்ச் சல் ஏற்பட்டவுடன் உடனடியாக அருகில் உள்ள காய்ச்சல் தடுப்பு முகாம்களுக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். காய்ச்சல் உள்ளவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ளவும், சுய சிகிச்சை மேற்கொள்ள வேண் டாம் எனவும் அறிவுறுத்தப்படு கிறார்கள்.

இதற்கு முன்னரே தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் அவர்களின் தலைமையில் டெங்கு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கூட்டம் நடத்தப்பட்டது, அதன் பிறகு, 16.09.2023 அன்று எனது தலைமையில் டெங்கு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுக்கான ஆலோ சனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதன் தொடர் நடவடிக்கையாக வருகிற அக்டோபர் மாதம் 1ஆம் தேதி, தமிழ்நாடு முழுவதும் டெங்கு மற்றும் மழைக்கால நோய் கள் தடுப்பு நடவடிக்கைகளுக்கான 1000 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment