உணவுக்குழாயில் சிக்கிய ஊக்கு: அறுவைச் சிகிச்சையின்றி அகற்றி சாதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 4, 2023

உணவுக்குழாயில் சிக்கிய ஊக்கு: அறுவைச் சிகிச்சையின்றி அகற்றி சாதனை

தருமபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிபட் டியை சேர்ந்தவர் கலா (வயது 32). இவர் தனது பல்லை சுத்தம் செய்வதற்காக ஊக்கை பயன்படுத்தியுள்ளார். அப்போது ஊக்கை தவறுதலாக விழுங்கி விட்டார். உணவுக் குழாயில் ஊக்கு சிக்கி எச்சில் கூட விழுங்க முடியாமல், தொண்டை மற்றும் நெஞ்சுப் பகுதியில் அதிக வலி ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது பற்றி உறவினர்களிடம் தெரிவித்தார்.

இதையடுத்து கலா சேலம் அரசு மருத் துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். அவரை மருத்துவர்கள் பரிசோதித் துப் பார்த்ததில் நெஞ்சுப் பகுதி உணவுக் குழாயின் மேல் பகுதியில் அந்த ஊக்கு சிக்கி யிருப்பது கண்டறியப்பட்டது.

மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு எண்டோஸ்கோபி சிகிச்சைக்காக மயக்க மருந்து கொடுத்து ஊக்கை அகற்றுவதற்கு ஏற்பாடு செய்தனர். இதையடுத்து அறு வைச் சிகிச்சையில்லாமலேயே எண் டோஸ்கோபி கருவியை உணவுக்குழாயில் செலுத்தி அங்கு சிக்கி இருந்த ஊக்கை நோயாளிக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் அகற்றப்பட்டது. இதனால் கலா மகிழ்ச்சி அடைந்தார்.

இந்த சிக்கலான எண் டோஸ்கோபி சிகிச்சையை மருத்துவமனையில் நோயா ளியை அனுமதித்த 3 மணி நேரத்திற்குள் ளாகவே குடல் அறுவை சிகிச்சை துறைத் தலைவர் மருத்துவர் சிவசங்கர், மருத்துவர் கார்த்திகேயன், மருத்துவர் சிவசுப்ர மணியம் ஆகியோர் கொண்ட குழுவினர் வெற்றிகரமாக செய்தனர். இந்தக் குழு வினரை மருத்துவமனை டீன் மருத்துவர் மணி மற்றும் கண்காணிப்பாளர் மருத்துவர் தனபால் ஆகியோர் பாராட்டினர்.

மேலும் அவரும், அவரது குடும்பத்தி னரும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment