சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் ஏற்பாட்டில் தமிழ் மொழிப் போட்டிகள் 2023 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 30, 2023

சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் ஏற்பாட்டில் தமிழ் மொழிப் போட்டிகள் 2023

சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் ஏற்பாட்டில் "தமிழ் மொழிப் போட்டிகள் 2023” ஆகஸ்ட் 26 ஆம் தேதி சனிக்கிழமை அன்று உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடைபெற்றது.

சிங்கப்பூரில் உள்ள பாலர் பள்ளி ரி2 வகுப்பு மாணவர்கள், தொடக்கப் பள்ளி 3ஆம் & 4ஆம் வகுப்பு மாணவர்கள், உயர்நிலைப்பள்ளி 1ஆம் & 2ஆம் வகுப்பு மாணவர்கள் தமிழ் மொழிப் போட்டிகளில் பங்கு பெற்றார்கள்.

நவீன சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரை நினைவு கூர்ந்து நன்றி தெரிவிக்கும் வகையில் "நம் தேசத் தந்தை லீ குவான் யூ" என்ற தலைப்பில் "தமிழ் பேச்சுப் போட்டி" பாலர் பள்ளியில் கே2 வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. அதில் சிங்கப்பூரில் உள்ள பாலர் பள்ளிகளில் இருந்து 37 மாணவர்கள் கலந்து கொண்டு மிகவும் சிறப்பாக மழலை மொழியில் நம் தேசத்தின் தந்தை திரு லீ குவான் யூ-வை பற்றி சுமார் 2 நிமிடங்கள் மிகச் சிறப்பாக பேசினார்கள். ஆசிரியர்கள் திருமதி லீலாராணி, திருமதி சக்திதேவி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு போட்டியை நடத்தினார்கள். 

தொடக்கப் பள்ளி 3 மற்றும் 4 ஆம் வகுப்பு மாணவர் களுக்கு "தமிழ் பாட்டுப் போட்டி" நடத்தப்பட்டது, இப்போட்டியில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு ஏற்கெனவே கொடுக்கப்பட்ட நல்ல கருத்துள்ள 15 தமிழ் பாடல்களில் இருந்து ஒரு பாடலை தேர்ந்தெடுத்து சிறப்பாக ஒவ்வொரு மாணவர்களும் பாடினார்கள். சிங்கப்பூரில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் இருந்து 27 மாணவர்கள் கலந்து கொண்டார்கள். ஆசிரியர்கள் ஸ்வப்னா ஆனந்த், சந்தியாசிவா ஆகியோர் நடுவர் களாக செயல்பட்டு போட்டியை நடத்தினார்கள்

உயர்நிலைப்பள்ளி 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாண வர்களுக்கு "தமிழ் வாசிப்பு போட்டி" நடத்தப்பட்டது. இப்போட்டியில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு ஏற்கெனவே கொடுக்கப்பட்ட நல்ல கருத்துள்ள 20 பெரியார் பொன்மொழிகளை" சிறப்பாக வாசித்தார்கள். மேலும் மாணவர்கள் அவர்கள் வாசித்த 20 பெரியார் பொன்மொழிகளில் இருந்து நடுவர் கேட்கும் இரு பொன்மொழிகளுக்கு சிறப்பான முறையில் விளக்கம் அளித்தார்கள். சிங்கப்பூரில் உள்ள உயர்நிலைப் பள்ளி களில் இருந்து 26 மாணவர்கள் கலந்து கொண்டார்கள். ஆசிரியர்கள் முனைவர் இரத்தின வெங்கடேசன், சுகந்தி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு போட் டியை நடத்தினார்கள். 

முனைவர் இரத்தின வெங்கடேசன் போட்டிகளின் முடிவை அறிவிக்கும் முன்பு மாணவர் களின் வாசிப்பு திறன் மற்றும் அவர்கள் வாக்கியத்தின் பொருளை புரிந்துக்கொள்ளும் வகையில் பெரியார் பொன்மொழி களை விளக்கிக் கூறினார்.

ஒவ்வொரு போட்டிகளிலும் முதல் 5 வெற்றியா ளர்களை நடுவர்கள் தேர்ந்தெடுத்து அறிவித்தார்கள். வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வருகிற நவம்பர் மாதம் பெரியார் சமூக சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற உள்ள பெரியார் விழாவில் பரிசுகள் வழங்கப்படும். 

இப்போட்டிகளில் சிங்கப்பூரில் உள்ள 63 பள்ளி களிலிருந்து 90 மாணவர்கள் கலந்து கொண்டார்கள். போட்டிகளில் கலந்துகொண்ட அனைத்து மாணவர் களுக்கும் பங்குபெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கப் பட்டது. சான்றிதழ்களை பெரியார் சமூக சேவை மன்றத்தின் மதியுரைஞர் ஓய்வுபெற்ற மூத்த விரிவுரை யாளர்ச.ரத்தினக்குமார் மற்றும் மன்றத்தின் தலைவர்க.பூபாலன் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்ற உறுப்பினர்கள் மாதவி, லீலாராணி, சுகந்தி, கவிதா மாறன், மாறன், பழனி, ராஜராஜன், ராமன், நரசிம்மன் நரேஷ், அதியமான், முகம்மது ஆரிஃப், இளையர்கள் கவின், வானதி வளவன், இனிய நிலா, குந்தவி மற்றும் தன்னார்வலர்களாக கல்லுரி மாணவர் பிரவின், பாலிடெக்னிக் மாணவிகள் திருநாவுக்கரசு ஹரிணி, ஜெய்கணேஷ் சுபிக்ஷா, சரவணன் பிரதீபா உள்பட பலர் கலந்துக்கொண்டார்கள்.

மன்றத்தின் செயலாளர்தமிழ்ச்செல்வி ஏற்பாட்டு குழுவினர்களை சிறப்பாக ஒருங்கிணைத்து சரியான திட்டமிடலுடன் போட்டிகளை சிறப்பாக நடத்தினார்.

பிள்ளைகளுடன் அவர்களின் பெற்றோர்களும் திரளாக இந்நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.

இப்போட்டிகளுக்கு ஆதரவளித்த Shiiner's Facilities, Jupiter Optics, AmPm Property consultants, Tamil Cube and Nandhana's restaurant  ஆகியோர்களுக்கு மன்றத்தின் சார்பாக நன்றி கூறப்பட்டது.

புதிய உறுப்பினர்களின் வருகையும் பங்களிப்பும் மற்றும் தன்னார்வலர்களாக புதிய இளையர்கள் 5 பேர்கள் கலந்துகொண்டது நிகழ்ச்சியின் சிறப்புகளில் ஒன்று. அவர்களை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முயற்சி எடுத்த நரசிம்மன் மற்றும் இளையர் இனிய நிலா ஆகியோருக்கு நன்றி கூறப்பட்டது. கூட்டு முயற் சிக்கு கிடைத்த மகிழ்வாக இந்நிகழ்ச்சி அமைந்தது.

செய்தி: க. பூபாலன்


No comments:

Post a Comment